Showing posts with label astrology. Show all posts
Showing posts with label astrology. Show all posts

மேசம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

கிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்களில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

லட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆடு.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.

இந்த ராசிக்    குறியவர்  சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும்.  சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.

வேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.

பரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் சமாதானம்  ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும்  கடுமையாக  நடந்து கொள்வர் போலவும்  காணப்படுவர்.  ஆனால் உண்மையில்  இவர்கள்  இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும்  கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.


பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.

நடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திருந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.

வினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு  வெற்றி காண்பார்.  இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி      வெளிப்படையாக      இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார்.  இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார்.  காரணம்  தன்னுடைய கருத்துக்களை               அவர்கள்          ஏற்றுக்கொள்ளாமைதான்.

சிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போது எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.

பெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.


இளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்பெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.


மேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ அமையக்கூடும்.

இந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.

 பிறந்த நட்சத்திரம் வரும்  நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,
திருப்பரங்குன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....

மேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.
வசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..

அதிர்ஷ்ட எண்கள்;1,3,9
பகை எண்கள் ;8,2
அதிர்ஷ்ட நிறம்;மஞ்சள்,ஆரஞ்ச்,ரோஸ்,

ரிசபம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,

இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

மிதுனம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்..அவர் பெரும்பாலும் மிதுன ராசியில் பிறப்பதுண்டு...ஆயுதம் இல்லாத நிராயத பானியாக இருந்தால் தன் சாமர்த்தியத்தால் ஜெயிப்பவர் மிதுன ராசிக்காரர்...ராசியின் சின்னம்..இரட்டைக்குழந்தைகள் படம் இருக்கும்...பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது இந்த ராசியினருக்குத்தான்...

இவர்கள் ஏதேனும் ஒரு கலைத்துறையில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு ஒரு திறமை இவர்களிடம் இருக்கும்.கண் பார்வையில் அடுத்தவர் மனதில் இருப்பதை படிப்பதில் மன்னன்..காரணம் ராசி அதிபதி புதன்..நல்ல நினைவாற்றலையும் நல்ல கிண்டல்,கேலி செய்வதிலும் வல்லவர்..பணம் சம்பாதிப்பதில்,பணத்தை கறப்பதில் குறியாக இருப்பார் இதனால் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்!!

இந்தராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசி. இந்தராசி உபயராசி,காற்றுராசி,ஆண்ராசி,சாத்வீகமானராசி,விவேகமானராசி,ஆதிக்கமானராசி,வெறுமையான ராசி,சத்தியமானராசி, வறண்டராசி,சீற்றமுள்ளராசி,சினம்கொண்டராசி,மனித தன்மைராசி,மனமாற்றமுள்ள ராசி,குரலோசை ராசி,குருட்டுத்தனமானராசி, இரட்டைராசி,குறுகியராசி,பறப்பனராசி.
இராசியின் சின்னம் ஆணும் பெண்ணும் ஆணின் கையில்வீணை வைத்துக் கொண்டும்பெண் நடனமாடுவது போலும் இருப்பதாக்க் குறிப்பிடுவர்


இந்தராசிக்காரார் உயரமாகவும்,நீண்டமூக்கும்,நீண்ட புஜங்களையும் கைவிரல்கள்அமைந்திருக்கும்.சுருட்டைமுடி,உருண்டமுகம்,உதடுகள்ஒரளவுக்குகறுத்திருக்கும்,மெல்லியசரீரம்,கறுப்புநிறகண்களும்,பார்வையில் சுறுசுறுப்புத் தெரியும்.மற்றவர்களையும் சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுவார்.நிமிர்ந்த நோக்கு இயல்பாக  உடையவர்.பித்தசரீரமுடையவர்.

வீட்டை அழகாக வைத்திருப்பார்,சுத்தமாகஇருப்பார்,கைவேலைப்பாடு திறமை, நுண்கலைத்திறமை உள்ளவர்.இசையில் ஈடுபாடு இருக்கும்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்,அவர்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதில் வல்லவர்கள்,ஒருவரை எடைப்போடுவதில் வல்லவர்.அடுத்தவரை பற்றி அறிந்ததை விமர்சனம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வார்.

பிறரை அடக்கி ஆளுவதில் வல்லமை பெற்றவர்கள்.தீர்க்கமான சிந்தனை உடையவர். வைராக்கிய நோன்புடையவர்.மெளனமாக இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்ளக்கூடியவர்.கோபம் வரும் போது தன் உள்ளத்தில் தோன்றியதை உடனே வெளிப்படுத்துவார்கள்.

படிப்பில் ஆர்வம், படித்ததை கிரகித்துக்கொள்ளும் சக்தி உண்டு,கல்வியாளர் கணிதம்,விஞ்ஞானம்,சட்டம்போன்ற கல்வித்துறைகளில் எல்லாவற்றிலும் ஈடுபட்டு பிரகாசிக்கக்கூடியவர்.

நல்ல பேச்சாளி,திறமையாக வாதாடக்கூடியவர். நகைச்சுவை ரசனை உடையவர்.மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார். நகை சுவையாகவும்,நயமாகவும்,யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவார்,வாக்குத்திறமை உடையவர்.

இருப்பொருள்படப்பேசுவார்.பிறர் ரசிக்கும் விதத்தில்பேசுவதால் இவர்களை சுற்றி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்.அரை குறையாக கேட்ட செய்திகளைக் கூட கண்,காது, மூக்கு வைத்து பெரிது படுத்தி பேசுவதில் சாமர்த்தியசாலி,உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.கல்வி மான் மதியூகி கூர்மதியாளார். 

அயலர் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்.சூதாட்டங்களில் திறமையுள்ளவர். இதன் மூலம் சம்பாதிப்பார்.ஓட்டாண்டியாகவும் செய்வார்.நட்பு விரும்பி . தைரியமில்லாதவர்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிறரை ஏமாற்றுவர்களாகவும்,வஞ்சகராகவும்,மாறிவிடவும் கூடும். ஆனால் அவரை திருத்துவது என்பது சுலபமான காரியமே.இப்படிதான் வாழவேண்டும் என்ற நியதியில்லாமல் எப்படியும்வாழலாம் எதையும் செய்யலாம் எந்த வழியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்.

இவர் நடிப்பு,நடனம்போன்ற கலைத்துறைகளில்மிகவும் கெட்டிக்காராகளாக விளங்குவார். மற்றவர்களைப் போல பேசி நடித்துக்காட்டுவதிலே அபார திறமைசாலி.குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் இவர்கலுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது..காரணம் ஆரம்பத்தில் ஜோராக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் இவர் காலப்போக்கில் மனம் மாறிவிடுவதுதான்...இவர் அடிக்கடி மனம் மாறுபவர் என்பதால்,மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி உண்டாகும்.எனக்கும் உனக்கும் ஒத்தே வராது என புலம்புவார்..

ஆடம்பரமாக வாழவேண்டும் எல்லாசுகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றஎண்ணம் இயற்கைலேயே மேலோங்கிருக்கும்.வாகன யோகம் முதல் வசதியான கட்டிடத்தில் வாழ்க்கை நடத்துவது வரையில் இவர்களது கனவு விரிந்திருக்கும்.இந்த கனவுகள் வெகு சீக்கரத்தில் நனவாகி இன்பத்தை அனுபவிக்கலாம்.

