ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை  மையமாக   வைத்துக்  கொண்டு              அனைத்துக்   கிரங்களும்   சுற்றுகிறது.   சூரியன்   தலைமை    தாங்கும்          தகுதியைத்   தருகிறார்.  ஆண்மையைத்     தருகிறார்.  நிர்வாகத்    திறமை   அளிக்கிறார்.   சூரிய  ஒளி  அனைவருக்கும்   பாகுபாடு    இன்றி   அளிப்பது   போல்   எல்லோரையும்   சமமாக   நினைப்பவர்,    தயாள   தன்மை   உடையவர்.      பேதம்   கிடையாது,   சாதி  பாகுபாடு   கிடையாது.   எல்லோரையும்   சரி சமமாக     நடத்துவர்.     இரகசியம்   கிடையாது.   வெளிப்படையாக   பேசுவர்.   வள்ளல்  தன்மை  உடையவர்.   இல்லை  என்று   சொல்லாத   தன்மை   பேரும்  புகழும்  உடையவர்.

சூரியனின்    கதிர்களால்   தழுவாத   உயிர்   இனங்கள்    இல்லை.   சூரியன்   ஒளிக்கு   அதிபதி,    சூரியனிடமிருந்து   வெளிப்படும்  கிரணங்களும்,  குருவிடமிருந்து   வெளிப்படும்  மீத்தேன் என்ற   ஒளியும்  கலந்து   உலகில்   ஜீவ   ராசிகளின்   உற்பத்திக்குக்    காரணமாகின்றன.
சூரிய  ஒளியின்றி  எந்த  கரு [ உயிர்] தோன்ற   முடியாது,    உயிர்   வாழ   முடியாது.   அதனால்  சூரியனை  பித்ரு காரகன் என்று   பெயர் பெறுகிறார்.

சூரியன்   தனது   ஈர்ப்பு   சக்தியால்  மற்ற  கிரகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்  கொள்ளாமல்   காப்பாற்றுகிறது.   சூரியன்   உஷ்ணத்திற்கு   அதிபதி,   உஷ்ணம்   இல்லையேல்   உயிர்   தத்துவம்  இல்லை.   சூரியன்   பிராணனைக்   கொடுக்கக்    கூடியவன்.     அதனால் தான்  சூரியன்  ஆத்மாகரகன்  என்று  அழைக்கப்படுகிறார்.

சூரியனின்   உஷ்ண    கதிர்களால்   தழுவாத    எந்த   உயிர்  இனங்களும் இல்லை.    வெளிச்சம்   [சூரியன்]   இருந்தால்தான்   கண்களால்   பார்க்க   முடியும் . ஆகவே   சூரியன்   வலது  கண்.    மனித  உடலை    தாங்கி    பிடிப்பது  எலும்பு,   சூரியன்   எலும்புக்கு  அதிபதி   சூரியனின்  ஆதிக்கம்  உடையவருக்கு    முகஸ்துதி   பிடிக்காது.  எளிமையான    தோற்றம்  உடையவ்ர்.   நம்பிக்கைக்குரியவர்.    வாக்கு   தவறாதவர்.     தந்தை    மகனுக்கு   உதவி   செய்வது   போல்   வாக்கு   கொடுத்தவருக்கு   உதவி   செய்பவர்.

அரசன்   [சூரியன்]    தன்  தளபதியான    செவ்வாயின்   வீட்டில்   உச்சம்   பெறுகிறார்.   சூரியன்   ஒருவர்     ஜெனன   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால்,     அந்த    ஜாதகர்  எவ்வளவு      பாரம்பரிய   செல்வம்,   செல்வாக்கு,  அதிகார   பலம்   பெற்று    இருந்தாலும்   கால போக்கில்   குறைந்து   விடும்.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகர்  ஒரு  நிறுவனத்தில்   அல்லது  ஒரு  இயக்கத்தில்   தலைவராக இருப்பார்.  மேலும்  அவருக்கு  பேரும்  புகழும்  கிட்டும்.  ஜாதகருக்கு  ஆன்மீக   ஞானம்   உண்டாகும்.
  
ஜாதகர்   தனி   சிறப்புடையவராக   திகழ்வார்.   ஜாதகரிடம்   துணிச்சல்  அதிகமாக  இருக்கும்   கண்டிப்புடன்    நடந்துக்  கொள்வார்.   அடித்துப்   பேசுவார்.   ஏராளமான   செல்வம்   இருக்கும்.   சுகமான   பிராயணம்,   இராஜ  வாழ்வு  அமையும்.  வியாபார    வெற்றி,  வேலையில்   அதிக   ஈடுபாடு,   மலைப்பகுதி   மற்றும்   காட்டுப்பகுதியில்    சுற்ற   நேரிடும். 
  
சூரியன்   உஷ்ணமயமானவர்.   ஆகவே       ஜாதகருக்கு     உஷ்ணாதிக்கத்தால்   பல  உபாதைகள்   வரும்.   ஆகவே   இதில்   எச்சரிக்கையாக   இருப்பது   நல்லது.   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.      ஒரு  ஆணின்    ஜெனன   ஜாதகத்தில்    சூரியன்   பலம்    பெற்று   இருந்தால்  அந்த   ஜாதருக்கு        ஆண்மை   ஆற்றலில்    அவர்  சிறந்து   விளங்குவார். ஒரு  பெண்   ஜாதகத்தில்   சூரியன்   பலம்  பெற்றிருந்தால்      அந்த   ஜாதகியிடம்   ஆகர்ஷன   சக்தி    ஓங்கி  இருக்கும்.   அவள்   சிறந்த   கற்பு டையவளாகத்   திகழ்வாள்.

