சந்திர திசை
ஒருவரை
கவிஞராக்கும் திறனும் கற்பனை வளம் அதிகரிக்க கூடிய ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு. ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற
நட்சத்திரங்கள் சந்திரனுக்குரியதாகும். இந்த
நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கு சந்திர திசை முதல் திசையாக நடைபெறும். சந்திரனின் தசா காலங்கள் 10 வருடங்களாகும்.
மாதூர்காரகனாகிய சந்திரன் தாயார், பராசக்தி, சுவையான, விருந்து உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், உடல்நிலை, சீதள நோய்கள், இடதுகண், புருவம், அரிசி, உப்பு, மீன், கடல் கடந்து செல்லும் பயணங்கள், தெய்வீக பணி, மனநிம்மதி, கற்பனை வளம், நிம்மதியான உறக்கம் போன்றவற்றிற்கு காரகனாகுகிறார்.
சந்திரனானவர் ஒருவரின் ஜாதகத்தில் பலம்
பெற்று அமைந்து திசை நடைபெற்றால் நல்ல மனவலிமை தைரியம், துணிவு, அழகான உடலமைப்பு, மற்றவரை கவரும் பேச்சாற்றல், தாய்க்கு நல்ல உயர்வுகள் உண்டாகும்.
அதிலும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைய
பெற்று திசை நடந்தால் சமுதாயத்தில் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள்
அமையும். அதிலும் சந்திரன் 12&ல் இருந்தாலும் 12&ம் அதிபதியின் சேர்க்கையோ தொடர்போ இருந்தாலும் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு
பயணங்களால் அனுகூலம் பொருளாதார ரீதியாக மேன்மை
உண்டாகும்.
சந்திரன் பகை நீசம் பெற்று அமைந்து சர்ப
கிரகங்களான ராகு அல்லது கேதுவின்
சேர்க்கைப் பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை, ஜல தொடர்புடைய நோய்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு, ஏதிலும் துணிந்து செயல்பட முடியாத நிலை, பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகைமை ஏற்படும். பயணங்களால் அலைச்சல்
டென்ஷன் உண்டாகும் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 லும் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 லும் அமைந்தால் நற்பலன்கள் ஏற்படும். அது தேய்பிறை சந்திரனாக இருந்தால் 3,6,10,11 ல் அமைந்தால் மேன்மையான பலன்கள்
உண்டாகும்.
சந்திரன்&குரு சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றாலும் இக்கிரகங்களின்
நட்சத்திரங்களில் அமைந்து திசை நடைபெற்றாலும் அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.
சந்திரன் பலமாக
அமைந்து குழந்தை பருவத்தில் சந்திர திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், குடும்பத்தில் சுபிட்சம், தாய்க்கு அனுகூலங்கள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால்
நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை, பெரியோர்களை மதித்து நடக்கும் பண்பு, சிறந்த பேச்சாற்றல் ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால், சிறப்பான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் நல்ல கௌரவம் அந்தஸ்து, பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முதுமை பருவத்தில் நடை
பெற்றால் நல்ல உடலமைப்பு, தெய்வீக காரிங்களில் ஈடுபாடு மகிழ்ச்சி
சந்தோசம் யாவும் அதிகரிக்கும்.
அதுவே சந்தின் பலமிழந்து குழந்தை
பருவத்தில் நடைபெற்றால் ஜல சம்மந்தபட்ட பாதிப்பு, தாய்க்கு கண்டம் ஏற்படும் இளம் வயதில்
ஏற்பட்டதால் கல்வியில் மந்தம் மனகுழப்பம்
ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை வீண் குழப்பங்கள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பு, ஜல சம்மந்தப்பட்ட நோய்கள், எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட
முடியாத நிலை, நீரால் கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
சந்திர
திசை சந்திர புக்தி
சந்திர திசை சந்திர புக்தி காலங்களானது 10 மாதங்களாகும்.
சந்திர பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர
திரிகோணங்களில் இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக இருந்து அவர் 2,11 ஆகிய ஸ்தானங்களில்
அமைந்திருந்தாலும் நட்பு கிரக சேர்க்கை, பார்வை சாரம் பெற்றிருந்தாலும் அரசாங்க
வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுபகாரியம் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி மனை, வண்டி வாகன, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். சந்திரனுக்கு குருபார்வையிருந்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.
அதுவே சந்திரன் தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து, பகை, நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கைப் பார்வை பெற்றோ இருந்தாலும் 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும், பண விரயங்கள் ஏற்படும், மனக்குழப்பங்கள், ஏதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம் கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
உற்றார் உறவினர்களிடையே பகைமை, அரசு வழியில் தொல்லை, இடம் விட்டு இடம் செல்லக் கூடிய சூழ்நிலை
போன்றவை ஏற்படும்.
