Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை  மையமாக   வைத்துக்  கொண்டு              அனைத்துக்   கிரங்களும்   சுற்றுகிறது.   சூரியன்   தலைமை    தாங்கும்          தகுதியைத்   தருகிறார்.  ஆண்மையைத்     தருகிறார்.  நிர்வாகத்    திறமை   அளிக்கிறார்.   சூரிய  ஒளி  அனைவருக்கும்   பாகுபாடு    இன்றி   அளிப்பது   போல்   எல்லோரையும்   சமமாக   நினைப்பவர்,    தயாள   தன்மை   உடையவர்.      பேதம்   கிடையாது,   சாதி  பாகுபாடு   கிடையாது.   எல்லோரையும்   சரி சமமாக     நடத்துவர்.     இரகசியம்   கிடையாது.   வெளிப்படையாக   பேசுவர்.   வள்ளல்  தன்மை  உடையவர்.   இல்லை  என்று   சொல்லாத   தன்மை   பேரும்  புகழும்  உடையவர்.

சூரியனின்    கதிர்களால்   தழுவாத   உயிர்   இனங்கள்    இல்லை.   சூரியன்   ஒளிக்கு   அதிபதி,    சூரியனிடமிருந்து   வெளிப்படும்  கிரணங்களும்,  குருவிடமிருந்து   வெளிப்படும்  மீத்தேன் என்ற   ஒளியும்  கலந்து   உலகில்   ஜீவ   ராசிகளின்   உற்பத்திக்குக்    காரணமாகின்றன.
சூரிய  ஒளியின்றி  எந்த  கரு [ உயிர்] தோன்ற   முடியாது,    உயிர்   வாழ   முடியாது.   அதனால்  சூரியனை  பித்ரு காரகன் என்று   பெயர் பெறுகிறார்.

சூரியன்   தனது   ஈர்ப்பு   சக்தியால்  மற்ற  கிரகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்  கொள்ளாமல்   காப்பாற்றுகிறது.   சூரியன்   உஷ்ணத்திற்கு   அதிபதி,   உஷ்ணம்   இல்லையேல்   உயிர்   தத்துவம்  இல்லை.   சூரியன்   பிராணனைக்   கொடுக்கக்    கூடியவன்.     அதனால் தான்  சூரியன்  ஆத்மாகரகன்  என்று  அழைக்கப்படுகிறார்.

சூரியனின்   உஷ்ண    கதிர்களால்   தழுவாத    எந்த   உயிர்  இனங்களும் இல்லை.    வெளிச்சம்   [சூரியன்]   இருந்தால்தான்   கண்களால்   பார்க்க   முடியும் . ஆகவே   சூரியன்   வலது  கண்.    மனித  உடலை    தாங்கி    பிடிப்பது  எலும்பு,   சூரியன்   எலும்புக்கு  அதிபதி   சூரியனின்  ஆதிக்கம்  உடையவருக்கு    முகஸ்துதி   பிடிக்காது.  எளிமையான    தோற்றம்  உடையவ்ர்.   நம்பிக்கைக்குரியவர்.    வாக்கு   தவறாதவர்.     தந்தை    மகனுக்கு   உதவி   செய்வது   போல்   வாக்கு   கொடுத்தவருக்கு   உதவி   செய்பவர்.

அரசன்   [சூரியன்]    தன்  தளபதியான    செவ்வாயின்   வீட்டில்   உச்சம்   பெறுகிறார்.   சூரியன்   ஒருவர்     ஜெனன   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால்,     அந்த    ஜாதகர்  எவ்வளவு      பாரம்பரிய   செல்வம்,   செல்வாக்கு,  அதிகார   பலம்   பெற்று    இருந்தாலும்   கால போக்கில்   குறைந்து   விடும்.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகர்  ஒரு  நிறுவனத்தில்   அல்லது  ஒரு  இயக்கத்தில்   தலைவராக இருப்பார்.  மேலும்  அவருக்கு  பேரும்  புகழும்  கிட்டும்.  ஜாதகருக்கு  ஆன்மீக   ஞானம்   உண்டாகும்.
  
ஜாதகர்   தனி   சிறப்புடையவராக   திகழ்வார்.   ஜாதகரிடம்   துணிச்சல்  அதிகமாக  இருக்கும்   கண்டிப்புடன்    நடந்துக்  கொள்வார்.   அடித்துப்   பேசுவார்.   ஏராளமான   செல்வம்   இருக்கும்.   சுகமான   பிராயணம்,   இராஜ  வாழ்வு  அமையும்.  வியாபார    வெற்றி,  வேலையில்   அதிக   ஈடுபாடு,   மலைப்பகுதி   மற்றும்   காட்டுப்பகுதியில்    சுற்ற   நேரிடும். 
  
சூரியன்   உஷ்ணமயமானவர்.   ஆகவே       ஜாதகருக்கு     உஷ்ணாதிக்கத்தால்   பல  உபாதைகள்   வரும்.   ஆகவே   இதில்   எச்சரிக்கையாக   இருப்பது   நல்லது.   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.      ஒரு  ஆணின்    ஜெனன   ஜாதகத்தில்    சூரியன்   பலம்    பெற்று   இருந்தால்  அந்த   ஜாதருக்கு        ஆண்மை   ஆற்றலில்    அவர்  சிறந்து   விளங்குவார். ஒரு  பெண்   ஜாதகத்தில்   சூரியன்   பலம்  பெற்றிருந்தால்      அந்த   ஜாதகியிடம்   ஆகர்ஷன   சக்தி    ஓங்கி  இருக்கும்.   அவள்   சிறந்த   கற்பு டையவளாகத்   திகழ்வாள்.

மேசத்தில்   10  பாகை   முதல் 30   பாகைக்குள்  சூரியன்  இருந்தால்  முதல்   10  பாகைக்குள்    அளிக்கக்   கூடிய    அளவுக்கு    நற்பலன்கள்    அளிக்கமாட்டார்.

