பொழுது விடிந்து கண் விழிப்பது முதல்
படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை
நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம்
என்பார்கள் அன்றாட செலவுகள் போக மீதி பணத்தை சேமித்து வைப்பது என்பது
எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்ய கூடிய உதவியாகும். வசதியுள்ளவர்கள்
பணத்தை என்ன செய்வது, எங்கு சேர்ந்து வைப்பது, என்னென்ன நகை வாங்குவது
என்று யோசிப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய ஆபரணங்களையும், சேர்த்து
வைக்கும் பணத்தையும் மற்றும் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை வாழும்
வீட்டில் வாஸ்து ரீதியாக எங்கு வைத்தால் அவை மேலும் மேலும் பெருகும்
லட்சுமி கடாட்சம் உண்டாகும் என பார்த்து அந்த பகுதிகளில் தங்களுடைய
சேமிப்புகளை வைத்து பாதுகாக்கிறார்கள். கால் சரவனுக்காகவும், நூறு, இருநூறு
பணத்திற்காகவும் கொலை கொள்ளைகள் நடக்கும் இக்காலத்தில் எல்லாற்றையும்
பாக்ங் லாக்கரில் வைப்பதே நல்லது என்றாலும் வாழும் வீட்டிலும் வாஸ்து
ரீதியாக பணம் பொன் பொருள் பத்திரங்களை எங்கு வைப்பது என்று பார்ப்போம்.
பொதுவாக வீட்டின் தென்கிழக்கு மூலை, கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி, மேற்கு
திசையை ஒட்டி பகுதிகள், வடமேற்கு பகுதி, வடக்கை ஒட்டிய மேற்கு, மேற்கை
ஒட்டிய வடக்கு பகுதிகளில் பணப்பெட்டி, பீரோ, போன்றவற்றை வைக்கலாம்.
வசதியில் குறைந்தவர்களுக்கு சமையலறை, பூஜையறை, பெட்ரூம் எல்லாமே ஒரே
அறையாகத் தான் இருக்கும். ஒரே அறையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த
அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் பீரோவை வைப்பது சிறப்பு.
அப்படி வைக்கப்படும் பணபெட்டி, பீரோ போன்றவை எந்த திசையை பார்த்து வைப்பது
நல்லது என பார்க்கும் போது கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல வைப்பது
சிறப்பு.
ஒரு வீட்டில் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென்கிழக்கு மூலையிலோ,
அதிக எடையுள்ள பொருட்களை வைக்க கூடாத வடகிழக்கு மூலையிலோ பீரோ, பணப்பெட்டி
போன்றவற்றை வைக்காமல் இருப்பதே நல்லது.
புதிதாக வீடு கட்டுபவர்கள் அறைகளில் செல்ப் கட்டுவது, பெரிய ஜன்னல்
வைப்பது போன்றவற்றினை தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, பகுதிகளில் அமைப்பதை
தவிர்த்தால் அந்த இடத்தில் பீரோ பணப்பெட்டி போன்றவற்றினை வைத்து கொள்வதற்கு
எளிதாக இருக்கும். மேற்கூறிய இடங்களில் பணப்பெட்டி பீரோ போன்றவற்றை
அமைப்பதன் மூலம் வீட்டில் லஷ்மி கடாட்சம் உண்டாகும். ஆடை ஆபரணமும் சேரும்,
குறிப்பாக வீட்டின் வாசற்படிக்கு நேராக பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை
தவிர்ப்பது மிகவும் உத்தமம்.
No comments:
Post a Comment