லக்னங்களின் பொது பலன்கள்



மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர் செல்வங்களை சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தி இருக்கும். பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்து கொள்வார்.
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூரண ஆயுளுடன் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள். குருவோடு சனி சம்மந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுப்பார். சூரியனும், குருவும் யோகக்காரர்கள்.இருவரும் ஒன்றாக கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி இம் மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர் செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும் அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோச வாழ்க்கை அனுபவிப்பர். எப்போதும் கூடுமானவரை மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சுக்கிரன், சந்திரன் பாவிகள். சனி ஒருவரே இவர்களுக்கு ராஜயோகம் கொடுப்பார்.
செவ்வாய், புதன் மாரகர்கள். இவர்களுடன் பலம் பொருந்திய கிரகங்கள் இருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்ப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பர்.  எல்லோருடனும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவார். இவர்களுக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி  சேர்ந்தால் யோககாரனாவான். சந்திரன் தோசமுடையவன். எனினும் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். எதற்கும் இவர்களது வலுவை அறிந்து எதையும்  சொல்ல வேண்டும்.

கடக லக்னம்
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர்கள் உண்டாகலாம். தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகா காரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன்  மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாரகாதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்

சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள். சுக்ரனும், புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்ரன் கூடி இருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்ரன், சனி , புதன் இவர்கள் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள்.

கன்னி லக்னம்
சற்று அடக்கமாக இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்னி லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு பாவிகள். புதனும், சுக்கிரனும் யோககாரர்கள். புதனும் சுக்கிரனும் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தை கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள் என்று பெயரெடுத்து  புகழுடன் விளங்குவார்கள்.

துலா லக்னம்
தாரசு பிடிக்கும் தொழில் ஏற்படும். தராசு போல பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம், புத்திசாலிதனம், செல்வம் சேர்பதில் கவனம். எதிலும் முன் ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்கையில் சுகங்கள் அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆயுள் நீண்டது என்றே கூற வேண்டும்.
துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள். சந்திரனும், புதனும் யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபதிகள். செவ்வாய் தோஷம் உடையவர்.

விருச்சிக லக்னம்
விருசிக லக்னதில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி உள்ளவராக இருப்பார். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருக்கும், செல்வன் என்று பெயர் எடுப்பர். எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பார். கொஞ்சம் அவசர குணம் இருக்கும்.
விருசிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 9௦ வயது வரையில் வாழ்ந்து இருப்பார்கள் என்று கூறலாம். சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள். குருவும், சனியும் கொள்ள மாட்டார்கள். புதனும் கொள்ள மாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.

தனுசு லக்னம்
தனுசு லக்னத்தில் பிறந்தவர் நல்ல அறிவுள்ளவராகவும் சொத்துக்கள் உள்ளவராகவும் இருப்பார். மனைவியிடம் அன்புடன் பழகி அவளுடைய நல்லெண்ணத்தையும் பெறுவார். மற்றவர்களுடன் இனிய சுபாவத்துடன் பழகுவார்.
தனுசு லக்னத்திற்கு சூரியனும், செவ்வாயும் சுபர்கள். சுக்கிரன் ஒருவரே பாவி. சூரியனும், புதனும் யோகக்காரர்கள். இருவரும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சுக்கிரனும், புதனும் கூடினால் மாரகாதிபதியாவான். சுக்ரனுக்கு மாரகம் கொடுக்கும் வல்லமை உண்டு. சந்திரன், சனி கொல்ல மாட்டார்கள். மற்ற கிரகங்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை அமையும். நல்ல வஸ்திரங்கள் அணிவது, ஆடை ஆபரணங்கள் சேர்க்கையில் ஆசை இருக்கும். பெண்கள் இன்பத்தில் நாட்டம் இருக்கும். சாதூர்யதுடன் பேசுவர். முன்னேற்றத்தை கருதி பல திட்டங்கள் போட்டு கொண்டே இருப்பார்கள்.
மகர லக்னத்திற்கு செவ்வாய், புதன், சுக்கிரன் சுபர்கள். சந்திரன், குரு பாவிகள். சுக்ரன் யோககாரகன். சுக்ரனும், புதனும் கூடினால் ராஜயோகம் கொடுப்பார்கள். சூரியனும், சனியும் மாரகம் கொடுக்க மாட்டார்கள். சந்திரனுடன் சேர்ந்த சனி மாரகாதிபன். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிருக்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர் மனைவியிடம் அன்புள்ளவராக இருப்பார். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவராக இருப்பார். பெண்கள் பால் அதிக அன்பும், பரிவும் காட்டுபவராக இருப்பார். கல்வி கேள்விகளில் பூரண பலன் இருக்காது. சில சமயங்களில் கர்வம் அதிகமுள்ளவராக பிறருக்குத் தோற்றமளிப்பார்
கும்ப லக்னத்திற்க்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சந்திரன், செவ்வாய், குரு பாவிகள், சுக்கிரன் யோககாரகன். செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். குரு மாரகம் கொடுக்க மாட்டன்.. செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பான். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

மீன லக்னம்
முன்னோர்கள் தேடி வைத்த பொருள்களை அழித்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். தன் காரியங்களை பிறர் அறியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்வதில் ஜாக்கிரதை உள்ளவராக இருப்பார். அதிக திறமை உள்ளவராகவும் காணப்படுவார்.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், சனி பாவிகள். செவ்வாயும், குருவும் யோகக்காரர்கள். இவர்கள் கூடியிருந்தால் பிரபலமான ராஜ யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், சந்திரன், புதன், சனி மாரகாதிபர்கள்.

No comments:

Post a Comment