சூரியன்   முக்குணம்  உடையவர்.  அதாவது  பிரம்மா,  விஷ்ணு,  மகேஸ்வரன்  ஆவார்.   சூரியனின்    ஆட்சி  வீடான   சிம்மத்திற்கு   7வது  ராசியான     கும்பம்.  இந்த   ராசி   சூரியனின்    மனைவியான  சாயா  தேவி  வீடு.  இந்த  ராசியில்   தான்    சூரியனின்   மகன்  சனி  பிறந்தார்.    [இந்த   ராசியின்  சின்னம்  குடமாகும்.  குட்த்தின்   உள்ளே    நிழல்  [சாயா தேவி]   உள்ளது.  பகல்  பொழுது   சூரிய  ஓளி   குடத்தில் விழுவதால்     சாயா  தேவி   வலு  பெற்றதால்   சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த   ராசியில்   பலம்  அதிகம்   சனிக்கு   மூலதிரிகோன   ராசியாகும்]

அரசுக்குரிய    கிரகமான   சூரியன்   எப்போதும்   தன்னுடன்   அறிவுக்காரன்   புதனையும்,   செல்வத்திற்கு   காரகனான  சுக்ரனை  அருகில்  வைத்திருக்கிறார்.   மாசி,  பங்குனி,   சித்திரை,  வைகாசி,   ஆகிய  மாதங்களில்    சூரியனுடன்   புதன்  கூடி  இருப்பார். ஆனி,  ஆடி,  ஆவணி,  பூராட்டாசி  ஆகிய    நான்கு   மாதங்களில்    சூரியனுக்கு    முன்  ராசியில்    புதன்   செல்வார்.  ஐப்பசி,  மார்கழி,  கார்த்திகை,  தை  ஆகிய   நான்கு   மாதங்களில் சூரியனுக்கு பின்   செல்வார்.

சூரியன்   ஒரு  நாளில்  செல்லும்   தூரம்  58  கலை, 8 விகலை  ஆகும்.  சூரியன்  ஒரு  நட்சதிர  பாகத்தைக்   கடக்கும்   காலம்  3  நாள்   22  நாளிகை   55  விநாடி   ஆகும்.  புதிதாக    பிரவேசித்த   ராசியில்   சூரியன்  பூரண   பலன்  தர  எடுத்துக்  கொள்ளும்    கால  அளவு     5  நாட்கள்.

சூரியனைக்  கொண்டு  ஒருவரின்   தந்தையைப்  பற்றியும்,   ஜாதருடைய     செயல்   திறன்   தொழில்  அல்லது   வியாபாரம்   அல்லது   உத்தியோகம்   இவைகளை  அறிய  முடிகிறது.  அரசு   வழியில் நல்ல  பொருளீட்டும்  யோகமும்.  தலைமை   பதவி   வகிக்கும்   தகுதி   அமையும்.   நல்ல  நோக்கு  உடையவர்.   ஆழந்த   கருத்துடையவராகவும்,  எவருக்கும்  அடங்கிப்  போகும்   இயல்பு இல்லாதவராகவும்   இருப்பார்கள். 

சூரியன்  அக்கினிக்குரியவர்,   சூரியனின்   நிறம்  இளம்     சிவப்பு  அதாவது    ஆரஞ்சு    நிறம்,  கிழக்கு   திசைக்குரியவர்.  பகல்   நேரத்தை  ஆள்பவர்,  கோதுமைப்  பிரியர்.  எருக்கு   சமித்து  மூலம்   திருப்பதிப்படுபவர்,   செந்தாமரையை  மலர  வைப்பவர்,     மாணிக்க    கல்லுக்குரியவர்,  செம்பு   உலோகத்தைப்  பிரதிப்பலிப்பவர்.   செம்பட்டு  உடையால்  அலங்கரிக்  கப்படுகிறார்.  சிவப்பு   நீலப்  பொருட்களால்  நலம்   அளிப்பவர்.  சத்தியர்,  வீர   புருஷர்,   ஞாயிற்றுக்  கிழமைக்குரியவர். 
   
இத்தனைக்கும்   சிறப்பு      முத்திரையாக  ருத்ரனை  அதிதேவதையாக்  கொண்டவர்.   சூரியனின்  அனுகிரகத்தைப்  பெற   வேண்டுமானால்   அவருக்குரிய    மேலே   குறிப்பிட்ட   பொருட்களைக்   கொண்டு     சிரத்தையுடனும்,  முழு   ஈடுபாடும்,   நம்பிக்கையும்     கொண்டு  ஆராதிக்க  வேண்டும்.   மேலும்   அதிதேவதையான   ருத்ரனையும்    வழிபட   வேண்டும்.  இவ்வாறு    செய்தால்   சூரிய  பலனை  பெறலாம்.  சூரியனுடைய    அதிகாரத்துக்குட்பட்டவை  அனைத்திலும்  அனுகூலம்  கிடைக்கும்.

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

சந்திரன்

சூரியனின்   ஒளி   கிரணங்களை  பெற்று   பிரகாசிப்பவர்   சந்திரன்  ஆவார்.  இவர்  இரவுக்கு  அதிபதியாகிறார்.  உயிர்  சக்தியாக  இயங்க   சூரியன்  எவ்வளவு   முக்கியமோ   அது  போல்   உடலுக்கு   சந்திரன்   அவசியம்  ஆகிறார்.   இவர்   மதிகாரகன்   ஆகிறார்.   ஞானம்   பெறவும்   இவர்  தேவை,   சந்திரன்    மாத்ருகாரன்.   சந்திரன்   சலன  புத்தி.  சந்திரனுக்கு  மூன்று  விதமான     சலனம்  உண்டு.  ஒன்று    தன்னைத்தானே    சுற்றிக்  கொள்கிறது.   இரண்டாவது    சுற்றுவதுடன்    பூமியையும்   சுற்றுகிறது.   மூன்றாவது  பூமியோடு   சூரியனையும்   சுற்றுகிறது.   கை  குழந்தையுடைய   தாய்    மனது   எப்போதும்   குழந்தையைச்    சுற்றிக்   கொண்டு   இருப்பது  போல்   சந்திரன்   பூமியையும்  சூரியனையும்   சுற்றிக்  கொண்டே  இருக்கும். 

