பஞ்சாட்சர தத்துவம்

திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....
நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்
எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!
இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்றுசிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினைமாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

No comments:

Post a Comment