கிரகங்களின் விளையாட்டு :-
காரைக்குடி நவஜீவன் ஜோதிட நிலையத்தின் அனுபவத்தின் அடிப்படையிலும்,ஆய்வின் அடிப்படையில் சில ஜோதிட நூல்களின் உறுதுணையோடு கிரகங்களின் விளையாட்டுத் தொடர் தொடரும், கிரகங்கள் ஒன்றை ஓன்று பார்த்தல்,சேர்ந்தால் பகை,நீசம்,ஆட்சி,உச்சம் பெற்ற கிரகங்கள் என்ன செய்யும் என்பதை ஆய்வு செய்வதே நோக்கம் .
நவக்கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சூரியன் ,சந்திரன் ,செவ்வாய் ,புதன்,வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி, ராகு, கேது.இவை ஒன்பதையும் கோள்கள் என்றாலும்,கிரகங்கள் என்றாலும், ஒரே பொருள் தான்.அனைத்து கிரகங்களுக்கும் ஒளி ஊட்டக் கூடிய கிரகம் சூரியன் .சூரியனிடமிருந்து ஒளி பெற்று,மற்ற கிரகங்கள் செயல் படுகின்றன. ஒன்பது கிரகங்களையும் வழி நடத்துவது குரு.
இதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு இவர்கள் ஐவரும் ஒரு அணியாகவும்,அதன் தலைவர் குரு அல்லது ராஜகுரு எனப்படும். சுக்கிரன்,சனி,ராகு,கேது இந்த நால்வரும் ஒரு அணியாகவும் ,அதற்கு சுக்கிரன் தலைவர் அல்லது அசுரகுரு எனப்படும்.புதன் மட்டும் இந்த இரு அணிகளில் எந்த அணியோடு சேருகிறதோ அதற்கு தகுந்தார் போல் செயல்படும்.
முதலில் ஒன்பது கிரகங்களின் வலிமையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ராசியில் ஆட்சி, உச்சம் ,பகை ,நீசம் மூலத்திரிகோணம் என்று உள்ளது .இதை வைத்து தான் ஒரு கிரகத்தின் வலிமையை முடிவு செய்ய இயலும் .
சூரியன்: சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி, மேச ராசியில் உச்சம், துலாம் ராசியில் நீசம். ரிஷபம், மகரம், கும்பம் ராசிகளில் பகை.மூலத்திரிகோணம் சிம்மம் ராசியில்.சூரியனின் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் : அசுபதி, பரணி, கார்த்திகை.
சந்திரன்: சந்திரன் கடகம் ராசியில் ஆட்சி, ரிஷபம் ராசியில் உச்சம் விருட்சகத்தில் நீசம். சந்திரனுக்கு பகை ராசி இல்லை. மூலத்திரிகோணம் கடகம் ராசியில், சந்திரனின் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் : ரோகினி, மிருகசிருஷம், திருவாதிரை .
செவ்வாய்: செவ்வாய்-மேஷம்,விருச்சிகம் ராசிகளில் ஆட்சி. மகரம் ராசியில் உச்சம் ,கடகம் ராசியில் நீசம். மிதுனம்,கன்னி ராசியில் பகை. மூலத்திரிகோணம் மேஷம் ராசியில். செவ்வாய் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள்: புனர்பூசம், பூசம், ஆயில்யம்.
புதன்: புதன்-மிதுனம்,கன்னி ராசிகளில் ஆட்சி. கன்னி ராசியில் உச்சம். மீனம் ராசியில் நீசம். கடகத்தில் பகை. மூலத் திரிகோணம் கன்னி ராசியில் . புதன் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள்: மகம், பூரம், உத்திரம்.
வியாழன்(குரு): வியாழன்-தனுசு ,மீனம் ராசிகளில் ஆட்சி.கடகம் ராசியில் உச்சம். மகரம் ராசியில் நீசம். ரிஷபம், மிதுனம் ராசியில் பகை. மூலத்திரிகோணம் தனுசு ராசியில். வியாழன் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் அஸ்தம், சித்திரை, சுவாதி.
சுக்கிரன்: சுக்கிரன்-ரிஷபம், துலாம் ராசியில் ஆட்சி.மீனம் ராசியில் உச்சம். கன்னி ராசியில் நீசம். கடகம்,சிம்மம் ராசியில் பகை.மூலத்திரிகோணம் துலாம் ராசியில். சுக்கிரன் அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள்:விசாகம், அனுஷம், கேட்டை.
சனி: சனி-மகரம் ,கும்பம் ராசிகளில் ஆட்சி. துலாம் ராசியில் உச்சம். மேஷம் ராசியில் நீசம். கடகம், சிம்மம் விருச்சிகம் ராசியில் பகை ,விருச்சிகம் ராசியில் பகை.மூலதிரிகோணம் கும்பம் ராசியில். சனி அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம். .