மனதுக்கும்   சந்திரனுக்கும்  ஒரு  தொடர்பு   உண்டு.  சந்திரன்  வளர்ந்து     தேயும்   தன்மையுடையவர்.  ஆகவே    மனிதனின்    மன்நிலையிலும்   அடிக்கடி   மாற்றம்   ஏற்படுகிறது. 
  
பெளர்ணமி   காலங்களில்    கடலில்   மாற்றங்கள்    ஏற்படுகிறது.   பெளர்ணமி  மற்றும்  அமாவாசை   காலங்களில்  அறுவை  சிகிச்சை  செய்யக்  கூடாது.   பெளர்ணமியில்  ரத்தம்  அதிகமாகவும்.  அமாவாசையில்  ரத்தம்   குறைந்தும் போகும்.   அமாவாசை  மற்றும்  பெளர்ணமி   காலங்களில்  தியானம்  செய்வது  சிறப்பானது.

சந்திரன் மனம்,  ஒவ்வொரு  மனிதனிடம்   பெண்  தன்மை  உள்ளது.  ஒவ்வொரு   பெண்ணிடமும்  ஆண்  தன்மை  உள்ளது.   ஒரு  மனிதனுக்கு   பின்னால்  ஒரு  பெண்  உள்ளாள். மனிதனின்  மனம்  சுத்தமாக  [சந்திரன்]  இருக்கிறது. ஆனால்  சந்திரனுக்கு   கிடைக்கும்.கிரகத்தின்   சேர்க்கை   பார்வைக்கு  ஏற்ப   மன  நிலை   மாறுதல்  அடைகிறது.   உதாரணமாக   நீர் [சந்திரன்] சுத்தமாகவும்   நிறமில்லாமலும்,   வாசனையற்ற   நிலையிலும்,    சுவையற்ற   நிலையிலும்  இருக்கிறது.    நீருடன்   சேரும்    கெமிகல்   மினரல்  ஏற்ப   அதன்  நிறம்,  வாசனை,  சுவை  எல்லாம்  ஏற்படுகிறது.  ஆனால்  எந்த   ஒரு  செயலும்   சந்திரனின்றி       நடைபெறாது.  ஆகவே   சந்திரன்  உடல்காரகன்    என  அழைக்கப்படுகிறார்.  உடல்  அழகு  உடல்  கவர்ச்சி  அளிக்கிறார்.   வட்டமான   முகம்  அனைவரையும்   கவரும்    தன்மையை   அளிக்கிறார்.   ஒருவர்     உடல்   இன்றி     எந்த  செயலும்   செய்ய  முடியாது.

  இடப்பெயர்ச்சி,  இடமாற்றம்,  பிராயணம்  போன்றவைகள்    நடை  பெற   சந்திரன்   காரணம்  ஆகிறார்.ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்    ரிஷிபத்தில்  முதல்  3  பாகைகள்  இருந்து  ,   நட்பு   கிரகங்களின்   தொடர்பும்,  பகை   கிரகங்களின்  தொடர்பு  இன்றி    இருந்தால்  அந்த  ஜாதகரின்  சரீர ஆரோகியத்திற்கு    உத்திரவாதம்   உண்டு.  முக  வசீகரம்,  இரத்த  புஷ்டி  அளிப்பவர்.  உள்ளத்தின்   உறுதிக்கும்   வாய்ப்புண்டு.   மன வளம்,  பொருளாதார  நிலையில்   உயர்வும்  கிட்டும்.   
பார்வையில்  கவர்ச்சியும்,  பெருந்தன்மையும், பெரும்  புகழ்,   பெரு வாழ்வு,  பேரானந்தம்,   பேருள்ளம், என  மகிழ   வைப்பார்,   தாயின்  நல்வாழ்த்துக்கள்  கிடைக்கும்  ,சயன்   சுகம்  உண்டு.

சந்திரனை  மையமாகக்   கொண்டு   திதி,  கரணம்,  யோகம்,   திதிசூன்யம்  போன்ற  அமைப்புகள்  ஏற்படுகிறது.   சந்திரனைக்  கொண்டு  விரதங்கள்  அனுசரிப்பதும்,  பண்டிகைகள்  கொண்டாதலும்   கோயில்களில்   திருவிழாக்கள்   உற்சவங்கள்,  சுப   காரியங்கள்   நிர்ணயிக்கப்படுகிறது.    திருமணங்கள்  நிர்ணயம்   செய்வதும்    சந்திரனின்   ஓட்டத்தை  வைத்து   முடிவு   செய்யப்படுகிறது.

moon herbals சந்திரனின்  ஒளியில்  மூலிகைகள்   வளர்கிறது.   சந்திரன்  வெண்மை  நிறம்,   வெண்மை   நிறப்  பொருட்கள்   அனைத்தும்   சந்திரன்    காரகன் ஆகிறார்.  இரவில்   சந்திரனைக்  கண்டு   மயங்காதவர்கள் பூமியில்     யாராவது உண்டா?  குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி  எவ்வளவு   குளிர்ச்சியாய்   இருக்கிறது.   மனதில்  மகிழ்ச்சியும்  அளிக்கிறது.  தாம்பத்திய  சுகத்திற்கு  துண்டும்   காலமாகவும்  இருக்கிறது.