இயற்கையிலேயே எதையும் ஆராய்ந்து அறியும் நோக்கம் உண்டு.புத்திக்கூர்மை மிக்கவர்களாக் இருப்பார்கள். தோற்றத்திற்கு ஏமாளியைப் போல இருந்தாலும் இவர்களை யாரும் ஏமாற்றமுடியாது. இவர்கள் விஷ்ணு வழிபாட்டையும்,அனுமன் வழிப்பாட்டையும்,மேற் கொண்டால் துயரங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்;5,6
அதிர்ஷ்ட நிறம்;பச்சை
பகை ராசிகள்;விருச்சிகம்,மகரம்

கடகம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

கடகம் ராசிக்கு சின்னம் நண்டு..நண்டு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது..அதைப்போலவே இவர்கள் எங்கு போனாலும் பிழைத்துக்கொள்வார்கள்.நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.அதைப்போலவே இவர்கள் கொஞ்சம் சந்தோசமாக இருந்தால் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க சென்று விடுவர்.பலருடன் கூடி இருப்பதையே விரும்புவர்.எப்போதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கனும்.வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பர்...அதே போல அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் .பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பர்.

ஒரு கஷ்டம் நீங்கதான் காப்பாத்தனும் என சொன்னா,கடன் வாங்கியாவது உதவி செய்வர்..இதனால் பலர் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டதுண்டு..கடன் வாங்குனவன் ஓடிட்டான் நான் கட்டிட்டு இருக்கேன் என்பார்..மக்கள் தொண்டே உயிர் மூச்சு...மனுசனா பொறந்தா பத்து பேருக்கு நல்லது செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்...

ராசிகளில் மிக அதிக மனபலமும் ,வைராக்கியமும்,வசியம் கொண்டவர்களும்,இவர்கள்தான்.. மகான்களும்,பெரிய பெரிய அரசியல் தலைவர்களும் பிறந்த ராசி கடகம் தான்...கடக ராசிக்காரங்க உங்க நண்பரா இருந்தா நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்...அவ்வளவு நம்பிக்கையானவர்கள்..

 கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். 

 கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு

இந்த ராசி கால புருஷனுக்கு நான்காவது ராசி.பெண்ராசி,சரராசி,ஜலராசி, மெளனமான ராசி,விவேகமான ராசி,பண்பான ராசி,ஆதிக்கமானராசி,வேகமான ராசி,உழைப்புத்தனமான ராசி,குறுகியராசி,ஆறுகால் ராசி,பலகால்ராசி,ஊர்வனராசி ,உயரமானராசி.

இந்த ராசி மார்பைக் குறிக்கும் ராசியாகும்.இந்த ராசிக்கரார் அதிக உயரமாக இருக்கமாட்டார்.சாரசரி உயரமும்,உருண்டை முகமும்,சற்று அமுக்கினாற் போன்ற மூக்கும் இரட்டைத்தாடையும் உடையவராக இருப்பார்.கனமான கழுத்தும், பரந்த மார்பும்,சிவந்த நிறமுடையவர்.வளைந்து நடக்கும் இயல்பும்,வேமாக நடப்பார். நடையிலும் சஞ்சராத்திலும் விருப்பம் உடையவர். சிறிய நோய்க்கும் பெரியதாக கவலைப்படுவார்கள். சுவாசத் தொல்லைகளும்,மார்பு சம்ப்ந்தப்பட்ட நோய்களும்,வாயு தொல்லைகளும் ஜீரண தொல்லைகளும் திடீர் திடீரென இவர்களைத் தாக்கும்.

மிகவும் பலசாலி,தைரியசாலி,அறிவாளி,புத்திக்கூர்மையானவர்.கலைகளில் ஆர்வம்.நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுவார்.[நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக] நண்பர்கள் அதிகமாக இருக்கும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும்.குடும்ப பாசம் உடையவர்.குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர்.

இரவில் பலம் உள்ளவர்.சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.அதிக சிந்தனை படைத்தவர்,குடும்பவாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர்.பதட்டமானவர்,சந்தேகப்பிராணி,தாய்மை உணர்வு உடையவர்,தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர்.

நாணயமுடையவர், நன்றாக பேசக்கூடியவர்,நீதி நேர்மையை விரும்புவர். வியாபாரம் அல்லதுபொருட்களின் உற்பத்தியில் அதிகமான ஈடுபாடு உடையவர்.கவிஞர்,கலைஞர் எழுத்தாளர்களாக வாழ ஆசைப்படுவார்,அரசியல் வாதியாகவும் புகழ் அடையமுடியும். இவர்களுக்கு பல வீடுகள் இருக்கும்.

இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.மாற்று இனத்தவரின் கூட்டு முயற்சியால் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தி போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.சுறுசுறுப்பு மிகுந்தவர்ந்களாகஇருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர்.முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர்.விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காதகுணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.

உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும்  சகஜமாகப்பழகுவர்.தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல  தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர்.எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடுபேசும் ஆற்றலால் நாநிலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.

பெரியகுடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்.குடும்ப தலைவராக இவர்கள் பொறுப்பேற்கும் பொழுது எண்ணற்ற இடையூறுகளும் எதிர்ப்புகளும் வந்துசேரலாம்.முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம்.

அரசியலால் அனுகூலமும்,ஆதாயமும் பெற்றகுடும்பம் என்றே சொல்லலாம்.குடும்பத்தில் ஏற்றமும் இருக்கும்தீடிரென இறக்கமும் இருக்கும்.இன்பமும் இருக்கும்,தீடீரென துன்பமும் வந்து சேரும்.செலவு செய்வதில் தாராளம் காட்டுவர்.பணத்தை எந்த விதத்திலும் சம்பாதிக்கூடிய திறமை இவர்களுக்கு உண்டு.ஆடம்பரச்செலவு செய்வதில் சளைக்க மாட்டார்கள். நெருங்கிப் பழகுபவர்களிட்த்தில் பணத்தினாலேயே வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள இயலும்.
   
இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர்.

 கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

 அதிர்ஷ்டக்குறிப்புகள்;
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி,திருச்செந்தூர் முருகன்

சிம்மம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

இந்த ராசி நெருப்புராசி,மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று பிரகாசமாக விளங்குவார்கள் .ராசி அதிபதி சூரியன்...எல்லா உயிர்களுக்கும் ஜீவாத்மாவாக இருக்கும் சூரியனின் ராசிக்காரர்கள் என்பதால் உலகில் புதிய விசயங்களை கண்டறிவதிலும் ,பெரிய அரசியல் தலைவர்களாகவும்,பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் இந்த ராசிக்காரர்கள் தான் அதிகம் இருக்கும்..சிம்ம லக்னமோ சிம்ம ராசியோ நல்ல நிர்வாகதிறன் படைத்தவர் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சாமர்த்தியம் உடையவர்கள்.நீண்ட ஆயுள் உடையவர்கள்..

.தளபதி,ராணுவ வீரர்கள் ராசி..காவல்துறையினர் ராசி சிம்மம்தான்...உலகில் பெரும் சதனை செய்ய முடிந்த இவர்களால்,நிறைய மக்கள் கூட்டத்துக்கு அதிபதி ஆகும் அளவு திறம் படைத்த இவர்களால் தன் குடும்பத்தாரோடு ஒத்து போக முடிவதில்லை..அடிக்கடி ஈகோ மோதல் வந்துவிடும்..இவர்கள் நினைத்தது நடக்கவில்லையே என வருத்தப்படுவர்.

மகம் ஜகம் ஆளும் என்றாலும் குடும்ப வாழ்வில் அதிக சோதனைகளை சந்திப்பது இவர்கள்தான்...நிறைய தடைகளையும்,தோல்விகளையும் சந்தித்து பக்குவமாக இருப்பார்கள்...பூரம் அதிர்ஷ்டக்காரர்கள் என சொல்லப்பட்டாலும்...ஆரம்பத்தில் துன்ப்பட்டு,துயரப்பட்டுத்தான் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்..

