ஒரு ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து 5 ஆம் இடம் புத்திர பாவத்தை குறிப்பதாகும். புத்தி, மந்திரம், நீதியின் நிலை, இருதயம், சக்தி ஆகியவற்றையும் 5 ஆம் இடத்தை கொண்டு அறியலாம்.
ஐந்தாம் இடம்
மேஷமானால் பிரியமான புத்திரன் அமைகிறான். தேவதையின் அருள் கிடைக்கிறது. குடும்ப
சொத்தை வாரிசாக பெரும் அமைப்பு உண்டு.
ஐந்தாம் இடம்
ரிஷபமானால் நல்ல அழகுள்ள பெண்கள் பிறப்பார்கள். இவள் கணவனுக்கு ஏற்ற மனைவியாய்
அமைந்தாலும் சந்ததி இருக்காது.
ஐந்தாம் இடம்
மிதுனமானால் அழகுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். கலைத்துறையில் வளர்ச்சி
பெறுவார்கள். இசைத்துறையில் பரிமளிப்பார்கள்.
ஐந்தாம் இடம்
கடகமானால் சாந்த சுபாவமுள்ள குழந்தைகளை ஜாதகர் அடைவார். காமுகனாக ஆண் பிள்ளை
அமையவும் கூடும்.
ஐந்தாம் இடம்
சிம்மம் ஆனால் குரூர குணம், மாமிச பிரீதி, நேர்மையற்ற போக்கு, அதிகப்பசி, வேற்றுதேசம் போதல் ஆகிய குணங்களையுடைய
பிள்ளைகளே பிறப்பார்கள்.
ஐந்தாம் இடம்
கன்னியானால் பெண் குழந்தையே பிறக்கும். அப்பெண்ணுக்கு சந்ததி இருக்காது. ஆனாலும் கணவனிடத்தில் அன்பும் புண்ணிய நோக்கும்.ஆபரணங்களில் விருப்பம் உடையவள்.
ஐந்தாம் இடம்
துலாம் ராசியானால் ஒழுக்கம் அழகு கம்பீரமான கவர்ச்சிப்
பார்வையுடைய பிள்ளைகள் பிறப்பார்கள்
ஐந்தாம் இடம்
விருசிகமானால் தோசமின்மை, நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று, நல்ல நட்புடைய பிள்ளைகள் வாய்க்கும்.
ஐந்தாம் இடம்
தனுசு ஆனால் கெட்டபுத்தி, பாபச்செயல், அதிர் நடை ஆகிய குணங்கள் கொண்ட பிள்ளைகள்
பெற வேண்டிய நிலை ஏற்படும்
ஐந்தாம் இடம்
மகரமானால் வேட்டையில் பிரியமும், பகைவரை ஒழித்துக்
கட்டும் திறமையும், அரச சேவையில் ஈடுபாடும் உள்ள புத்திரர்கள் பிறப்பார்கள்.
ஐந்தாம் இடம்
கும்பமானால் கட்டுடல், தன தானிய சேர்கை, வெகு நல்ல குணமுடைய புத்திரன் கிடைக்கும். ஆனால் அவனுக்குப் பிறகும்
பையன் இந்த பிள்ளைக்கு கெட்ட பெயரயே பிற்காலத்தில்
தேடித் தருவான்.
ஐந்தாம் இடம்
மீனமானால் நோயற்ற வாழ்வு, நல்ல ரூபம், எப்பொழுதும் சிரித்த முகம், நகைச்சுவையான பேச்சுடன் கூடிய பிள்ளைகளை அடையும் யோகமுண்டு.
5 ஆம் பாவாதிபதி
லக்கினம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்.
5 குடையவன் லக்னத்தில் இருந்தால்
புதிரர்களினால் சுகம் பெறுவான். அந்தப் பிள்ளைகளில் யாருக்கேனும் மந்திரசித்தி கிடைக்கிறது. ராஜாங்க சேவை செய்யும் வாய்ப்பும் சாஸ்திரங்களை
கற்றுக் கொள்ளும் போக்கும் உள்ள பிள்ளைகள் அமைகிறார்கள். விஷ்ணு பக்தி நிறைந்த பிள்ளை கிட்டவும் வாய்ப்பு இருக்கிறது.
5 குடையவன் இரண்டாமிடதில் இருந்தால்
பிறக்கும் பிள்ளை குடும்ப விரோதி, தீயோரின் சேர்கை
உள்ளவன்.