ஜோதிட  உலகத்தைப்  பொறுத்த வரையில்   சந்திரன்   தாய் காரகம்  பெறுகிறார்.  தாயிடமிருந்து   தான்  உடல்  தோன்றுகிறது.   ஆகவே  சந்திரன்   உடல் காரகன்  ஆகிறார்.   ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்  நிலையைப் பொறுத்து தான்   சரீரம்  [உடல்]  பருத்தும்,   இளைத்தும்   காணப்படும்.   ஒருவர்   ஜெனன     ஜாதகத்தில்   சந்திரன்   வலு  பெற்று   அமைந்திருந்தால்  அந்த  ஜாதகர்  தனது  மதியால்   அனைத்தையும்   வெல்லக்   கூடிய  நிலை  உண்டாகும்.

சூரியன்   கால  புருஷனுக்கு   முதல்   வீட்டில்  [மேசத்தில்]   உச்சம்  பெறுவது  போல்  சந்திரன்    கால   புருஷனுக்கு   இரண்டாம்  வீட்டில் [ரிஷிபத்தில்]  உச்சம்  பெறுகிறார்.

சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து  சந்திரனின் அருளை பெறலாம்..

ஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்

புதன்

ஒவ்வொரு   மனிதனுக்கும்  புத்தி   வேண்டும்.   ஒரு   சிறிய    விஷயமாக   இருந்தாலும்   பெரிய   விஷயமாக  இருந்தாலும்  அதை   தீர்க்க    புத்தி  என்ற   சக்தி   கண்டிப்பாக    தேவைப்படுகிறது.   மனம் [சந்திரன்]  பேதலித்தாலும்,   புத்திசாலி  தனத்தின்   [புதன்]  மூலம்   பாதுகாத்துக்   கொள்ளப்படுகிறது.  ஒரு   மனிதனை  செயல்  பட   செய்வது   எண்ணங்கள்  செயலாக   மாறுகிறது.   சிந்தனை,  சிந்திக்கும்   திறமை,   பகுத்தறிவு,   புத்தி,   பகுத்தறியும்   திறமை  இவைகள்   அனைத்தும்   மனதில்   தோன்றுகிறது.  இதற்கு   எல்லாம்  புதன்   காரணம்  ஆகிறார்.  அகத்தின்   அழகு   முகத்தில்  தெரியும்    என்று  கூறுவது   போல்   ஒருவரின்   முகத்திலிருந்து   அவரது   புத்திசாலி  தனத்தை   அறிய முடியும்.

புதன்  புத்திகாரன்,  அறிவு,  பொது அறிவு,  கல்வி அறிவு,  கல்வியில்  ஞானம்,  யூகம்,  புத்திசாலி   தனம்,  தெளிவாக   பேசுவர்,   விகடம் பேசியே  வெற்றி   காணுகின்ற   இனிய  இயல்பு,   இனிமையான  பேச்சு, மென்மையான பேச்சு,   பேச்ச்சில்  பெருந்தன்மை,  பேச்சில்  அனைவரையும் கவருதல்,  பளிச்சென்ற   உச்சரிப்பு,   நகைச்சுவை  ததும்பும்   நயமான  பேச்சு,  எதையும்   எளிமையாகவே   எடுத்துக்  கொள்ளும்  உள்ளமும்,  இரு   பொருள் படப்  பேசும்  திறன்,   எழுத்துத்  திறமை,   நடுநிலைமை,   தர்க்கம்   செய்வதில்  ஆற்றல்,  சிரித்த  முகம்,  சீரிய   பார்வை,  பலா  சுளை  பேச்சு,  கண்களால்   பேசி   கவி நடை  வீசி மயக்கும்  தன்மை இவையெல்லாம் புதன் கொடுப்பார்.
.
புதனுக்கு  மிதுனம்  மற்றும்   கன்னி  ஆகிய  இரண்டு   ராசி வீடுகள்  உண்டு.   இதில்   கன்னியில்  புத்னுக்கு   ஆட்சி,  மூலத்திரிகோணம்,   உச்சம்  ஆகிய    மூன்று   நிலைகள்  உண்டு.   கன்னியில்   புதன்  உச்சம்   பெற்று  இருந்தால்  உயர்ந்த   பண்புடையவராக   இருப்பார்.   மன்னிக்கும்   சுபாமுள்ளவராகவும்   இருப்பார்.   வாதத்தில்   யாரையும்   வெல்லும்   பாரக்கிரமத்தை  பெற்று   இருப்பார். அஞ்சாமல்   வாதிக்கக்   கூடியவர்.    இலக்கிய   கர்த்தாகவாகவும்,  இலக்கிய   விமர்ச்சகராகவும்,  கைத்திறன்  மற்றும்  கலை   இரண்டிலும்    ஆற்றல்   உடையவராக   திகழ்வார்.

கன்னியில்   உச்ச   பாகையில்   இல்லாமல்   மற்ற   பாகையில்  இருந்தால்  அந்த  ஜாதகர்   கல்வி  ஞானமும்,  எழுத்தாற்றல்,   சிறந்த   பேச்சாளாராகவும்,  கருத்தைக்   கச்சிதமாகவும்  விளக்கும்  ஆற்றல்   பெற்றவராகவும்,   நுண்கலைகளில்   தேர்ச்சி   உடையவராகவும்,  நடுநிலை   உடையவராகவும்,   பெருந்தன்மை    உடையராகவும்,  அற்பத்தனம்  இன்றி  வாழ்வார்.    அழகாக    உடை உடுத்துவார்.   அரசியல்   துறைகளிலும்,  நண்பர்களால்  ஆதாயமும்,  சுதந்திர  முள்ளவராகவும்   திகழ்வார்.   வர்த்தகத்     தொழில் வளமும்   அமையும்.  ஆனால்   கன்னியில்  இருக்கும்   அளவுக்கு  எதிர்  பார்க்க  முடியாது.