பரந்த உருண்டையான முகம்,கண்ணின்விழிமஞ்சள் நிறமாகவும், மேவாய்க்கட்டையாகவும்,தலைமுடி மெல்லியதாகவும்,சிவந்தநிறமுடைவராகவும் இருப்பார்.துரிதபார்வை,எலும்புகள்பெரியவையாகவும்,    தோள்கள் அகன்றிருக்கும்.வாயுத்தொல்லைகளும்,வயிற்றுத்தொல்லைகளும் இவர்களுக்குவரும்.சருமவியாதியும் வரலாம்.

துணிவும்பிடிவாதமும்உறுதியானநிலைப்பாடு,முன்கோபம் உடையவர். வாழ்வில் ஆசையுடையவர்.மரியாதைகொடுப்பார்,உபசாரமும்செய்வார், முணுமுணுக்கும் சுபாவம் உடையவர்.சிடுசிடுக்கும் தன்மை,தியாக மனப்பான்மை,எதையும் உறுதியாக தீர்மானிப்பார்.இவர் எடுத்த முடிவை மற்றவர்களால் மாற்றமுடியாது.கொள்கைபிடிப்புடையவர்.கொடைக் குணம் உடையவர்.அஞ்சா நெஞ்சம் படைத்தவர்.பிறர் அஞ்சும்படியான குணத்தைக் கொண்டவர்கள். எப்படி தந்திரதைக் கையாண்டாலும் இவர்களை வெல்ல முடியாது.

நியாயம் தவறாதவர்கள்.இனம்,மதம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவிசெய்ய முன்வருவர்.மற்றவர்கள் கண்களுக்கு இவர்கள் அதிகார குணம் கொண்டவர்களைப்போல தோற்றமளித்தாலும் மனதின் அடித்தளத்தில் பாசத்தையும் பதுக்கி வைத்துருப்பார்கள்.

தனக்கு ஏதேனும் பாதிப்பு வருமானால் வெகுண்டு எழுவர்கள்.பின் விளைவுகளாப் பற்றி சிந்திக்காமல் பேசி தீர்ப்பார்கள்.அரசு மற்றும் பெரிய மனிதர்களின் தொடர்புக்ள் இவர்களுக்கு இருக்கும்.அவர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு வெகு எளிதில் தீர்வு காண்பர்கள்.

உயர்ந்த கொள்கைகளை பெற்ற இவர்கள்.வம்பு,வழக்குகளுக்கு இடையில் வாழ்க்கையை  நடத்துவார்கள். கையை ஓங்கி பேசுவதும் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று சொல்வதும் இவர்களைப் பொறுத்தவரை சகஜமானதாக இருக்கும்.மற்றவர்களுடைய சட்ட்திட்டங்களுக்கு உட்படாமல் வாழவேண்டும் என்று விருபுவார்கள்.


குடும்பத்தில் இவர் சிறியவராக இருந்தாலும்,பெரியவர் ஸ்தானத்தில் வைத்து மற்றவர்கள் இவரோடு பேசுவார்கள்.குடும்ப உறுப்பினர்களிடம் இவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல மாட்டார்கள்.மற்றவர்கள் தன் கருத்துக்கு ஒத்துவர வேண்டுமென்றே விரும்புவார்கள்.உடன் பிறந்தவர்களால் இவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைப்பது அரிது.ஆனால் இவர்களால் உடன் பிறந்தவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகம் கிடைக்கும்.மற்றவர்கள் பயன்பெறும் வகையில் வாழ்க்கை நடத்துவார்கள். 

அரசு பதவி,அரசியல் ஆதாயம்,அதிகார பலத்தோடு விளங்குவார்கள்,இவர்கள் குடும்பத்தை யாரும் பகைத்துக்கொள்ளமாட்டார்கள்.செலவு செய்ய அஞ்ச மாட்டார்கள்.தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட பணம் இவர்கள் கைக்கு வந்து சேரும்.புத்தி சாதுரியத்தைக்கொண்டு விரைவாக பெரிய தொகையைச் சேர்த்து விடுவார்கள்.கடன் வாங்க தயங்கமாட்டார்கள்.இவர்களுக்கு புத்தி கூர்மை அதிகம் உண்டு.எதையும் நுட்பமாக ஆராய்ந்து தெரிந்துகொள்வார்கள்.

பெண்களிடம் சுமுகமாக இருப்பதுகடினம்.புத்திரபாக்கியம் குறைவாக இருக்கும்.காடுமலைகளில் சுற்ற பிரியப்படுவார்.தாயிடம் பாசத்தோடு இருப்பார்.தாயிடம் பணிவோடுஇருப்பார்.ஆதிக்க்குணம் உடையவர்.ஆட்சியாளர் போல்நடந்துகொள்வார்.

 கர்வம் உடையவர்.அவசியமாகபேசி காரியத்தை மட்டும் செய்பவர்.தானாக சண்டைக்கு போகமாட்டார்.பெண்களாக இருந்தால் தியாக குணமுடையவர்,சச்சரவு செய்வதில் விருப்பம் உடையவர்.தலைமைதாங்கும் தகுதி உடையவர்.மாமிசபிரியர், ஆடை சேர்ப்பார்.மணவாழ்வுதிருப்தியாகவும் உடற்கட்டு அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.நியாயத்தையும்துணிந்துபேசுவார்.அது மட்டும் அல்ல துணிந்துசெயல்படுத்துவார். நன்றியுணர்வு உடையவர்.

இவர்கள் சட்டக்கல்வி,பொறியியல்துறை,மருத்துவத்துறைபோன்ற கல்வி கற்கலாம்.அரசுத்துறை மற்றும் சட்டத்துறை பிறர்தரும் மூலதனத்தைக்கொண்டு தொடங்கும் தொழிலில். டிரேடிங் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையம். தானியவியாபாரம்,எலக்ட்ரிக்கல் மற்றும் நூதன கருவிகள்.கணிப்பொறி துறை ஆகியவற்றில் ஈடுப்பட்டால் வெற்றிபெறலாம்.

இவர்கள்சிவன் வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்கும்.பிரதோச வழிபாடு மேற்க்கொள்ளலாம்..முருகன் வழிபாடும் உத்தமம்..

கன்னி ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

கன்னி ராசி..புதன் ராசி..அறிவுக்கு அதிபதி புதன்...நகைச்சுவை,குறும்பு,வியாபார தந்திரம் என சகலகலாவல்லவனாக இருப்பார்கள்..பத்து பேருக்கு நடுவில் இவர்கள் இருந்தால் எல்லோரையும் வசியம் செய்யும்படி இவர்கள் பேச்சும் நடவடிக்கையும் இருக்கும்..எதற்கும் கலங்காதவர்கள்..தந்திரசாலி..எல்லோரிடம் அன்பு காட்டுவதில் தாராளமானவர்கள்..

ராசி அதிபதி புதன் கெடாமல் இருந்தால் மிக யோகசாலிகள்தான்..இந்தராசி காலபுருஷனுக்கு ஆறாவதுராசி.உபயராசி,பெண்ராசி.நிலத்துவமானராசி,சந்தமானராசி,விவேகமானராசி,இறுக்கமானராசி,
பண்பானராசி,கடமையானராசி,உண்மையானராசி,வறண்டராசி,மலட்டுராசி,மனிததன்மைராசி,
நீண்டராசி,உறுதியானராசி,வீட்டில்வாழ்வனராசி, உயரமானராசி.