5 குடையவன் மூன்றாம் இடத்தில இருந்தால்
பிறகும் பிள்ளை பராக்கிரமசாலி, வாக்கு சாதூர்யம்
நிறைந்தவன். சாந்த குணம். சுகபோகி.
5 குடையவன் நான்காம் இடத்தில இருந்தால்
தந்தைக்கு அன்பன்; பெரியோர்களிடம் ஈடுபாடு. துணிவியாபாரம் லேவாதேவி நடத்தல்
ஆகிய தொழிலில் இந்தப் பிள்ளை ஈடுபடுவான்.
5 குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் பிள்ளை புத்திமான்; ஆற்றல் மிக்க பேச்சாளன்; சுருக்கமாக சொன்னால் புருஷ ஸ்ரேஷ்டன்
5 குடையவன் 6 ஆம் இடத்தில இருந்தால் மிகுந்த தோஷமுள்ள பிள்ளை பிறப்பான்.
5 குடையவன் ஏழாம் இடத்தில இருந்தால்
ஜாதகருடைய பத்தினி உறவினர்களுடன் அன்பு கொண்டவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், சிறுத்த இடையுள்ளவளாகவும் அமைந்து நல்ல புத்திரர்களை பெறுகின்றான்.
5 குடையவன் எட்டாம்மிடதிலிருந்தால்
அங்கத்தில் ஈனம் ஏற்படும் பிள்ளை தோன்றுவான். கோபம், கெட்ட பேச்சு, கெட்ட நடத்தை, வஞ்சகம், தரித்திரம் ஆகியவை இவன் கூட பிறந்த குணங்கள்.
5 குடையவன் ஒன்பதாம் இடத்திலிருந்தால்
ஜாதகருடைய புத்திரன் சண்டையை தீர்த்து சமாதானப் படுத்தி வைப்பதில் சமர்த்தன். அரசனால் தரப்பட்ட வாகனம் உள்ளவன்; கலை வல்லவன்.
5 குடையவன் பத்தாம் இடத்தில இருந்தால்
அரசுப் பணியுடன் பற்பல வகைகளிலும் போருலீடுபவன். பெண்களிடம் பிரியமுள்ளவன்.
5 குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் பிள்ளை சங்கீத வித்வான் ஆகும் பெரு பெற்றவன்.
அரசர் போற்றும் புகழ் மிக்கவன்.
5 குடையவன் 12 ஆம் இடத்திலிருந்து பபகிரகங்களுடன் சேர்ந்தால் எவ்வளவு செலவு செய்தும் மகப்பேறு வாய்காதவள்; வாய்த்தாலும் ஒரு சுகமும் கிட்டாது. வெளிதேச தொடர்பு கொண்டு போருளீடுவான்.
5 ஆம் கிரகத்தை
பிற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.
5 ஆம் இடமானது சூரியனால் பார்க்கப்பட்டால்
முதலில் பிறந்த சகோதரர்க்கு ஆகாது; வாயு பீடை எப்போதும் இருக்கும்.
5 ஆம் இடமானது சந்திரனால் பார்க்கப்பட்டால்
நண்பர்களால் சுகம் உண்டாகிறது. பிறந்த உலகத்துக்கு பெருமை
தேடித் தருபவன். வேறு தேசத்தில் வியாபாரம் செய்து ஜீவிக்க கூடியவன்.
5 ஆம் இடமானது செவ்வாயினால் பர்கப்பட்டால்
முதலில் பிறந்த பிள்ளை நாசம் ஆகிறது. பிச்சை எடுக்கும் நிலையம் ஏற்படுகிறது.
5 ஆம் இடமானது புதனால் பார்க்கப்பட்டால்
புத்திரி ஜெனனம்; கீர்த்தி ஐஸ்வர்யம் கிட்டும்.
5 ஆம் இடமானது குருவால் பார்க்கப்பட்டால்
அதிகமான சந்தான சௌக்கியம், சாஸ்திரங்களில் தேர்ச்சி, நீண்ட ஆயுள், நிறைந்தத செல்வம் உண்டாகிறது.
5 ஆம் இடம் சுகிரனால் பார்கப்பட்டால்
முதலில் புத்திரனும் பிறகு பெண்ணும் பிறக்கும்; ஜாதகன் கல்வி, செல்வம் இரண்டையும் பெறுகின்றான்.
5 ஆம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால்
புத்திர சுகம் இல்லை. குலப் பற்று கொண்டவன்
No comments:
Post a Comment