உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம்

இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒருவித சக்தி இருக்கிறது. சிலர் அதை உயிர் என்றும் மனிதசக்தி, இறைசக்தி, ஞானசக்தி அல்லது மிருகசக்தி என்றும் சொல்வார்கள். அது அவரவரின் விருப்பப்படியே இருக்கட்டும். அன்பென்னும் சக்தி (இரத்தம்) அநேக நரம்புகளின் வழியாக நாடி-சிரை வரை சென்று வியாபித்துள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம். இவனுடைய எண்ணம், செய்கை பழக்க வழக்கமெல்லாம் அறிமுகம் செய்யப் படுகின்றன. அவனவன் செய்கையை அவன் முகம் சொல்லும். அவன் கண்ணும் ஒரு கதையை சொல்லும்.
நமது சரீரத்தில் நாடிகளின் செயல்பாடு மிக முக்கியமானது அதில் அசுர நாடிகளும் தேவ நாடிகளும் இருக்கின்றன. அசுர நாடி மிகச் சொற்பமே. ஆயினும் அதன் விருத்தியே மாயப் பிரபஞ்சமாகி ஆசைக்கு உட்பட்டு தீய வினைகள் அதிகரிக்கின்றன.
 
“விதியையும் விதித்து என்னை விதித்திட்ட
மதியையும் விதித்து அம்மதி மாயையில்
பதிய வைத்த நின்னருளை எப்படி கண்டு களிப்பதே”
–தாயுமானவர்—
 
மனிதனின் கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. தெய்வீகம் – இய்றக்கை – தாந்திரீகம் அல்லது சக்தி – ஸ்தூலம்-சம்பத் என மூன்றாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களுக்கும் இந்த பகுதியில் தொடர்புண்டு. தத்துவ சாத்திரங்களில் ஆத்மா – மணம் -சரீரம் என்ற இம் மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதனோடு சம்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களும் அடியிலே உள்ள மேடுகள் கிரகங்களின் பலா பலத்தைத் அறியத் தருகின்றன.
ஆள்காட்டும் முதல் விரல் – குரு, நடுவில் உள்ள இரண்டாவது விரல்- சனி, மூன்றாவது பவித்திர விரல் – சூரியன், நான்காவது சுண்டு விரல் – புதன். புதனுக்கு அடுத்த கீழ்ப்பாகம் – செவ்வாய், கட்டை விரலுக்குக் கீழே உள்ள மேடு – சுக்கிரன், உள்ளங் கையில் செவ்வாய்க்கு கீழ்மேடு – சந்திரன்.
நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர். இந்தரேகை தெய்வீகமானது. செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகின்ற ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர் கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போயிருக்கும் ரேகைக்கு ஆயுள் ரேகை என்று பெயர். சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதிரேகை என்று பெயர். 
 
ஒவ்வொரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக்கப்பட்ட பாகத்துக்கு “அங்குலாஸ்தி” என்று பெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது அங்குலா ஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது.
 
கட்டை விரல் – ஆத்ம சக்தி
ஆள்காட்டி விரல் – சக்தி
நடுவிரல் – விதிப்பயன்
மோதிரவிரல் – பிரகாசம்
சுண்டுவிரல் – சாத்திரம்
 
இப்போது உங்கள் கையின் மகத்துவத்தைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டு இருப்பீர்கள். இதை புரிந்து கொண்டால் தான் இனி வரும் கருத்துக்கள் தங்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என நம்புகிறேன்.
கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்துடன் தொடர்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட விரல்களுக்கு குறிப்பிட்ட உடல் உறுப்புக்களுடன் தொடர்பு உள்ளது. எனவே கை விரல்கள், எந்த பகுதிகளுக்கு தொடர்புள்ளது என்று தெரிந்து கொண்டு அதன்படி பிரச்சனைகளுக்குத் தகுந்த விரல்களில், அதற்க்கு உரிய (GEMS) நவரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
 
ஆள்காட்டிவிரல்:
              “தர்ஜனி” என்று அழைக்கப்படும் இது குருவின் ஆதிக்க்தத்தில் உள்ள விரலாகும். இந்த விரலின் கீழ் தான் குருமேடு இருக்கிறது. இந்த விரலானது சுவாச சம்பந்தமான நரம்புகளுடனும் வயிறு சம்மந்தப்பட்ட நரம்புகளுடனும் நேரடித் தொடர்பு உடையது. எனவே நுரையீரல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இந்த ஆள் காட்டி விரலில் தகுந்த(GEMS) ரத்தன கற்களை மோதிரத்தில் கட்டி அணியவும். சந்திரன்- செவ்வாய் – குரு ஆகிய கிரகங்களுக்கான முத்து – பவளம் – புஷ்பராகம் கற்களை ஆள்காட்டி விரலில் தான் அணிய வேண்டும். நல்ல தூக்கம் வேண்டுமானால் வெள்ளை முத்து மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிந்து கொண்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.
 