இந்தராசிக்காரர்கள் நாணம் கலந்த பார்வை உடைவர்கள்.நீண்ட,தொங்கிய புஜங்களைஉடையவர்கள்.கவர்ச்சியானமுகமும்.நல்லதோற்றமும்உடையவர்கள்.மென்மையானவர்கள்,
கண்கள் மற்றும் காதுகள் அழகாக அமைந்திருக்கும்.கூர்மையான மூக்கு உடையவர்.பற்கள் வரிசையாக இருக்கும்.மெதுவாகபேசுவார்கள்.இனிமையானபேச்சு உடையவர்.கனிந்த பார்வை உடையவர்கள்.இரத்தக்கொதிப்பு,கண் உபாதை,கை,கால்வழிகள் அடிக்கடி வரலாம்.

கலைகளில் குறிப்பாக இன்னிசை,சித்திரம்,நாட்டியம்போன்ற கலைகளில் ஆர்வம் உடைவர்கள்.தெய்வபக்தி உடையவர்கள்.அடிக்கடி தெய்வதிருஸ்தலங்களூக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.மத நிறுவனங்க ளோடும், ஸ்தாபங்களோடும் தொடர்பு உடையவர்.

சுபிட்சமாகவும்சந்தோஷமான வாழ்க்கை அமையும்.வீடு,நிலம்,வாகனம் உற்றார் உறவினர் சேர்க்கைஆகிய அனைத்தும் இவர்களுக்குக் கிட்டும். மற்றவர்களுடைய செல்வம் இவருக்கு கிடைக்க்கூடிய வாய்ப்பு இண்டு. சொந்த ஊரில் வாழமாட்டார்,மற்றவர்களுடைய இல்லத்தில் வாழ வாய்ப்பு உண்டு.ராசிக்குரிய திசையான வடக்கு திசையிலிருந்து வருவாய் பெறுவார்.

படிப்பில் ஆர்வம் உண்டாகும்.கல்வி நல்ல முறையில் அமையும்.படிப்பின் மூலம் தேர்ந்த அறிவைப் பெறுவார்கள்.அறிவைக்கொண்டு சிறப்பான சாதனைகள் செய்வார்.பொதுவாக விஷயங்களை நன்கு ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவார். ஒருவரை எடை போடுவதில் திறமைசாலி.புத்திசாலிமற்ரும் நல்ல ஞாபக சக்தி உடையவர்.சுறுசுறுப்பு உடையவர்.கலகலப்பானவர்.

பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்படுத்தமாட்டார்கள்.மதிநுட்பத்தால் மற்றவர்களின் கருத்துகளைப் புரிந்துகொள்வர்.இவரை எவராலும் ஏமாற்றமுடியாது.சூழ்நிலைக்கு தக்கவாறு இவர்கள் மனோநிலை மாற்றிக் கொண்டுசெயல்படுவர்.ஏதேனும் ஒரு லட்சியம் இவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும்.சாப்பாடு முதல் சகல துறைகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை அதிகம் இருக்கும்.

வசீகரத் தோற்றம்.எல்லோரிடத்திலும் எளிதில் பழகிவிடுவார்கள். ஆசைபடுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.தனக்கு ஒரு புதிய தகவல் தெரிந்ததென்றால் அதை உடனிருப்பவர்களிடம் சொல்லி அதன் பயனை விளக்குவதில் கெட்டிக்காரர்கள்.எதிரிகள் இல்லாத வாழ்க்கைதான் இனிமை தரும் என்பதை அறிந்தவர்கள்.

அடுத்தவர்களுக்கு கோபம் வராத முறையில் நடந்து கொள்வார்கள். நாசூக்கான வார்த்தைகளை மற்றவர்கள் மத்தியில் இருக்கும்போது சொல்லி அனைவர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

கல்வி,கணித அறிவு,ஜோதிட அறிவு,தர்க்க அறிவு இவைகளில் திறமை ஏற்படும்.பேச்சில் இனிமை தரும். நடு நிலை வகிகும் தன்மையும் உண்டாக்கும்.எழுத்தாற்றல்,வர்த்தகம்,அரசியல் இத்துறைகளில் ஆர்வம் உண்டாகும்.பலமொழி புலமை ஏற்படும்.

பெரியசொற்பொழிவாளராகவும், பிரச்சனைகளைதீர்த்துவைக்கும் மத்தியஸ்தரகவும் இருப்பார்.எதையும் யோசித்தே செய்வார்கள்.எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருப்பார்கள். நேரடியாக கல்வி கற்பதைவிட அஞ்சல் வழி கல்வி ப்யில்வதையே ஆர்வம் காட்டுவார்கள். பெரிய நூல்  வெளியிட்டளாரகவும் விளம்பர ஸ்தாபனத்தை நிர்வாகிப்பவராகவும் இருப்பார்கள்.

சுகபோகமான வாழ்க்கையையே விரும்புவார்.கஷ்டபடும்போது  கூட வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். மன அமைதிக்கு ஆலயத்தை நோக்கி அடிக்கடி செல்வார்கள்.அன்னையின் அன்பும் ஆதரவும் இவர்களுக்கு என்றும் இருக்கும். போதும் என்ற மனமே பொன்செய்யும் என்ற வார்த்தையை மதித்து நடப்பவர்.  சுயமாக வீடுகட்டிக்கொள்ளவேண்டும்,சிறியவீடாக இருந்தாலும் அதில் எல்லா வசதியும் இருக்கவேண்டும் என்ற நோக்கம் உடையவராக இருப்பார்.   
                                                                   
உடன் பிறந்தவர்கள் இவர்களுக்கு செய்யும் ஒத்துழைப்பைக்காட்டிலும் அவர்களுக்கு இவர் செய்யும் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும்.இருந்தாலும் உடன் பிறந்தவர்க  ளிடம் நன்றி இருக்காது.இவர்கள் பிறருக்கு கடன் கொடுக்க தயங்குவார்கள்.பிறர் கடன் கொடுக்க முன் வந்தாலும் கடன்                 வாங்க தயங்குவார்கள்.  
                                                    
புதன் வழிபாட்டையும் செய்தால் கல்வி சிறப்பாக அமையும்..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று சொக்கநாதரை வழிபடவும்..அழகர் கோயிலில் வழிபடலாம்..புதன் அம்சம் கிரிஷ்ணர் என்பதால் குருவாயூர் சென்று வருவது நல்ல பலன் தரும்..இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் சபரிமலை சென்று வருவார்கள்  அங்கு போய் வந்தால்தான் இவர்களுக்கு திருப்தியாக இருக்கும் ..

துலாம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

துலாம் ராசி சுக்கிரனின் ராசி..சுக்கிரன் சுகபோகத்துக்கு அதிபதி..எப்பவும் அழகா தன்னை காட்டிக்க விரும்புவாங்க..சுற்றுலா,சினிமா,போன்ற பொழுதுபோக்கு விசயங்களிலும் சுவையான உணவு உண்பதிலும்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருக்கும்.பார்க்கவும் ,அழகா இருப்பாங்க..பேச்சும் இனிமையா இருக்கும்.இதனால் நண்பர்கள் வட்டம் அதிகம்..இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா,நம்மிடம் பழக மாட்டாரா என ஏங்க வைப்பார்.நோட் திஸ் பாயிண்ட்..ராசி அதிபதி சுக்கிரன் ராகு கேதுவுடனோ,செவ்வாய்,சூரியனுடனோ,சனியுடனோ சேராமல் இருப்பது மேற்க்கண்ட பலன்களுக்கு வலிமை தரும்...