சந்திர திசையில் செவ்வாய் புக்தி
சந்திர திசையில் செவ்வாய் புக்தி 7மாதங்கள் நடைபெறும்.
செவ்வாய் பகவான் பலம் பெற்று
ஜென்மலக்னத்திற்கும் திசா நாதனுக்கும் கேந்திர திரி கோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நட்புகிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும் செயற்கரிய செயல்களை செய்யும் வீரமும், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் பெயர் புகழ் உயரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் பூமி மனை சேர்க்கை, சகோதர வழியில் அனுகூலம், அரசாங்க வழியில், உயர்பதவிகள், விருதுகள் பெறும் வாய்ப்பு உண்டாகும்
நெருப்பு மருந்து சம்மந்தப்பட்ட துறைகளில் லாபம் கிட்டும்.
செவ்வாய் பகை நீசமாகி பாவிகள் சேர்க்கை
பார்வையுடன் 8,12ல் அமைந்திருந்தால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, ரத்த காயம் ஏற்படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம், எதிரிகளால் தொல்லை, மனதில் பயம், பணவிரயம், வீடு மனை பூமி வண்டி வாகனங்களால் வீண் விரயம், சகோதரர்களிடையே ஒற்றுமையில்லாத நிலை, அரசாங்கத்திற்கு அபாரதம் செலுத்த வேண்டிய கட்டாயம், தொழிலில் நலிவு, தீயால் சொத்துக்கள் சேதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும், குடும்ப வாழ்விலும் பிரச்சனைகள்
உண்டாகும்.
சந்திர தசா ராகு புக்தி
சந்திர திசை ராகுபுக்தி காலங்கள் 1 வருடம் 6மாதங்களாகும்.
ராகு பகவான் சுப பார்வை சேர்க்கையுடன் 3,6,10,11&ம் வீடுகளில் அமைந்து சுபகிரக சம்பந்தம் பெற்றிருந்தாலும் ராகு
நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தாலும்
வியாதி இல்லாமல் நல்ல ஆரோக்கியம், எந்த
எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, எதிர்பாராத பெரிய அளவில் பதவிகள்
கிடைக்கப் பெற்று பெயர் புகழ் யாவும் உயரும் வாய்ப்பு
உண்டாகும். எடுக்கும் காரியங்கள் யாவும் ஜெயமாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கைகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்
வாய்ப்புகளும் அமையும்.
ராகு பகவான் 2,5,8 போன்ற இடங்களிலோ பாவிகளின் சேர்க்கை, பார்வை பெற்று காணப்பட்டாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தாலும்
உடல் நிலையில் பாதிப்பு, உண்ணும் உணவே விஷமாக கூடிய நிலை, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தந்தைக்கு கண்டம், பிரிவு, தாய்க்கு தோஷம் வியாதி, குடும்ப வாழ்வில் பிரிவு பிரச்சனை, தேவையற்ற
நண்பர்களின் சேர்க்கையால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, தோல் வியாதி, அரசாங்க வழியில் தண்டனையை அடையக் கூடிய நிலை போன்றவற்றால் மனநிம்மதி குறையும்.
சந்திர திசா குருபுக்தி
சந்திர திசை குருபுக்தி காலங்கள் 1 வருடம் 4 மாதங்களாகும்.
குருபகவான் ஜெனன காலத்தில் ஆட்சியோ
உச்சமோ பெற்றிருந்தாலும் தசா நாதனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் 2,11&ல் அமையப் பெற்றாலும், பொன் பொருள் சேர்க்கை செல்வம் செல்வாக்கு உயரக கூடிய யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் அனுகூலம், உடல் நிலையில் மேன்மை, வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம், கல்வியில் மேன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
குருபகவான் பலமிழந்து பகை நீசமாகி 6,8,12 லும் திசா நாதனுக்கு 6,8,12 லும் காணப்பட்டாலும் தன விரயம் ஏற்படும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, நாணயக் குறைவு, அவமானம் போன்றவை ஏற்படும். அரசாங்கம்
மூலம் எதிர்ப்பு உண்டாகும். தெய்வீக
காரியங்களில் ஈடுபட இயலாத நிலை, குடும்பத்தில்
கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, திராத வியாதி, கடன் தொல்லை, புத்திரர்களால்
மனநிம்மதி குறைவு, பெரியவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடிய நிலை, உற்றார் உறவினர்களிடையே வீண் பிரச்சனைகள்
ஏற்படும்.