சூரியனிடமிருந்து   அதிகமாக   ஒளியை  பெறுவான்  புதன்.  அர்த்தனாரி   ஈஸ்வரன்   சங்க   நாராயணன்   பச்சை  நிறம் – புதன்   விஷ்ணு   காரகம்-  பசுமையான   இடங்கள்   எல்லாம்  புதன்   காரகம்.  மனதில்  அமைதியான   தோற்றம்  ஏற்படுகிறது.

புதன்  மிகச் சிறிய  கிரகம்.   இளமை  கிரகம் – தளிர்   இலைகள்..  மிக  இளமை  சுறுசுறுப்பானவன்,  வேகமாக  செயல்  படக் கூடியவன்.   சூரியனை  விட்டு   புதன்  பிரியாது  இருப்பது  போல்  நண்பர்களிடம்   நட்பு  விரும்பி  -அலி  கிரகம்  -  ஐயப்பன்- மோகிணி   வளர்ச்சி  அடையாத   பெண்   மனிதர்கள்  தூய   சித்தம் என்று   வரும்  போது   பால்    உணர்ச்சிக்கோ   அல்லது   லிங்க   பேதத்திற்கோ   இடமில்லை,  ஆகவே  புதன்   அலி  ஆவார்.  [நபும்சகன்]  அதாவது  12  வயது   பெண்  உடல்  உறவுக்கு   உடல்   தகுதி  பெறதாவர்  போல்  புதன்  செயல்படுகிறார்.

கிரகங்களில் புதன்  ஒருவர்  மட்டும்   தான்  தன்  வீட்டில்  உச்சம்  பெறுகிறார்.  உலகம்  அனைத்தும்   காப்பாற்றக்   கூடியவர்.  மகா விஷ்ணு.   அவர்  அடுத்த  வீட்டில்  தன்னுடைய  திறமையை  வெளிப்படுத்த   வேண்டிய   அவசியம்  இல்லை.  அறிவு   செல்வம்  உடைய   புத்திசாலி   பொருள்   செல்வத்தின்  மீது  ஆசைப்படுவதில்லை.  ஆகவே  பொருள்   செல்வத்திற்கு  அதிபதியான   சுக்ரனை    தன்  வீட்டில்   நீசம்   அடைய செய்கிறார்.  [அதனால்   தானே  புலவர்கள்  சிலர்  வறுமையில்   இருக்கிறர்களோ  போல்]
புதன்  கலகலப்பானவன்  அரட்டை  அடிப்பவர் -  மரகதப்பச்சை   -துளசி  [பச்சை]  மரிக் கொழுந்து -  கிளி   பச்சை  நிறம்  விஷயங்கள்  எல்லா  காரகம்.  புதன்   வளர்பிறை   தோற்றம் உண்டு.

ஒருவர்  ஜெனன  ஜாதகத்தில்   புதனுக்கு   குருவின்   பார்வை  பெற்ற   ஜாதகர்  கல்வியில்  சிறப்பாக   இருப்பதையும்,  புத்திசாலியாகவும்,  சரளமாக  பேசும்  திறனும்  இருப்பதை  அறிய  முடியும்.  புதன் இளமை,  இளமையாக  இருக்கும்  போது  உலக   சுகம்  அனைத்தும்  அனுபவிக்க   ஆசைப்படுகிறார்கள்.   புதன்   கேது   சேர்க்கை   நுண்ணிய  அறிவைக்காட்டும்.  மற்றும்   துறவிகளையும்  காட்டும்.   குரு  புதன்   அல்லது  புதன்  சனி  இணைவு  உள்ள   ஜாதகர்  இலாப   நோக்கம்   இன்றி   எந்த   காரியத்தையும்   செய்ய  மாட்டார்.   சூரியன்  புதன்   சேர்க்கை   விசாலமான  அறிவு  உடையவராக   இருப்பார்கள்.   
புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும், திருப்பதிபெருமாள்,குருவாயூர் கிருஷ்ணரையும் வழிபடலாம்

ஜாதகத்தில் குரு தரும் பலன்கள்

குரு

அதிர்ஷ்டத்தைக்   கொடுப்பவர்  குரு.  இவர்   பார்வை   பட்ட   இடம்,   பார்வை   பட்ட   கிரகங்கள்   நன்மையையே   செய்கிறார்.    மனித   உணர்ச்சிகளையும்   எண்ணங்களையும்   ஒழுங்கப்படுத்தி    சீராக இயங்க  செய்பவர்.   குரு  ஆவார்.   சுப  கிரக   வரிசையில்   முதலிடம்  பெறுபவர்.

உள்ளத்தைப்   பொறுத்தவரையில்   மனித   உணர்ச்சிகளையும்   எண்ணங்களையும்   ஒழுங்குபடுத்தி   சீராக   இயங்கச்  செய்யும்    திறன்   குருக்கு  உண்டு.   எதையும்   சீர்தூக்கி  பார்க்கும்   மன  நிலையும்   அளிப்பவர்  குரு  ஆவார்.   நியாதிபதியாவர்,    ஆகவே   தான்  குரு   நீதி,  சட்டம்  ஒழுக்கம்  பூஜைகள்,   ஹோமங்கள்,  தியானம்,   ஆதம்   விசாரனை   இவற்றுக்கு    அதிபதியாகிறார்.

கிரகங்களில்    சுப  கிரக   வரிசையில்   முதலில்   இருக்கும்  குரு  பகவான்   விவேகத்திற்கும்,  வித்தைக்கும்,   விழிப்புணர்ச்சிக்கும்  உரியவர்.   புத்திர   காரகன்   என   பெற்றவர்.  நல்லியல்புடைய     குழந்தைகளை   பெற்றெடுத்து    ஊரார்   போற்றுகின்றவராக      திகழச்  செய்பவர்   குரு  பகவான்  ஆவார்.