இவங்க ராசிக்கு தராசு சின்னம் எதுக்கு வெச்சிருக்காங்க...? யாரையும் பார்த்தவுடன் அவர்களை பற்றி எடை போடுவதில் வல்லவர்கள்..துல்லியமான கணிப்பு இருக்கும். நீ வேணா பாரு அவன் ஒருநாள் இப்படித்தான் செய்யப்போறான் என்பார்கள்.. அது சரியாக ஒத்து வரும்.

துலாம் ராசிக்காரரின் பெரிய பலவீனம் பெண்கள்....பெண்கள் துலாம் எனில் ஆண்கள்..துலாம் ராசியினரின் வீடுகளில் சந்தேக பிரச்சினை அடிக்கடி வருவது சகஜம்..பெண்கள் விசயத்தில் பணத்தை இறைப்பதிலும்,அழகை மேம்படுத்த பணத்தை இறைப்பதிலும் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை..சொந்த வீடு இல்லை என்றாலும் கார் வாங்க ஆசைப்படுவார்..வருமானம் இருக்கோ இல்லையோ தாய்லாந்து டூர் போயிட்டு வந்தா எப்படி இருக்கும்..கோவா போனா எவ்வளவு செலவாகும் என சீரியசா டிஸ்கசன்பண்ணிக்கிட்டு இருப்பார்..கோயில், குளம் போன்ற ஆன்மீக விசயங்கள் அலர்ஜி.

இந்த  ராசி  கால  புருஷனுக்கு  ஏழாவது ராசி, சர ராசி, ஆண் ராசி, காற்று ராசி, பாதிப்பலனளிக்கும் ராசி,  சாத்வீகமான ராசி,  பண்பான ராசி,  வேகமான ராசி, குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  நீண்ட ராசி,  உயிரற்ற ராசி, உயரமான ராசி, ஒற்றைப்படை ராசியாகும்.

நல்ல நிறம் இருக்கும். நீண்ட புஜங்கள், அகன்ற மார்பு, பரந்த முகம், வீரிய சக்தி, கறுத்த  சுருட்டை முடி,  அழகான  கண்கள்  அமையப்  பெற்றவர். இந்த ராசிக்காரர்கள் உயரமாக  இருப்பார்கள்.  ஒல்லியாகவும்  மூக்கு தீர்க்கமாகவும் எடுப்பாகவும்  இருக்கும். அழகான  தோற்றமுடையவர்.  கட்டுமஸ்தான  உடலமைப்பு  உடையவர்.  தைரியசாலி  பலசாலி  அச்சமற்றவர். நடையிலும்  பயணத்திலும்  பிரியம்  உடையவர்கள்.ஜீரணத்  தொல்லைகள்  சீதள  நோய்கள்,  மர்ம  வியாதிகள்,  வயிற்றுக் கோளாறு  வரலாம்.

இந்த  ராசிக்காரர்கள்  போகத்தில் அதிக  நாட்டம்  உடையவர்கள். காம  உணர்வு  அதிகமாக  இருக்கும். புத்திசாலித்தனம்  உடையவர்கள்.  சோம்பேறித்தனம்  இவருக்கும்  சிறிதும்  பிடிக்காது.  மத்தியஸ்தராக  இருந்து  நடுநிலை தவறாது  நியாயத்  தீர்ப்பு  வழங்குவதில்  மிகவும் திறமைசாலி.  தர்மசிந்தனையிடையவர்.  அற்ப  விஷயங்களுக்காக  மனதை மாற்றிக் கொள்ளமாட்டார்.  ஆனால் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை  மதித்து  நடந்து கொள்வார்.  எதையும்  நன்கு  சிந்தித்து ஒரு  முடிவுக்கு  வரக் கூடியவர்.

பொதுவாக  கலைத்திறன், தொழில்  திறன்  இவரிடம்  இருக்கும். பொருட்களை  வாங்குவதிலும்  விற்பதிலும்  திறமைசாலி. செல்வமும்  அந்தஸ்தும்  பெறுவார்.  வேதமறிந்து  விற்பன்னரையும்,  தெய்வ  நம்பிக்கையும்  உடையவர். குழந்தைகள் குறைவாக  இருக்கும்.  உறவினருக்கு  உபகாரம்  செய்யும்  குணம்  உடையவர்.  பராக்கிரம்ம்  நிறை  பெற்றவர்.  சான்றோர்களிடம்  அதிக  மரியாதை  உடையவர்.  காலம்  நேரம்  பார்த்து  கச்சிதமாக  காரியங்களை  முடிப்பதில்  வல்லவர்.

இந்த  ராசிக்காரர்கள் நெறி  தவறாமல்  வாழ ஆசை உடையவர்.  நேர்மை  இவர்களின்  குறிக்கோளாக  இருக்கும். இதில்  மாற்றம்  செய்ய  மாட்டார்  எற்றம்  இறக்கமான  வாழ்க்கை  அமையும்.  செல்வந்தர்களிடம்  செல்வந்தர்கள்  போல காட்டிக்  கொள்ள  அதிகமாக செல்வு  செய்வார்.  அதனால்  வாழ்க்கையில்  சரிவு  ஏற்படும்.  கொள்கை  பிடிப்பு  இருக்கும்.  பெருமையுடையவர்  செருக்கும்  இருக்கும்.  மதக்  கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள்.  இரக்க  குணம் உடையவர்.  எல்லோரிடமும் அன்பாக நடந்துக்  கொள்வார்.  நல்ல இயல்புகள்  இருக்கும்.  ஏழை  எளியவர்களுக்கு  உதவி  செய்ய  வேண்டுமென்ற  எண்ணம்  உடையவர்.  பொது  நலத்தில்  இருந்தாலும்  சுயநலம்  அதிகம்  உண்டு.

சமூகத்தில் நல்ல  அந்தஸ்து  பெற்று  இருப்பார்.  தனவந்தர் என்ற  அந்தஸ்து  பெறுவார்.  சொந்த  ஊரை  விட்டு  வேறு ஊரில்  வாசம்  செய்வார்.  வாழ்க்கையை  உன்னதமான  நிலைக்கு  உயர்த்தப்பாடுபடுவார்.  தனது  தேவைகளை  பூர்த்தி  செய்து கொள்வதிலும்,  தேவையவற்றவைகளை  விலக்கி கொள்வதிலும்  சமார்த்தியசாலி.  ஆழ்ந்த  கருத்துக்களை  யோசித்து  வெளியிடுவார்.  சதா சர்வ   காலமும் கற்பனை  உலகில் சஞ்சரிப்பார்.  பிறருக்கு  வாக்கு  கொடுத்து விட்டால்,  கொடுத்த  வாக்கை  காப்பாற்றும்  வரை  தூங்கமாட்டார்.  மற்றவர்கள்  பேச்சில்  குற்றம்  குறைகளை  அதிகம்  கண்டுப்பிடிப்பார்.  அதனால்  குடும்பத்தில்  கருத்து  வேறுபாடுகள்  தோன்றும்.  குடும்பத்தை  விட்டு  நீண்ட  தூரத்தில்  இருக்க  நினைப்பார்.

