மனிதன் உயிர் வாழ அடிப்படை காரணங்களில்
மிகவும் முக்கியமான ஒன்று நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தடையின்றி
கிடைத்தால் தான் மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். காலையில்
எழந்து காலை கடன் முடிப்பது முதல் இரவு மாத்திரை சாப்பிட்டு படுக்கும் வரை
நீரின் முக்கியத்துவம் மனித வாழ்வில் இன்றியமையாததாகிறது. தற்போதைய மக்கள்
தொகை பெருக்கத்தால் நீர் நிலைகள் எல்லாம் இருப்பிடங்களால் மாறிக் கொண்டு
இருப்பதால் நிலத்தடி நீரின் அளவானதும் குறைந்து கொண்டே வருகிறது. நல்ல மழை
பெய்தாலும் மழை நீரனது கழிவு நீரால் வெளியேற்றப்படுகிறதே தவிர நிலத்தடி
நீராக மாற நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நம் வீட்டு தரைகளுக்கு சிமெண்ட், அல்லது மொசைக் போட்டு அழகுப் படுத்துவதில்
காட்டும் ஆர்வத்தை சற்று அரசின் மழை நீர் சேமிப்பு திட்டத்திலும்
காட்டினால் தண்ணீர் பஞ்சம் என்பதே நாட்டில் வராது. கடல் நீரை
குடிநீராக்கினால் மக்களின் தண்ணீர் தட்டுபாடு விலகும் என்று அரசு
கஷ்டப்பட்டு எடுக்கும் முயற்சிகளிலும் மக்கள் தண்ணீர் சுவையாக இல்லை,
குடித்தால் தாகம் தீரவில்லை என்று குறை கண்டு பிடிக்கிறார்களே தவிர மழை
நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில்லை.
ஏரிக்குள் வீட்டை கட்டிக் கொண்டு தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட்டது என்று
கூறினால் என்ன நியாயம்? வாழும் வீட்டில் தண்ணீரின் தேவையறிந்து எங்கு
கிணறு தோன்டினால் நன்றாக தண்ணீர் கிடைக்கும். எங்கு போர்வெல் அமைத்தால்
தண்ணீர் தெளிவாக கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக ஆராய்ந்து அந்த இடத்தில்
கிணறு போர்வெல் போன்றவற்றை அமைத்தால் வீட்டின் தண்ணீர் தேவையானது
பூர்த்தியாவதுடன் கங்கா தேவியும் வற்றாமல் நமக்கு உறுதுணையாக இருப்பாள்.
ஒரு வீட்டின் நீர் ஆதாரம் என்பதை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தான் அடைய முடியும். ஒரு இடத்தில் எந்த மனை என்றாலும் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் தான் மற்ற இடங்களை விட நீர் ஆதாரங்கள் சிறப்பாக இருக்கும். அதனால் கிணறு மற்றும் போர்வெல்லை ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். இப்படி வடகிழக்கில் அமைக்கப்படும் இடங்களில் நீர்வற்றாமல் இருக்கும் என்பது ஆதார பூர்வமான உண்மை.
ஒரு வீட்டின் நீர் ஆதாரம் என்பதை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தான் அடைய முடியும். ஒரு இடத்தில் எந்த மனை என்றாலும் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் தான் மற்ற இடங்களை விட நீர் ஆதாரங்கள் சிறப்பாக இருக்கும். அதனால் கிணறு மற்றும் போர்வெல்லை ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். இப்படி வடகிழக்கில் அமைக்கப்படும் இடங்களில் நீர்வற்றாமல் இருக்கும் என்பது ஆதார பூர்வமான உண்மை.
வடகிழக்கு பகுதியில் கிணறோ, அல்லது போர்வெல்லோ அமைக்கும் போது
வடக்குதிசையின் மத்திம பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்தல்
நல்லது. இல்லையெனில் கிழக்குதிசையின் மத்திய பகுதியிலிருந்து வடகிழக்கு
திசைக்குள் அமைத்து கொள்வதும் சிறப்பு.
இதில் நாம் கணக்கிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது
என்னவென்றால் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையை இணைக்க கூடிய ஒரே
நேர்கோட்டில் இருக்ககூடாது. அதுபோல வீட்டை சுற்றி அதிக இடமிருந்தால்
மனையின் வடகிழக்கு மூலையையும், கட்டிடத்தின் வடகிழக்கு மூலையையும்
இணைக்கும் கோட்டிலும் கிணறு அல்லது போர்வெல் அமைக்க கூடாது.
தற்போதுள்ள இடபற்றாகுறையினால் கிணறு வைத்திருப்பவர்கள் கூட அதன் மேல்
தளத்தை மூடி விட்டு அதனை கடந்து தான் செல்கிறார்கள். கிணற்றை மூடாமல் சூரிய
ஒளி படும்படி அமைப்பது தான் நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால்
கிணற்றின் மேற்பகுதியை மூட நேர்ந்தாலும் அதனை வழி பாதையாக பயன்படுத்தா
திருப்பது நல்லது. குறிப்பாக ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு செல்லும்
வழியிலாவது கிணற்றை அமைக்காமல் இருப்பது நல்லது.
ஆக கிணறு, போர்வெல்லை வடகிழக்கு பகுதி, அதனை ஒட்டிய பகுதியில்
அமைப்பது நல்லது. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் அமைக்கக் கூடாது.
No comments:
Post a Comment