  ஒருவரின்   திருமணத்திற்கும்,     ஒன்றில்   வெற்றி  பெறுவதற்கும்   இவர்  தயவு   தேவையாகும்.   சாஸ்திர    சம்பிரதாயங்களில்   மிகவும்   ஈடுபாடும்   தன்மையும்,  புனித  தன்மையை    ஆதரிக்கும்   குணமும்,  தியாகம்,.   விட்டுக்    கொடுக்கும்   தன்மையும்   இருக்கும்.

சமுதாயத்தில்      நல்ல  ஒழுக்கத்தோடு   வாழ்வார்.  பிறருக்கு    வழிகாட்டியாக   இருக்க   வேண்டும்   நம்மை  பார்த்து   மற்றவர்கள்   குறை   சொல்லக்  கூடாது என    வாழ்பவர்.   கற்புக்கு     இவர்  காரகன். பெண்கள் ஜாதகத்தில் குரு கெடக்கூடாது.

குரு  உச்சம்  பெற்று   இருந்தால் அந்த   ஜாதகர்  எல்லா    இன்பங்களையும்   அவரின்   விருப்பத்திற்கேற்றவாறு   பெற  முடியும்.  வேத  மார்க்கங்களில்     ஈடுபடுவதில்  இன்பம்   தருவார்.   பலமுள்ள குரு,  தெய்வ   வழிபாட்டிலும்   இன்பம்  தருவார்.  நற்பணிகளைச்  செய்வதன்  மூலம்   இன்பம்  தருவார்.,   செல்வம்  தருவார்.    சேமிக்கவும்   வைப்பார்.   எதிர்காலத்தைப்  பற்றி  கவலைப்  போக்குவார்.  நல்ல  கணவன்  அல்லது  மனைவியை  அளித்து   வாழ்க்கைச்   சுகத்தைப்  பெற  வைப்பார்.

கடகத்தில்   5 ம்   பாகையில்   பிறந்தவர்கள்   புனிதாத்மாக்கள்,  பூர்வ  புண்ணியம்  பெற்றவர்கள்   ஆவார்கள்.   பூவுலக    இன்பங்களை   முற்றிலும்    பெறக்   கூடியவர்கள்.  பொதுவாக    கடக  குருவால்   நன்மை  உண்டாக   உத்திரவாதம்   உண்டு

குரு  இருளை   நீக்குபவர்   என்று  பொருள்.   மெய்யுணர்வுக்கும்   ஆத்ம்   சிந்தனைக்கு    அதிபதி   குரு   ஆவார்.  முழுமையான   உடல்,   மன  ரீதியான   வளர்ச்சியடைந்த    மனிதர்,   வழிகாட்டி,   மூளைக்கு  அதிபதி,இருதயத்துக்கு அதிபதி.  தன்னறிவு,  தீப  வெளிச்சம்,   குரு  மஞ்சள்,  குருக்கு   கவர்ச்சி  உண்டு-பெண்கள்  மஞ்சள்  பூசி    கவர்ச்சியை   தக்க   வைத்துக்   கொள்கிறார்கள்.  

ஜீவ   காரகன் – மஞ்சள்   நிறம்  எல்லாம்   குரு   . மஞ்சள்   நிற  பூக்கள்   -மார்கழி   மாதம்  -குருவை குறிக்கும்..குருவுடன்    புதன்  சேர்க்கை   சின்ன  வீடு   உண்டு.குரு லக்னத்துக்கு 12ல் மறைந்தால் காதல் திருமணம்...குரு கெட்டவன் கூறு கெட்டவன்...குருதான் ஊரார் மத்தியில் செல்வாக்கு, கெளரவம் பெற்று தருகிறது...

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்

சுக்கிரன்

ஒருவருக்கு  பொன்,  பொருள்,   அழகமைந்த   மனைவி,   சுகமான   வாழ்க்கை,  உயர் பதவி,  கலை,   வாகன்   யோகம்   போன்றவைகளை   சிறப்புடன்   வழங்கி   வாழ  வைப்பதில்    சுப   கிரகங்களின்   வரிசையில்   குருவிற்கு   அடுத்து   சுக்ரன்    அமைகிறார்.

அசுர குரு   சுக்ரன்  ஆவார்.  இவர்   இகலோக   ஆசையை   அளிப்பவர்.   சுக்ரன்   விடி  வெள்ளி  பிரகாஷமாக   தெரியும்  - இளமையாக   இருப்பவர்கள்   ஜொலிப்பார்கள்  ஆக   இளமையும்,  ரஸனையையும்  அளிப்பவர்.  ஆடல்  பாடல்   முதலான   நளின   கலைகளுக்கு   நாயகன்,  மனைவியைக்   கொடுத்து    மகிழ்ச்சிகாரமான    இல்லற   வாழ்க்கையைத்  துவக்கி   வைத்துப்   பரிபாலனம்  செய்வர்.

வேஷக்காரன்,   நடிகர்கள்,    கலைத்துறைக்காரன்கன்,  ஒப்பனைப் பொருட்கள்,  அலங்கார   வஸ்த்துக்கள்,  ஆடம்பர  வஸ்துகள்,  சுக்ரன்  என்றால்    வெள்ளை   என்று  பொருள்,  வெண்மை   பொருள்கள்   அனைத்துக்கும்   காரகன்,    சுக்கில  பட்சம் ,  வைரம்   மிக    பிரகாஷம்  ஜொலிப்பது  போல்  எல்லாம்   சுக்கிரன் ,  இளம் பெண்   குறிப்பது  சுக்ரன், விடியற்  காலை   பொழுத்தைக்  குறிப்பவர்   இவர்,   வான்   மண்டலத்தில்   விடியல்   காலை  பொழுதில்   சுக்ரன்   தெரிகிறார்.   அதிகாலையில்   மனிதனுக்கு  காமக் கிளர்ச்சியை   ஏற்படுத்துவதும்   இவர்  தான்.  காமத்துக்   காரன்   சுக்ரன்.