எல்லா  வசதிகளையும்  இளமையில்  பெற  வேண்டுமென்று  விரும்புவர்.  குடும்ப  பொறுப்பு  இவர்க்கு  அதிகமாக  இருக்கும். பெற்றொர்களை  கலந்தாலோசிக்காமல்  எந்தவொரு  காரியத்தையும்  செய்ய மாட்டார். வரவைக்காட்டிலும்  செலவு  கூடுதலாக  இருக்கும்.  இரக்க சிந்தனை  அதிகம்  இருக்கும்.  சகோதரர்கள்  வலிய  சென்று உதவி செய்வார்.  சமூக தொண்டிலும்  அரசியல்  சேவையிலும்  அதிக  ஆர்வம்  காட்டி  சிக்கிக்  கொள்வார். பெண்  வழியில்  பிரச்சனைகள்  அதிகம்  வரும்.  பிறரால்  சாதித்துக்  காட்ட முடியாததை  சாதித்துக்  காட்டுவர்.  எதிர் கால தேவையை  அறியும்  நுட்பம் அதிகம்  இருக்கும்.  வீடு,  நிலம், வாகனம்  போன்றவைகளை  வாங்குவார்.  பிறரை  எடை  போடுவதில்  வல்லவர்.

நல்ல  பேச்சாளார்,  கூறிய  அறிவு  உடன்  செயல்படுவார்,காரியத்தில்  கண்ணாக  இருப்பார்,  காரியவாதி,  எதற்கும்  கணக்கு  பார்ப்பவர்  நியாயதர்மத்திற்கு  கட்டுப்பட்டவர்  சட்ட  திட்டங்களுக்கு  உட்பட்டவர்.  பிறந்த குலத்தின்  மேல்  அபிமான  முடையவர்.  தன  விருத்தியுடையவர்.  சம்பத்துடையவர்.

இவர்கள்  மின்சாரத்றை,  பொறியல் துறை,  உணவுத்துறை,  வாகனத்துறை,  ஆடை,  ஆபரண  அலங்காரத் துறைகளில்  ஈடுபட்டால்   ஆதாயம்  கிடைக்கும்.
இவர்கள்  சாந்த  ரூப  அம்பிகை  வழிபாட்டில்  ஈடுபாடு கொள்ள  வேண்டும். 

சுவாதியில் பிறந்தவர் நரசிம்மர்...பிரதோச நாளில் நர்சைம்மரை வணங்கலாம்...சித்திரை செவ்வாய் நட்சத்திரம்  இந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபடலாம்..விசாகம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறப்பு.

தனுசு ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

தனுசு ராசி குருவின் ராசி..குருவுக்கு அதிக பலம் இந்த ராசியில்தான்...குருபகவானின் சொந்த வீட்டுக்குண்டான ராசிக்காரர்கள் என்றால் குருவின் அருள் பார்வை கிடைக்காமலா போகும்..? குருதான் ஊர்ல பெரிய மனுசன் அந்தஸ்து வாங்கி கொடுப்பவர்...நல்ல குழந்தைகளை தரக்கூடியவர்..கெளரவம் தருபவர்...ஊர்ல நடக்குற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்த தனுசு ராசிக்காரங்க தயவு வேணும்..ஏன்னா அவங்கதான் பிரதிபலன் பார்க்காம எதார்த்தமா உழைக்க கூடியவங்க...பணம் கொடுத்தா கூட என்னப்பா ..நான் என்ன அந்நியனா..? பணம் கொடுத்து அசிங்கப்படுத்துறியேப்பா என கோவித்து கொள்வார்கள்..இதனாலேயே இந்த ராசிக்காரர்களை பிறர் ஏமாற்றிவிடுவதுண்டு...கடன் வாங்கி ஏமாற்றுவதுண்டு....

சீக்கிரம் பணக்காரன் ஆகனும் எனும் ஆசை இவர்களுக்கு அதிகம் உண்டென்பதால் ஷேர்மார்க்கெட்,ஃபைனான்ஸ்,கந்து வட்டி,ரியல் எஸ்டேட் துறைகளில் இவர்களை அதிகம் பார்க்கலாம்..நிறைய நஷ்டம் ஆகிவிட்டு வீட்டுக்குள் இருக்க முடியாமல் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டும்,பிறருக்கு அட்வைஸ் செய்து கொண்டும் இருப்பதை காணலாம்..இவர் அறிவுரை கேட்டால் யாராக இருந்தாலும் முன்னேறிவிடலாம்..ஆனா இவர்களில் பெரும்பாலும்  அப்படியே இருக்கிறார்கள்..
எல்லோரையும் நன்கு கவனிப்பார்...குடும்ப வாழ்க்கை எப்படி எனில்...ஸ்..அதை ஏன் சார் கேட்குறீங்க..நமக்கு அப்படியே ஆப்போசிட்டா கொடுத்துட்டான் ஆண்டவன் என கையை மேலே காட்டுவார்கள்....புத்தி மாறிக்கிட்டே இருக்கும் ஓரிடத்தில் இவர்களால் இருக்க முடியாது..மனைவி தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கனும்...இல்லைன்னா எலியும் பூனையும்தான்..

