ஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்

ராகு

     
ராகு   நிழல்   கிரகம்,     ராகு   நிழலாக   நின்று   செயல்படும்   தன்மை   உணர்வாக   இருப்பவர்   பார்க்க   முடியாது.   ஆனால்    இல்லை   என்று  கூற   முடியாது.   உடலில்   வலி   ஏற்படுகிறது   என்றால்    உணர   முடியும்,   பார்க்க   முடியாது  அது  போல்    இரகசியமாக   செயல்படும   தன்மை.   மர்மமாக    செயல்  படும்   தன்மை.    கண்டு  பிடிக்க    முடியாத   நோய்க்கு    அதிபதி,   பிறரால்     புரிந்து  கொள்ள  முடியாத   தன்மை.    
சூழ்ச்சி,   வஞ்சகம்,   போலி   வேடம்,   கெட்ட  ஸ்தீரி   சகவாசம்,   பரத்தையர்   தொடர்பு    முதுமை இல்லாமை,  கெட்ட  பழக்கங்களுக்கு   அடிமையாதல்,   பாபங்கள்  செய்தல்,    தலைமறைவான    வாழ்க்கை,  திரைமரைவில் செயல்படுதல்,   சிறைப்படுதல்,   இருட்டில்   செயல்படுபவர்.   கர்மத்தை   இயங்கு   வைப்பவர்.

இராகு    பெரிய   இருட்டு,   சூரியனை   கவ்வி  பிடிக்கும்   இருட்டு,   இராகுவின் பிடியில்   சிக்கிய   எந்த   ஒரு    கிரகமும்  தன்   செயல்   இழந்து  விடும்.    இராகு   வாய்  அனைத்தையும்   முழுங்கும்.   இராகு   எதையும்  அளவில்லாமல்  செய்யும்   அதாவது   கொடுப்பது  என்றால்  அளவில்லாமல்   கொடுக்கும்,   அழிக்கும்   என்றால்   அனைத்தையும்  அழிக்கும்,  
சிறிய    பொருட்கள்   கிடைத்தால்   திருப்தி   அடையாது.   இவ்வுலகியலில்   நிகழ்காலத்தில்  அனுபவித்துக்   கொண்டிருக்கும்     வாழ்க்கை   நிலையையும்,   எதிர்காலத்தில்     அனுபவிக்க   இருக்கும்    நிலையையும்   குறிப்பவர்.    நிறைய   ஆசைப்படுபவர்   எல்லா    விஷயங்களிலும்  அளவில்லாத  ஆசை,   வெரைட்டி   மீல்ஸ்   சாப்பிடுவார்கள்   போல்,     கர்மத்தை   இயங்கி   வைப்பவர்.  
உயிர்     அற்ற     பொருள்கள்,   தோல்,   மனோ      விகாரத்துக்காரன்,    சிங்கம்   பசிக்கும்   போது    மட்டும்   மிருகங்களை    வேட்டை  ஆடும்.   அது  போல்     ராகு     தனக்கு    உரிய   காலத்தில்  மட்டும்   தனது   வேலையை  தீவிரமாக   செயல்படுத்துவார்.


கேது

கேது   நிழல்   கிரகம்.   கேது   நிழலாக    நின்று     செயல்படும்   தன்மை.   உணர்வாக    இருப்பவர்   பார்க்க    முடியாது.    ஆனால்   இணர   முடியும்,   கேது   சிறிய  இருட்டு.   வெளிச்சத்துக்குள்     இருக்கும்  இருட்டு   ஆகும்.   கேது  துறவு   உலக   வாழ்க்கை   மற்றும்   அனைத்தி   சுகத்தையும்   துறக்க   ஆசைப்படும்.    மோட்சகாரன்   கேது.

ஆத்மாவை   விடுதலை   செய்பவர்.  சென்ற       பிறவியில்   செய்த  கர்ம   வினைப்பயனை   நன்மையோ   அல்லது   தீமையோ   அவை   அனைத்தையும்   குறிப்பவர்   மற்றும்  அதை  அனுபவிக்க  செய்பவர்.   செய்த    கர்மத்தை    விடுபடுவன்.   மரணத்தை   அளிப்பவர்,    மரணத்திற்கு பின்   வாழ்க்கை    என்ன   என்பதைக்   காட்டுபவர்.   மரணம்    எவ்வாறு என்பதைக்   காட்டுவார்.   

பொதுவாக    ஜோதிடத்தில்   கேது   செவ்வாயின்    குணத்தை   கொண்டவர்   என   கருத்து   உண்டு.     இறைவனது   ஆணைப்படி    நனையும்   தீமையும்   தரும்   கிரகங்களில்   இராகு,   கேது   இவர்கள்    மிக   முக்கியமானவர்கள்.  உலக   பந்த்த்திலிருந்து    விடுவிப்பவர்,   ஞான   மார்க்கத்தையும்  அளிப்பவர்.    ஒருவர்     தன்னைத்தான்   உணர்தல்   அளிப்பதும்  இவர்.   கேதுவின்     ஆதிக்கம்   பெற்றவர்கள்     சோம்பேரியாக   இருப்பார்கள்.  ஆனால்   தேவை   என்று   வந்து  விட்டால்    செயலில்    தீவிரமாக   ஈடுபாடுவார்கள்.

மனித்  மூளைக்கு   எட்டாத   செயல்கள்   எல்லாம்   இவர்களால்    வருவது.   மூதாதையர்கள்   குறிப்பவர்   இவர்கள்.
கொடி   கட்டிய     வாகனத்தில்   பயணம்   செய்ய    வைப்பவர்   கேது.   மனிதனை   செயல்   படாமல்  தடை   செய்பவர்  கேது.   ஆன்மீக   உணர்வு    அளிப்பவர்   கேது.    விரக்தி   மனத்தை   அளிப்பவர்   கேது.   எதிலும்    பிடிப்பு  இல்லாமையைக்   காட்டுபவர்    கேது.    வைராக்கியத்தை   அளிப்பவர்  கேது.

No comments:

Post a Comment