சூரியனும் + ராகுவும்




1.லக்கினத்தில் இருந்தால் ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு, கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.

 2. ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்தில் ஏற்படும்.

3. ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச் ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.

4. அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய் வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம் இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும.

5. ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால் நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்.

6. ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும் ஏற்படும்.

7. ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார். சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.

8. ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம் ஏற்படலாம். அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.

9. ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப் பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்.

10 ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார் சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்.

11 ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார். சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்.

12. ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம் செல்ல நேரிடும்.

No comments:

Post a Comment