இந்த  ராசி கால புருஷனுக்கு  ஒன்பதாவது  ராசி, நெருப்பு ராசி, ஆண் ராசி,  உபய ராசி,  பாதிப்பலனளிக்கும்,  சாத்வீகமான ராசி,  பாசமான ராசி, கடமையான ராசி,  ஆதிக்கமான ராசி,  உண்மையான ராசி,  சித்திக்கும் ராசி,  சீற்றமுள்ள ராசி,  சினம் கொண்ட ராசி, மனித தன்மை ராசி,  இரு  மடிப்புள்ள ராசி,  குறுகிய ராசி,  லட்சியமான ராசி,  உறுதியான ராசி,  பறப்பன ராசி,  உயரமான ராசி.
தொடையைக்  குறிக்கும்  ராசியாகும்.  இந்த  ராசியில்  பிறந்தவர்கள் நல்ல  உயரமும்  சற்று  பருமனான  உடலும்,  கூன்  முதுகும்,  அகன்ற நெற்றியும்,  பெரிய  பற்கள்  உடையவர்கள்.  இவர்களின்  கைகால்கள்  உடம்போடு  சம்பந்தம்  இல்லாது  போல் காட்சியளிக்கலாம்.  அழகிய   கண்கள்யுடையவர்கள்,  சிவந்த  முடியுடையவர்கள்,  எலும்பு,  நரம்பு  சம்பந்தப்பட்ட  வகையில்  சிறுசிறு  கோளாறுகள்  மூட்டுப் பிடிப்பு,  வாயுத்தொல்லை, ஜலதோஷம்,  மூல நோய்  போன்றவைகள்  ஏற்படலாம்.
மத நம்பிக்கையில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை  உடையவர்கள். மனத்தூய்மை யுடையவர்கள்.  கம்பீரமும்  பிரகாசமும்,  நளினமான  நடையுடையவர்கள்.  சுறுசுறுப்பு  மிக்கவர்,  உணவு  பானங்களில்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு   உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாடுடன்  பழக  கூடியவர்கள்.  மற்றவர்களுக்குக்  கெடுதல்  செய்ய  வேண்டிமென்று  கனவிலும்  விரும்ப  மாட்டார்கள்.  தெய்வ  பக்தியும்  தெய்வ  பயமும்  உடையவர்கள்.  எதையும்  எளிதில்  கிரகித்துக் கொள்ளும்  ஆற்றல்  உடையவர்.  முன்கோபக்காரர்,  அவசரக்காரர்,  கோபம்  தணிந்த பின்  உண்மையை  உணரும்  சுபாவம்  உண்டு.  வெளிப்படையாக  எதையும்  பேசக் கூடியவர்  என்பதால்  எந்த  இரகசயமும்  இவரிடம்  தக்காது.
தனக்கு  தெரிந்ததை  மற்றவர்களுக்கு  எடுத்து  சொல்லுவார்,  மற்றவர்களுக்கு  தெரிந்ததை  அறிந்து  கொள்ள  வேண்டும்  என்ற  எண்ணம்  உடையவர்.  இவர்கள்  அன்புக்கு  கட்டுப்பட்டவர்.  நீதி  கருத்துக்களைப்  போதிக்கும்  குணம்  ஆரம்பத்திலேயே  இருக்கும்.  இவர்  குருவை  நாடி  சென்று  அவர்  ஆலோசனைப்படி  செயல்படுவார்.  அதன்  மூலம்  வெற்றி  அடைவார்.   
பிறரைத் தட்டிக்  கொடுப்பதில்,  புகழ்ந்து  பெருமைப்படத்துவதில்  இவர்  திறமைசாலி.
இவர்கள்  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்களாக  இருப்பார்.  எளிமைக்கு  முக்கியத்துவம்  கொடுப்பார்.  தாய்  தந்தை  மீது  பாசம்  வைத்திருப்பார்.  சிறுவயது  முதல்  பணப்புழக்கம்  உடயவர்.  ஆனால்  கையில்   பணம்  நீண்ட  நாட்கள்  தங்காது.  பூர்வீக  சொத்துக்கள்  தங்குவது  அரிது.  பாதி  வயதிற்ககு  மேல்  பகட்டான  வாழ்க்கை  வாழ பிரியப்படுவர்.  பதவிகளும்   இவர்களுக்கு  வந்து  சேரும்.
உணவு பானங்கள்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு  உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாட்டுடன்   பழக்கூடியவர்கள்.  மற்றவர்களுக்கு  கெடுதல்  செய்ய  வேண்டுமென்று  கனவிலும்  விரும்பமாட்டார்கள்.  தெய்வ பக்தியும்  தெய்வ தெய்வ பயமும்  உடையவர்கள்.  பழைய  சடங்கு,  சம்பிரதயங்களில்  மிகுந்த  பற்று  வைத்திருப்பதை   வெளிக்காட்டி கொள்ள  மாட்டர்கள்.
தனது  சகோதரர்களில்  மூத்தவர்களிடம்  மிகவும்  பாசமுடையவர்.  இவரது  முன்னேற்றத்திற்கு  மூத்த சகோதரர்  வழி வகுத்துக்  கொடுப்பார்.  இளைய  சகோதரர்கள்  இவரை  எதிரியாக  பார்ப்பார்கள்.  புகழ்,  சுகம்  உடையவர்கள்  விரோதிகளை  வெல்லக்  கூடியவர்.  எதையும்   விரைவில்  கிரகித்துக்  கொள்ளக்  கூடியவர்.
அதிகமாக  உழைத்து  சம்பாதிப்பது  என்பது  பிடிக்காது.  குறைந்த   காலத்தில்  சுலபமான  முறையில்  அதிகம்  சாம்பாதிக்க  வேண்டும் என்ற  எண்ணம்  உடையவர்.  கடன்  வாங்க  நேரிடும்.  வாங்கிய  கடனுக்காக  வருமானத்தைப்  பெருக்கிக்  கொள்ள  முன் வருவர்.  உயர்  கல்வி  கற்பார்.  வெளி பிரதேசங்களில்  பிரயாணம்  செய்ய  விருப்பமுடையவர்.  செல்வத்தை   அனுபவிக்க   கூடியவர்.
இவர்கள் பிறருடைய  குற்றங்களை  எடுத்துக் காட்டி  குறை  சொல்லிக் கொண்டே  இருப்பர்.  அரசியல் ஈடுபாடு  அடிமனதில்  இருக்கும்.  ஆரம்பத்தில்  அடிப்படை  உறுப்பினராக  சேர்ந்து  அதன் பின்  அரசாளும்  யோகம்  வரை வந்து  சேரும்.
அறிவும்  ஆராய்ச்சியும்  மட்டுமே  இவர்களைக்  கவரக்  கூடிய  விஷயங்கள்.  தத்துவம்  விஞ்ஞானம்,  சாஸ்திர  ஆராய்ச்சி  இவற்றில்  ஈடுபட்டு  நிபுணத்துவம்  பெறுவார்கள்.  மிகவும்  சிந்தித்து  பேசுவார்கள்.  அனைவரிடமும்   மரியாதையாக  நடந்துக்  கொள்வார்.  மன ஒறுமைப்பாடு  உடையவர்,  உள்உணர்வு  உடையவராகவும்,  ஆன்மிக  நாட்டம்  உடையவராகவும்  இருப்பார்கள்.
இவர்கள்  தென்முகக்   கடவுள்  வழிபடலாம். நதிக்கரையோரம் இருக்கும் முருகனை வழிபடலாம்

மகரம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

தொழிலுக்கு அதிபதியான சனியின் ராசிக்காரர்கள்.கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள்..இவர்களின் பலவீனம், விரக்தி,சோம்பலுக்கும்,புதிதாக எதையும் முயற்சிக்காமல் விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருப்பவர்கள்..தாழ்வு மனப்பான்மையை,விரக்தியை கைவிட்டு இவர்கள் முயற்சித்தால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்...

சர ராசி என்பதால் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள்..அலைந்து திரிந்து காரியம் சாதிப்பவர்கள்...வண்டி வாகனங்களை அதிகம் பயன்படுத்துவர்.சனி ராசி என்பதால் அதிக சோதனைகளை சந்தித்து பக்குவப்பட்ட மனிதர்களாக அனுபவஸ்தர்களாக இருப்பர்...கடுமையாக உழைத்து குறைவான வருமானம் பெற்று சலிப்படைவர்..அதே சமயம் பெரிய பெரிய சாதனைகளை செய்து வரலாற்றில் இடம் பிடித்த மகரம் ராசியினரும் நிறைய உண்டு..உதாரணம் ரஜினிகாந்த்...நிறைய தொழில் அதிபர்களும் இந்த ராசியில் பிறந்தவர்களே..துணிந்து இறங்கினால் மலையையும் புரட்டக்கூடியவர் மகரம் ராசியினர்.


இந்த  ராசி  கால புருஷனுக்கு  பத்தாவது  ராசி,  பெண் ராசி,  நில ராசி,  சர ராசி,  பாதிபலனளிக்கும் ராசி,  சாந்தமான ராசி,  இறுக்கமான ராசி,  பண்பான ராசி,  உண்மையான ராசி,  வேகமான ராசி,  நாற்கால் ராசி,  குருட்டுத்தனமான ராசி,  உழைப்புத்தன்மையுள்ள  ராசி,  குறுகிய ராசி, நடப்பன  ராசி,  குள்ளமான ராசி.

நடுத்தரமான  நல்ல உயரம்,  சாய்ந்த  தோள்,  மெலிந்த கை  கால்கள்,  முட்டிகள்,  சதைப்பற்றற  கை  மெலிந்த  வசிகரமான  பார்வை  கொண்ட  முகம்,  குறைவான  கருத்த  மயிர்- கெட்ட  பற்கள்,  குனிந்த  கூன்  போன்ற  சுபாவம்,  பிரசித்தமான  மூக்கும்  உடையவர்கள்.  உஷ்ணம்  சம்பந்தமான  நோய்கள்,  வயிறு  மற்றும்  கால்களில்  வலித்தொல்லைகள்  வரலாம்.

