கழிப்பறை குளியல் அமைந்த பிறகு
இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது
என பார்த்தால் குறிப்பாக ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக
செல்வது நல்லது. குறிப்பாக ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த
வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு
வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு
வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும். மற்றொரு பாதையாக
மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து
வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற
வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு
சாத்தியமான ஒன்றாகும்.
வடக்கு பா£த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கு கழிவு நீர் வெளியேறாமல்
வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான்
மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு
மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு
பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.
வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.
மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது.

No comments:
Post a Comment