ஒரு வீட்டில் சமையலறை எங்கு அமைத்தால்
சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதினை வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்த்தால்
அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென் கிழக்கு மூலையில் அமைப்பது மிக
சிறப்பு. தென் கிழக்கு மூளையில் அமைக்கும் அறையில் எப்படிப்பட்ட அமைப்பு
இருந்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என பார்த்தால் தென்கிழக்கு அறையில்
கிழக்கு சுவற்றில் அதுவும் தெற்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் சமையல் மேடை
அமைக்க வேண்டும். அந்த மேடையில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைப்பது
போல் சமையலறை இருக்க வேண்டும். சமையல் மேடைக்கு மேல் கிழக்கு சுவற்றில்
சன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைத்து சமையலறைக்குள் சூரிய ஒளி வருவது போல்
அமைப்பது மிகவும் சிறப்பு. சமையல் மேடைக்கு அருகில் கிழக்கு சுவற்றில்
அதுவும் வடக்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் பாத்திரம் கழவுவதற்கான தொட்டி
அமைப்பது, வடகிழக்கு பகுதியில் தண்ணீர் வருவது போல் வைப்பது மிக சிறப்பு.
குறிப்பாக சமையல் அறையில் வடகிழக்குப் பகுதியில் பலமான பொருட்கள் எதுவும்
வைக்காமல் முடிந்த வரை காலியாக விட்டு விட்டு தண்ணீர் தேக்கி வைக்க கூடிய
பாத்திரங்களை வைப்பது மிகவும் சிறப்பு.
சமையல் அறையில் முடிந்த வரை கனமான பாத்திரங்களை தென் மேற்குப் பகுதியில்
வைப்பது மிக சிறப்பு. அதாவது கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை
தென்மேற்கு பகுதி அல்லது மேற்கு சுவரை ஒட்டிய பகுதி, வடமேற்கு பகுதியில்
வைப்பது மிக சிறப்பு. சமையல் அறையில் செல்ப் ஆனது தெற்கு சுவர் மற்றும்
மேற்கு சுவற்றில் அமைத்து அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கலாம்.
செல்ப் ஆனது கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் அமைப்பது அவ்வளவு சிறப்பல்ல.
ஒரு வீட்டில் சமையல் அறை ஆனது மேற் கூறியவாறு அமைப்பதன் மூலமாக அனுகூலமான
பலன்கள் உண்டாகும். தென் கிழக்கு மூலையில் சமையலறை வைக்க சாத்தியமான
சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதாவது தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச
ஸ்தானமான கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில்
சமையலறை தென் கிழக்கில் வைக்க முடியாது. அப்போது வடமேற்கில் சமையலறை
அமைத்து எப்படி தென் கிழக்கு அறையில் சமையலறை வைத்தால் எப்படி அமைப்போமோ,
அதே போல அமைப்பில் வடமேற்கில் அமைக்க வேண்டும்.
இடநெருக்கடிக் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தென் கிழக்கில் அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற இடங்களில் சமையலறையை அமைத்தால் தெற்கை ஒட்டிய கிழக்கு பகுதியில் சமையலறை, கிழக்-கு சுவற்றில் சமையல் மேடை அமைப்பது மிகவும் சிறப்பு. பொதுவாக தென்கிழக்கில் சமையலறையை அமைக்காமல் ஈசான்ய மூலை என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்குப் பகுதியில் சமையலறை அமைத்தால் நல்லதல்ல நைரிதி என வர்ணிக்கப்பட கூடி தென் மேற்கிலும் சமையலறை அமைக்க கூடாது. வடகிழக்கு பகுதி தெய்வீகமான ஸ்தானம் ஆகும். ஜல நடமாட்டம் கொண்ட ஸ்தானம் ஆகும். அங்கு அடுப்பு இருப்பதன் மூலமாக பல்வேறு கெடுபலன்கள் ஏற்படும். தென் மேற்கு பகுதியில் பணப்பெட்டி முக்கியமான பொருட்கள், படுக்கயறை போன்றவை இருக்கும் ஸ்தானமாகும். அங்கு அடுப்பு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் குறையும்.
உண்ணும் உணவானது உடலுக்கு மிகுந்த அவசியமாகும். உண்ணும் உணவை கூட வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்ற விதியும் உள்ளது. உணவு உண்ணும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து உண்டால் நல்ல செரிமானமாவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

No comments:
Post a Comment