சம்ப்& கீழ்நிலை தண்ணீர் தொட்டி

இன்றளவில் பெரிய, சிறிய, வீடுகள் முதல் தங்களுடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சூழ்நிலை தண்ணீர் தொட்டிகளை அமைக்கிறார்கள். அதாவது சம்ப் இந்த சம்பில் சேமிக்கப்படும் நீரை கொண்டு (கிணறு போர்வெல் போன்றவற்றில் நீர் வற்றினாலும்) அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. சம்ப்பில் சேமிக்கப்படும் நீரானது அரசாங்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்காக வினியோகிக்கும் தண்ணீராகும். இதை கார்ப்பரேஷன் வாட்டர் என்பார்கள். வீதியை ஒட்டி தரைமட்டத்திற்கு கீழே உள்ள பிரதான குழாயிலிருந்து, ஒரு சிறிய குழாயானது பிரிந்து வீடுகளுக்கு புகுந்து  கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் உள்ளே நீரை செலுத்தும் நிலத்தடி நீருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றாலும் கிணறு அமைக்க வாஸ்துப்படி எந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறோமோ அதே விதிமுறையை தான் கீழ்நிலை தொட்டியை (சம்ப்) அமைப்பதிலும் பயன்படுத்த வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடங்களிலும் சம்பினை அமைக்கலாம்.
      மாநகராட்டி குடிநீர் குழாய்களின் இணைப்பானது தெருவை ஒட்டி இருப்பதால் தெருப்புறத்தை ஒட்டியே சம்ப்பை அமைக்க வேண்டி உள்ளது. அப்படி அமைக்க வேண்டிய பட்சத்தில் முடிந்தவரை வடகிழக்கு மூலையில் அமைப்பது தான் சிறப்பு. வீட்டின் வாசலானது தெற்கு பார்த்தபடி இருந்தால் சம்ப்பை கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும், மேற்கு பார்த்த படியிருந்தால் வடக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும் அமைப்பது நல்லது. எந்தவொரு காரணத்திற்காகவும் சம்ப், கிணறு, போர்வெல் போன்றவற்றை தென்மேற்கு மூலையில் அமைக்கவே கூடாது. அப்படி அமைத்தால் பல்வேறு வகையில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள், ஆரோக்கிய பாதிப்புகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

No comments:

Post a Comment