சந்திர திசை சனி புக்தி
சந்திர திசையில் சனி புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சனி பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் உற்றார் உறவினர்களிடையே
ஒற்றுமை, உதவி உண்டாகும். பொருளாதார மேன்மை சேமிப்பு பெருகும் வாய்ப்பு, எடுக்கின்ற காரியங்களால் வெற்றி, வேலையாட்களால் ஆதரவு, வண்டி வாகனங்களால் மற்றும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
சனி பலமிழந்து இருந்தால் உடல் நிலையில்
பாதிப்பு, நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலை, குடும்பத்தில் கலகம், வேலையாட்களால் பிரச்சனை, நெருங்கியர்களே துரோகம் செய்ய கூடிய நிலை, இருக்கும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை தேவையற்ற வம்பு வழக்குகள், எதிர்பாராக விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.
சந்திர திசை புதன் புக்தி
சந்திர திசையில் புதன் புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும்.
புதன் பகவான் பலம் பெற்று
அமைந்திருந்தால் சிறப்பான வாக்கு சாதுர்யம், பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றால் மற்றவரைக் கவரக் கூடிய அமைப்பு, பொருளாதார மேன்மை உற்றார் உறவினர்களால்
ஆதரவு கல்வியில் மேன்மை, கற்ற கல்வியால் உயர்வுகளை வகிக்கும் யோகம், புக்தி கூர்மை, பல வித்தைகளை கற்கும் ஆற்றல் மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை
ஏற்படும்.
புதன் பலமிழந்திருந்தால் உற்றார்
உறவினர்களிடமும் தாய் மாமன் வழியிலும் பகை, கல்வியில் மந்த நிலை, கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை, ஞாபக சக்தி குறைவு, புத்திர பாக்கியம்
உண்டாக தடை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் போன்றவை ஏற்£ட்டு மன நிம்மதி குறையும்.
சந்திர திசா கேது புக்தி
சந்திர திசை கேதுபுக்தி காலங்கள் 7 மாதங்களாகும்.
கேது சுப பலம் பெற்றிருந்தால் நல்ல
தெய்வீக சிந்தனை, பக்தி, பொருளதார நிலையில் உயர்வு, அசையும் அசையா சொத்துகளால் லாபம், மருத்துவ விஞ்ஞான துறைகளில் நாட்டம், மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை, அசையா சொத்துகளும் சேரும் வாய்ப்பு ஏற்படும்.
கேது நின்ற வீட்டதிபதி பலவீனமாக
இருந்தாலும், கேது அசுப ப்பலம் பெற்றிருந்தாலும், ஏதிலும் பயம், மனக்குழப்பம், ஏதிலும் முழு ஈடுபாடற்ற நிலை வயிற்று வலி, தோல் நோய்களால் பாதிப்பு, இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலையில் கணவன் மனைவியிடையே பிரிவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, உறவிர்களிடையே பகை, எதிர்பாராத வீண் விரயங்கள், திருமணம் நடைபெற தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் அரசு
வழியில் தண்டனை, வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
சந்திர திசை சுக்கிர புக்தி
சந்திர திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிர பகவான் பலம் பெற்று
அமைந்திருந்தால் பெண்களால் அனுகூலம்,செல்வ சேர்க்கை, வீடு மனை, பூமி மற்றும் ஆடை
ஆபரண சேர்க்கை, வண்டி வாகனங்களால் வாங்கும் யோகம், நல்ல தூக்கம், கட்டில் சுகம், கலைத் தொழில் ஈடுபாடு குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கை, யாவும் உண்டாகும்.
சுக்கிர பகவான் பலமிழந்திருந்தால் மனதில்
உற்சாக குறைவு, தேவையற்ற குழப்பம், மர்மஸ்தானங்களில்
பாதிப்பு, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, கடன் வறுமை, பெண்களால் அவமானம், வீடுமனை வண்டி வாகனம், சுகவாழ்வை இழக்கும் நிலை ஏற்படும்.
சந்திர திசை சூரிய புக்தி
சந்திர திசையில் சூரிய புக்தியானது 6 மாதகளால் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் வீரம் விவேகம் கூடும். எடுக்கும்
காரியங்களில் வெற்றி மேல்
வெற்றிகிட்டும். தந்தைக்கு மேன்மை தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் பதவிகள், பெருமைகள் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். ஆண் புத்திர பாக்கியம்
அமையும். பொருளாதார நிலை உயர்வடையும்.
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண
சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன்
பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும்
சூழ்நிலை உண்டாகும்.
சந்திரன் பரிகாரம்
திங்கட்கிழமைகளில் விரதம் இருந்தல்
பௌர்ணமி நாட்களில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைத்தல் செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தல்
திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபடுதல் சந்திரனின் அதிதேவதையான பார்வதியை திங்களன்று வணங்குதல், 2 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிதல்
வெள்ளை நிற ஆடைகளை உபயோகத்தால் போன்றவை சந்திரனுக்கு செய்யும் பரிகாரங்களாகும். முத்தை உடலில் படும்படி அணிவது நல்லது.
No comments:
Post a Comment