சுக்ரன்    இல்லற்   வாழ்வுக்குறியவர்,  ஆணுக்கு   மனைவியைப்பற்றியும்,  பெண்ணுக்கு  மண   வாழ்க்கையைப்  பற்றியும்  சொல்லுகின்றவர்.   உலக   வாழ்கையில்     இன்பமும்  செளபாக்கியங்களையும்   சுக  போக    செளரியங்களையும்  தருபவன்  சுக்ரன்.   வாகன  வசதிகளை       அளிப்பவர்   இவர்,  மிக  உயர்ந்த    வாகனமா,  நடுத்தரமான   வாகனமா,  கடைசி   நிலை    வாகனமா,  ஒன்றுக்கு   மேற்பட்ட   வாகனமா  என   குறிப்பவர்   இவர்தான்.

ஒருவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்யக்  கூடியவர்  இவர்.
கையில்   காசுடையவர்களாய்   வைப்பரும்,   சொந்த  வீடு அளிப்பவரும்  இவர்தான்,  கலை  உலகில்   சிறப்பான   நிலையை  அளிப்பவர்.  பெண்களிடம்  மோகத்தை  அளிப்பவரும்,  வாழ்நாள்   முழுவதும்   அதே  நினைப்பில்   இருக்க  வைப்பவர்  இவர்தான்.

வலுப்  பெற்ற  சுக்ரன்   கலாரசனை என்கின்ற   அற்புத  உணர்வு அளிப்பவர்,  அழகு,  அழகின்   படைப்பான  ஆரணங்கு,  அந்த    ஆரணங்கத்தின்  மீது  காதல்   கொண்டு   சுகமடையும்   தகுதி, சிற்றின்பம்,    திருமணம்  முதலான  ஆணுக்கு  அளிப்பவர்.  அதே  போல்  பெண்களுக்கு   நளினத்   தன்மையையும்   அழகான  தோற்றம்,  கவர்ச்சி,   வீரியசக்தி,  அறிவாற்றல்,   மனத்துக்கிசைந்த   கணவனை   அடையும்   தகுதியையும்,  சுக  போகங்களில்   திளைத்து   மகிழும்  ஆற்றலையும்  வழங்குவார்.  மாட   மாளிகையில்     வாழ்க்கை   நடத்தும்  பாக்கியத்தை  இரு  பாலருக்கும்  அளிப்பவர்.

சுக்ரன்  என்றால்   இன்பம்   என்று பொருள்  கொள்ளலாம்.   அன்பு,  பாசம்,  காதல்  ஆகிய   மூன்று   இன்பங்களை  அளிக்கக்  கூடியவர்.   இன்பம் என்கிற   ஆனந்தத்தை  அடைவதற்குரிய    மனநிலையை   உருவாக்குகிறவர்  சுக்ரன்.   இவர் கலை   உணர்வால்  இன்பம்  உண்டாக்குவார்.    அழகு,  ஆராதனையால்   இன்பம்   ஏற்படுத்துவார்.  
                         
கலையம்சமுள்ள    பொருட்  சேர்க்கையால்  இன்பம்  தருவார்.  அழகு    வனிதையால்   ஆடவருக்கு  சுகம் ,வாசனைத்    திரவியங்களால்    உற்சாகம்   ஊட்டுவார்.    இசையால்,   இசையுணர்வால்     இன்பம்  தருவார்,  கற்பனை   வளத்தால்   மாபெரும்  இன்பம்   தருவார்
வாசனை  திரவியங்களால்  சுகானுபவம்    அளிப்பவார்.   கவியின்பம்  தருவார்.   காவிய  இன்பம்   தருவார்.    கற்பனை   வளத்தால்  மா பெரும்   இன்பம்   தருவார்.   நடன   நாகரீக   மணிகளை   உருவாக்குவார்.   நாடகக்  கலைஞர்களைத்   தோற்றுவிப்பார்.  வெண்  திரைச்   சலனப்படத்திற்கு   ஆதாரம்  அவர்.  கண்களைப்   பிரதிபலிப்பவர்,  ஜனன    உறுப்புகளைக்   காப்போன்.

மேலே   குறிப்பிட்ட   இன்பத்தை   யாருக்கு   தருவார்  என்றால்   மீனத்தில்   சுக்கிரன்  உச்சம்  பெற்று   இருக்க,   அவருக்கு   நட்பு   கிரகங்களின்    தொடர்பும்,  பகை   கிரக  தொடர்பு   இன்றி   இருத்தால் கண்டிப்பாக   கிடைக்கும்.  அதே  போல்    சுக்ரன்  ஆட்சி   வீடான    ரிஷபம்  மற்றும்   துலாமில்   இருந்தாலும்   சுக   வாழ்வு  உண்டு.    [சுக்ரனுக்கு   புதன்   நட்பு     கிரகம்.   புதனின்   வீடான  கன்னியில்   சுக்ரன்    நீசம்  அடைகிறார்.  அங்கு   நீச   பங்கம்  பெறாமல்    இருந்தால்  சுக   வாழ்வு   எதிர்பார்க்க   முடியாது...

ஜாதகத்தில் சனி தரும் பலன்கள்

சனி

விதியின்    விதையைக்  குறிப்பவர்   சனி  ஆகும்.   ஈஸ்வரன்   பட்டம்  பெற்றவர்  ஆவார்.   கர்மத்தை   அனுபவிக்க    செய்பவர்  சனி,   சனி  கர்ம    காரகன்.  கர்ம   வினைக்கு  ஏற்ப   வாழ்க்கை  அமைகிறது.   ஒவ்வொரு   மனிதனும்   தன்  கர்ம    வினையை    அனுபவிக்க    பிறவி   எடுக்கிறார்.  இதிலிருந்து  யாரும்     தப்ப   முடியாது.    இதில்   விதி   விலக்கு   என்பது    கிடையாது.     பொதுவாக    சனியை    துன்பம்    அளிப்பவர்  என   கூறப்படுகிறது......

