ரிசபம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,

இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

No comments:

Post a Comment