நடுவிரல் :
               இது கையின் மத்திய விரலாகும். இது சனியின் நேரடி ஆதிக்கத்தில் உள்ள விரலாகும். இது சிறுகுடல் – மணம் – மூளை – லிவர் மற்றும் மனப் பிரச்சனைகளுடன் தொடர்புள்ளது. ஆகவே புதன் – ராகு-சுக்கிரனாகிய கிரகங்களுக்கான கற்களை மத்திய நடு விரலில் அணிய வேண்டும். சனிபகவான் இந்த மூன்று கிரகங்களுக்கும் நட்ப்பாகும். நீலம்-வெள்ளை பவளம் – வெள்ளை முத்து – வைரம், வெள்ளை ஜிர்கான் ஆகிய கற்கள் உள்ள மோதிரத்தை நடு விரலில் அணிய வேண்டும்.
 
மோதிரவிரல்:
                      இது “அநாமிகா” என்றும் சொல்லப்படும். இது வாழ்வின் மகிழ்சிகரமான பகுதிகளை உள்ளடக்கியது. சூரியன் இதன் அதிபதியாக இருக்கிறார். இந்த விரல் கிட்னி – வயிறு – ஜனன – உற்பத்தி உறுப்புக்கள் ரத்த ஓட்டத்துடன் சமந்தப்பட்டதாகும். குருவின் புஷ்பராகம் செவ்வாயின் பவளம் – கேதுவின் வைடூரியம் – ஆகிய(GEMS) ரத்தன கற்களால் கட்டிய மோதிரத்தை இந்த விரலில் அணியவும். ரூபி – பவளம் – வைடூரியம்-வெள்ளை – முத்து – மூன்ஸ்டோன்- மஞ்சள்புஷ்பராகம் – டோபாஸ் ஆகியவற்றை இந்த விரலில் அணியவும். 
 
சுண்டுவிரல்:
                        இது புதனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுண்டு விரல் ஜனன உறுப்புக்கள்-முழங்கால்-பாதம்-கால்கள் ஆகிய நரம்புகளுடன் தொடர்புள்ளது. நம் சரீரத்தில் இடுப்புக்குக் கீழே உள்ளபகுதிகளில் பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் சுண்டு விரலில் அதற்குத் தகுந்த ரத்தன கற்களை மோதிரமாகக் கட்டி அணிந்து வந்தால் நல்ல பலன் தரும். ராகு, சனிக்குரிய ரத்தினகற்களையும் சுண்டு விரலில் அணியலாம். புதன் சனிக்கு நட்பு கிரகமாவதால் நீலம். கோமேதகம் ஆகியவைகளை இந்த விரலில் அணியலாம்.
 
                         ஒவ்வொரு கிரகமும் அபாரமான ஆற்றல்களை உடையது. இத்தகைய ஆற்றல்களை நாம் நமது நலன்களுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடையலாம். தொழில் – வியாபாரங்கள் அமோகமாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் நல்ல வசதியான வாழ்க்கை அமைப்பு கிடைக்கும். தடைப்பட்ட திருமனம் இனிதே கைகூடும். கணவன்-மனைவி உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். 
 
                        கிரகங்களின் நன்மைகளை நாம் அடைய அக்கிரகங்கள் தங்களது உச்ச ராசிகளிலும் ஆட்சி ராசிகளிலும் கோச்சாரத்தில் சஞ்சாராம் செய்யும் போது பலம் அடைகின்றன. அந்த காலக் கட்டத்தில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய இரத்தின (GEMS) கற்களை மோதிரமாகக் கட்டி அணிந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் உடல் நலக் குறைவாக உள்ளவர்கள் விரைவில் குணமாவர்கள். அமாவாசை – பௌர்ணமி ஆகிய இரண்டு நாட்களில் மோதிரத்தை சுத்தமான நீரில் கழுவி வாசனை திரவியம் சேர்த்து மீண்டும் கையில் அணிந்து கொள்வது, தாங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் வலிமை அதிகரிக்கும். இது எங்களது அனுபவ ஆய்வின் அடிபடையில் தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

No comments:

Post a Comment