ஆனால்   உண்மையில்   துன்பம்  அளிக்காதவர்  ஆவார்.சனி   சிறந்த  நீதிமான்.     ஒருவரின்  முன்வினை      பயனைத் துல்லியமாக   அனுபவிக்கச்  செய்வார்.  பாகு  பாடின்றி   தம்  வாழ்க்கையில்  வழி   நடத்துவார்.   அவரவர்    கரும   வினைக்கு   ஏற்ப   கஷ்டத்தையும்,   நன்மைகளையும்    கொடுக்கிறார்.   சனி   ஒரு    உண்மையாக   உழைப்பவர்.    24  மணி     நேரமும்    ஓய்வு     இன்றி    உழைப்பவர்.கடுமையான உழைப்பாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் சனி பலமாக இருப்பார்..

சனி  ஒரு   குழந்தைப்  போல்  அல்லது   கிளியை  போல் என்று   சொல்லாம்.   அதாவது   சொன்னதைத்   திருப்பிச்   சொல்லும்  கிளியைப்   போல்   செய்த    கர்மாவை      திருப்பிச்   செய்பவர்.   முப்பிறவியில்   செய்த     கர்மாவை    இப்பிறவியில்   கொடுக்கும்    கர்மாகாரன்   ஆவார்.  ஒருவருடைய     ஆயுளை   நிர்ணயிருக்கும்   அற்புதமான      சக்தியுடையவர்,   பொருள்     எப்படி   விரயமாகிறது  என்பதைக்   குறிப்பிடுவதும்    இவர்தான்.12ல் கேது மறுபிறவி இல்லையென்றாலும் எல்ல கர்மவையும் இப்போதே கொடுத்து திக்குமுக்காட செய்பவர்.

வான்   மண்டலத்தில்     மிக   தொலைவில்   இருப்பவர்.   அதனால் சனி இருள் கிரகம் ஆகிறார்..சனி இரண்டரை வருடம் ஒரு ராசியை கடக்க ஆவதால் மந்தன் ,முடவன் எனப்படுகிறார்..சனியின்   தந்தையான    சூரியனின்    வீடான   சிம்மத்திற்கு 7 வது   ராசி   கும்ப   ராசி.    சூரியனின்    மனைவியான   சாயா    தேவியுன்    வீடு.   இந்த  ராசியில்தான்       சனி   பிறந்தார்.   [கும்ப   ராசியின்  சின்னம்    குடமாகும்.   குடத்தின்    உள்ளே   நிழல்    [சாயா  தேவி]     உள்ளார்.     பகல்    பொழுது   சூரிய   ஒளி     குடத்தில்   விழுவதால்  சாயா  தேவி   வலு  பெற்றதால்    சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த    ராசியில்    பலம்   அதிகம்   அதாவது     மூல   திரிகோண   இராசியாகும்.  திசை மேற்கு என்பதால் மேற்கு திசை பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கிரனின்   வீடான    துலாமில்    உச்சம்   பெறுகிறார்.   சுக்கிரன்   செல்வத்திற்கு    உரியவர்,   சனி   உழைப்பாளி,   பொதுவாக   எல்லோரும்   செல்வத்தை  அடைய    [வேலை   செய்கிறார்கள்]   உழைக்கிறார்கள்.

சனி  கிழவனுக்கு   உடைய   தோற்றம்,    சோம்பேறி,  உலக   ஞானம்     முழுமையாக   இருக்கும்,    இயலாமையால்    கவனித்துக்  கொண்டிருப்பதால்  ஞானம்   பெறுகிறார்.   கிழவனுக்கு   தாம்பத்ய  தகுதியில்லை,  அலிகிரகம், வேகமாக   செயல்  பட  முடியாது,  வயதானவர்கள்   மெதுவாகவும்,    மிக   தாமதமாக  செல்வார்கள்.   நிதனாமாக   செயல்பட்டதால்   காரியம்    நன்றாகவும்,   கண்டிப்பாகவும்  செய்து   முடிப்பார்,
 கறுப்பாக    இருக்கும்    அனைத்துப்    பொருள்களுக்கும்   காரகன்    சனி ஆவார்.காகம்,  எருமை,   எலி,   எள்.குப்பையில்   கிடந்த    ஒருவரைச்   சனி   கோபுரத்தில்   ஏற்றி     விட்டுப்   போய்விடுவார்,  அதன்   பிறகு    அந்தக்   குடும்பம்   தலைமுறையாக    செல்வத்தையும்   சுகத்தையும்   அனுபவித்துக்   கொண்டு   இருக்கும்,  அதே   போல்   கோபுர   உச்சியிலிருந்து    ஒருவரை   தூக்கி   சாக்கடையில்   வீசி   விட்டுப்    போனாலும்  போய் விடுவார்,  அதன்  பிறகு     அந்த  மனிதர்   எப்பொழுதும்   எழுந்து    மேலே   வருவார்  என்பது   யாராலும்    அறிய   முடியாத   விஷயம்.

சனி  பகவானுக்குரிய    தேவதை    சாட்சாத்   எமதர்ம       ராஜனே. எமனுக்கு  எமனாகிய    சிவபெருமானை    சரணடைவதாலும்    சனி   பகவானால்   ஏற்படும்   தோஷங்களீலிருந்து   நிவர்த்தி   அடையலாம்  என்பதாலேயே   சிவன்   கோவில்களில்    தவறாமல்    சனி  பகவானோடு      நவக்கிரகங்களையும்    பிரதிஷ்டை   செய்து    வைக்கிறார்கள்.