மேசத்தில்   10  பாகை   முதல் 30   பாகைக்குள்  சூரியன்  இருந்தால்  முதல்   10  பாகைக்குள்    அளிக்கக்   கூடிய    அளவுக்கு    நற்பலன்கள்    அளிக்கமாட்டார்.

சூரியன்   முக்குணம்  உடையவர்.  அதாவது  பிரம்மா,  விஷ்ணு,  மகேஸ்வரன்  ஆவார்.   சூரியனின்    ஆட்சி  வீடான   சிம்மத்திற்கு   7வது  ராசியான     கும்பம்.  இந்த   ராசி   சூரியனின்    மனைவியான  சாயா  தேவி  வீடு.  இந்த  ராசியில்   தான்    சூரியனின்   மகன்  சனி  பிறந்தார்.    [இந்த   ராசியின்  சின்னம்  குடமாகும்.  குட்த்தின்   உள்ளே    நிழல்  [சாயா தேவி]   உள்ளது.  பகல்  பொழுது   சூரிய  ஓளி   குடத்தில் விழுவதால்     சாயா  தேவி   வலு  பெற்றதால்   சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த   ராசியில்   பலம்  அதிகம்   சனிக்கு   மூலதிரிகோன   ராசியாகும்]

அரசுக்குரிய    கிரகமான   சூரியன்   எப்போதும்   தன்னுடன்   அறிவுக்காரன்   புதனையும்,   செல்வத்திற்கு   காரகனான  சுக்ரனை  அருகில்  வைத்திருக்கிறார்.   மாசி,  பங்குனி,   சித்திரை,  வைகாசி,   ஆகிய  மாதங்களில்    சூரியனுடன்   புதன்  கூடி  இருப்பார். ஆனி,  ஆடி,  ஆவணி,  பூராட்டாசி  ஆகிய    நான்கு   மாதங்களில்    சூரியனுக்கு    முன்  ராசியில்    புதன்   செல்வார்.  ஐப்பசி,  மார்கழி,  கார்த்திகை,  தை  ஆகிய   நான்கு   மாதங்களில் சூரியனுக்கு பின்   செல்வார்.

சூரியன்   ஒரு  நாளில்  செல்லும்   தூரம்  58  கலை, 8 விகலை  ஆகும்.  சூரியன்  ஒரு  நட்சதிர  பாகத்தைக்   கடக்கும்   காலம்  3  நாள்   22  நாளிகை   55  விநாடி   ஆகும்.  புதிதாக    பிரவேசித்த   ராசியில்   சூரியன்  பூரண   பலன்  தர  எடுத்துக்  கொள்ளும்    கால  அளவு     5  நாட்கள்.

சூரியனைக்  கொண்டு  ஒருவரின்   தந்தையைப்  பற்றியும்,   ஜாதருடைய     செயல்   திறன்   தொழில்  அல்லது   வியாபாரம்   அல்லது   உத்தியோகம்   இவைகளை  அறிய  முடிகிறது.  அரசு   வழியில் நல்ல  பொருளீட்டும்  யோகமும்.  தலைமை   பதவி   வகிக்கும்   தகுதி   அமையும்.   நல்ல  நோக்கு  உடையவர்.   ஆழந்த   கருத்துடையவராகவும்,  எவருக்கும்  அடங்கிப்  போகும்   இயல்பு இல்லாதவராகவும்   இருப்பார்கள். 

சூரியன்  அக்கினிக்குரியவர்,   சூரியனின்   நிறம்  இளம்     சிவப்பு  அதாவது    ஆரஞ்சு    நிறம்,  கிழக்கு   திசைக்குரியவர்.  பகல்   நேரத்தை  ஆள்பவர்,  கோதுமைப்  பிரியர்.  எருக்கு   சமித்து  மூலம்   திருப்பதிப்படுபவர்,   செந்தாமரையை  மலர  வைப்பவர்,     மாணிக்க    கல்லுக்குரியவர்,  செம்பு   உலோகத்தைப்  பிரதிப்பலிப்பவர்.   செம்பட்டு  உடையால்  அலங்கரிக்  கப்படுகிறார்.  சிவப்பு   நீலப்  பொருட்களால்  நலம்   அளிப்பவர்.  சத்தியர்,  வீர   புருஷர்,   ஞாயிற்றுக்  கிழமைக்குரியவர். 
   
இத்தனைக்கும்   சிறப்பு      முத்திரையாக  ருத்ரனை  அதிதேவதையாக்  கொண்டவர்.   சூரியனின்  அனுகிரகத்தைப்  பெற   வேண்டுமானால்   அவருக்குரிய    மேலே   குறிப்பிட்ட   பொருட்களைக்   கொண்டு     சிரத்தையுடனும்,  முழு   ஈடுபாடும்,   நம்பிக்கையும்     கொண்டு  ஆராதிக்க  வேண்டும்.   மேலும்   அதிதேவதையான   ருத்ரனையும்    வழிபட   வேண்டும்.  இவ்வாறு    செய்தால்   சூரிய  பலனை  பெறலாம்.  சூரியனுடைய    அதிகாரத்துக்குட்பட்டவை  அனைத்திலும்  அனுகூலம்  கிடைக்கும்.

No comments:

Post a Comment