சுய நலம்  இருக்கும்,  பிடிவாதம்,  பொறாமை,  இரக்கமான,  இரகசியமான வாயாடியான  விடாமுயற்சியுள்ள,  ஆடம்பரமான,  மனையாளுக்கின்பமான,  கவலையற்ற  சந்தோஷ  கரமான  குணங்கள்  உடையவர்கள்.  ஆரோக்கியக்  குறை,  ஏதாவது  இருந்து  கொண்டே  இருக்கும்.
எப்போதும்  ஆடம்பரமான  பேசும்  ஆர்பாட்ட  வீரராக  விளங்கிடுவர்.  எப்போதும்  சந்தேக  நோக்கு உடையாவர்களாகவும்,  கஞ்சன்,  எல்லாம்  கணக்காகவே  இருப்பார்.  தெளிவான  சிந்தனையும்  உடையவர்.  பகல்  பொழுதில்  பிறந்தவர்கள்  வலிமை  உடையவர்கள்.

கூர்மதி  மற்றும் மாறும்  மனநிலை,  சிறந்த அமைப்பாளர்,  எச்சிரிக்கை,  பதட்டம்  ஆசை  பிடிவாதம்  பாதுகாத்தல் காரியத்தை  துவக்கி விட்டால்  முடிக்காமல்  விட  மாட்டார் விட  முயற்சியுடையவர்,  காரியவாதி  என்று  சொல்லாம்.  வீட்டுக்குள்  புலி வெளியே  எலி  மற்றவர்களுடைய  குறைபாடுகளை  தமக்கு  சாதகமாகப்  பயன் படுத்திக் கொள்வதில்  வல்லவர்கள்.  பிடிவாத  குணத்திற்கு  சொந்தக்காரர். 
  பிறரை  உற்சாகப் படுத்துவதோடு,  தாமும்  உற்சாகமாக   இருப்பார்.  பிறர்  ஏதேனும்  ஒன்றைப்  பற்றி  சொல்லும்  போதோ  எனக்கு  இந்த  தகவல்  எப்போதோ  தெரியும்  என்று  பெருமையாகச் சொல்லுவர்.

திரிலோக  சஞ்சாரி.  அலைந்து  கொண்டே இருப்பார்,  காரியம்  சாதிக்கும்  வலிமை யுடையவர்.  எந்த  நிலையிலும்  தாழ்வடையாத  புத்தியும்  சமர்த்தியமும்  உடையவர்.  இவர்கள்  எந்த  சூழ்நிலைக்கும்  தங்களை  சரிப்படுத்திக்  கொள்ளவார்கள்.  வாழ்க்கையில்  முன்னேற  வேண்டும்  என்ற தீவிர  இலட்சியம்  உடையவர்கள்.  அதனால்  வசதி  குறைந்த  நேரத்தில்  கூட  இவர்களுக்கு  தரித்திர  புத்தி  ஏற்படாது. பல முறை போராடி  பிறகு  தான்  வெற்றியை  அடைய  முடியும்.
காரியத்திலேயே  கண்ணாக  இருப்பார்.  சதா  சர்வ  காலமும்  ஏதேனும் ஒரு  வேலையில்  ஈடுபடுவது  இவர்களது  இயற்கை  குணமாகும்.  விடா  முயற்சியும்,  ஒயாத உழைப்பும்  தான் விரைவான  முன்னேற்றத்திற்கு  வழி வகுக்கிறது.  மற்றவர்கள்  கவனம்  தம்மீது  படுபடியாக  இவர்களது  நடை,  உடை,  பாவனைகள்  இருக்கும்.  இவர்கள்  தனது  சுய  தேவைகளை  குறைத்துக்  கொண்டு  மற்றவர்களின்  தேவைகளைப்  பூர்த்தி  செய்வார்கள்.

இவர்களது  முன்னேர்கள்  முறையாக  வாழ்ந்து, செல்வ  செழிப்பு மேலோங்கி  வாழ்ந்திருப்பார்கள்.  இவர்  பிறந்த  போது  செழிப்பு  நிலை  மாறி  பராமரிப்புத்த்ன்மை  குறைந்திருக்கலாம்.  இவர்களது  சாமர்த்தியத்தினாலோ  அல்லது  தந்தை  வழி உறவினர்களின்  ஒற்றுமை  மூலமாகவோ  பாதி  நிலையாவது  அடைந்திருப்பார்கள்.  இவர்களுக்கு  தந்தையின்  அன்பு  குறைவாக  இருக்கும்.  ஆனால்  தாயின்  அன்பு  அதிகமாக  இருக்கும். சிந்தையில்  அமைதி  இருந்தால்  போதுமென்று நினைப்பார்கள்.
பூர்வீக சொத்துக்களில்  உள்ள பிரச்சனைகளை  இளமை காலத்தில்  தீர்த்துக்  கொண்டு,  பழைய  வீட்டையும்  புதுப்பிப்பார்கள்.  புதிய  வீடும்  கட்டி  கட்டி  குடியேறுவார்கள்.  இவர்கள்  கொடுத்த  வாக்கை காப்பாற்றுவதில்  சிரமங்கள்  ஏற்படும்.  ஆகவே  வாக்கு  கொடுக்கும்  முன்  யோசித்துச்  செயல்பட  வேண்டும்.  இவர்கள்  குடும்பத்திலும்  அருகில்  இருப்பவர்களையும்  அனுசரித்துச்  சென்றால்  குழப்பங்களில்  இருந்து விடுபடலாம்.  இவர்கள்  சமய  சந்தர்ப்பத்திற்கு  ஏற்றவாறு  மாற்றிக்  கொள்வர்.  பண  உதவி  பலரிடமும்  இருந்து  கிடைக்கும்.  ஆகவே  அதிலேயே  அக்கறையாக  இருந்தால்  கடனாளியாகி  வட்டி  கட்டும்   நிலை  ஏற்படும்.  ஆகவே  திட்டமிட்டு  செல்வு  செய்வது  கால சிறந்தது.

வியாபார  விஷயங்களில்  நிதானமாகவும்,  கண்ணியமாகவும்  நடந்து  கொள்வார்கள்.  மன உறுதியும்,  எதையும்  தாங்கிக்  கொள்ளும்  சக்தியும்  அற்புதமானவை.  துன்பம்  நேர்ந்த விடத்து  தளராமல்  அசைக்க  முடியாத  உறுதியோடு  நிற்பவர்கள்.  எவ்வளவு  எதிர்ப்புகள்  வந்தாலும்  தம்முடைய  குறிக்கோளை மாற்றிக்  கொள்ள  மாட்டார்கள்.  சொன்னதையே  திருப்பி  திருப்பி  சொல்லி  வற்றுத்துவர்.  பிடிவாத  குணத்தை  மட்டும்  விலக்கிக்  கொண்டால் ,  கடிவாளமில்லாத  குதிரையைப்  போல  மகிழ்ச்சியாக  வாழலாம்.

இவர்களுக்கு  சகோதரர்களால் பிரச்சனைகளும்,  விரையங்களும்  ஏற்படலாம்.  இவர்களுக்கு  தொழில்  படிப்பு  வாய்ப்பு  ஏற்படும்.  ஒரளவு  படித்தவுடன்  உத்தியோக  வாய்பைப்  பெற்று  அதில் இருந்தப்படியே  அஞ்சல்  வழி   கல்விகளை  கற்கும் வாய்ப்பு  அமையும்.  தொழில் முன்னேற்றம்  இருக்கும்.  இவர்கள்  இரும்பு,  இயந்திரம், மண், பூ, கலைத்துறை,  எழுத்துறை,  விவசாயம்,  உணவுப்பொருள்  ஆகிய  துறைகளில்  ஈடுபட்டால்  வெற்றி பெறலாம்.

இவர்கள்  விநாயகப்  பெருமானையும்,  சனீஸ்வரனையும்  விடாது  வழிபட்டு  வர  வேண்டும்.  கண்ணபிரான் பட்த்தை  இல்லத்தில்  வைத்து வழிபட்டால்  இனிய  வாழ்க்கை  அமையும்.