ராகு: ராகு-இது நிழல் கிரகம் என்றும் சாயா கிரகம் என்று அழைக்கப்படும் . இதற்கு சொந்த வீடு கிடையாது. இருப்பினும் விருட்சிகம் ராசியில் உச்சம். ரிஷபம் ராசியில் நீசம் .மூலத்திரிகோணம் கும்பம் ராசியில் ராகு, சனி சாரத்தில் செயல் படுகிறது.ராகு அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம், சதயம்.
கேது: கேது இது நிழல் கிரகம் என்றும் சாயா கிரகம் என்று அழைக்கப்படும். இதற்கு சொந்த வீடு கிடையாது .இருப்பினும் விருட்சிகத்தில் உச்சம்,ரிஷபத்தில் நீசம்.மூலத்திரிகோணம் சிம்மம் ராசியில் கேது,செய்வாய் சாரத்தில் செயல் படுகிறது. கேது அங்கிசம் பெற்ற நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் அதன் நிலை என்ன என்பதை அறிந்து இருப்பீர்கள் .நமது முனோர்கள் இதை எப்படியெல்லாம் வரிசைப் படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கிரகோத்துங்க தத்துவார்த்தம்:
கிரகோத்துங்க தத்துவார்த்தம் என்றால் கிரகங்களுடைய உச்சதைப் பற்றிய உண்மை கருத்து என்பது பொருள். உச்சத்தின் எதிர் மொழி நீசம் எனப்படும். ஒரு கிரகம் உச்சம் பெற்ற ராசிக்கு நேர் கீழாக உள்ள ஏழாம் ராசியே நீச ராசியாகும். சூரிய-சந்திரர்களை கிரக நாயகர் அல்லது ராஜ கிரகங்கள் என்பது சோதிடர்களின் கொள்கை. இந்த இரு கிரகங்களாலேயே பஞ்ச அங்கமும் கணிக்கப்படுகின்றன. சூரிய சந்திரர்கள் முறையே சிவம்-சக்திகளின் அம்சம்மானவர்கள் எனச் சோதிடத்திலும், புராணங்களிலும் சொல்லபடுகிறது.சிவம் சக்தியையும்,சக்தி சிவத்தையும் பிரிவின்றி இணைந்து இருத்தலை,அதன் உண்மையை உணரமுடிகின்றது.ராசி மண்டலத்தில் முதலாய் உள்ள மேஷ ராசியில் கிரக வரிசைப்படி முதலாய் உள்ள சூரிய பகவானுக்கும் இரண்டாவது ராசியாக உள்ள ரிஷப ராசியில். இரண்டாவது கிரகமாய் உள்ள சந்திர பகவானுக்கு உச்சமென்று, சோதிட சாத்திரத்தில் ரிஷிகள் வகுத்து தந்துள்ளனர்.
ராசி மண்டலத்தில்(வடக்கு-தெற்கு ) மத்திய ரேகை, மேஷ-துலாம் ஆரம்பத்தில் இருக்கின்றது. இந்த ரேகையின் ஆரம்ப ஸ்தானம் உச்சம் என்றும் அந்திய ஸ்தானம்-நீசம் என்றும் சொல்லப்படும்.எனவே உச்ச ரேகையின் ஆரம்பம் மேஷத்திலும், முடிவு துலாத்திலும் இருக்கின்றது. இந்த நியதினாலேயே பஞ்சங்க கணிதத்தில் ரேவதி சம்பந்தம், ரைவதபக்ஷம் எனவும், சித்திரை சம்பந்தம், சைத்திரபக்ஷம் எனவும், இரு வகை பக்ஷங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆரம்ப காலத்தில் பூமத்திய வடக்கு தெற்கு ரேகை மேஷ-துலாதிற்கும் கிழக்கு மேற்கு ரேகை கடக்க-மகரதிற்கும் நேரே இருந்தது. ராசி மண்டலத்தின் வடக்கு-தெற்கு ரேகையும்,கிழக்கு-மேற்கு ரேகையும் முறையே மேஷ-துலாம், கடக-மகரங்களில் இருந்தது. உச்சரேகைக்கு அடுத்த ரேகைகளோ எனின் முறையே ரிஷபம்-மீனம், கன்னி-விருட்சிகங்களின் ஆரம்பத்தில் இருந்தது . எனவே சூரியாதி எட்டு கிரகங்ககட்கும், மேற்கூறிய எட்டு ராசிகளில் ஒவ்வொன்று உச்ச ராசிகளாக வகுத்துள்ளனர்.
முதல் கிரகம் சூரியன்-அதனால் மேஷம் சூரியனுக்கு உச்சமென்றும்,இரண்டாவது கிரகம் சந்திரன்-அதனால் இரண்டாவது ராசி சந்திரனுக்கு உச்சமென்றும், ஏழாவது கிரகம் சனியும், எட்டாவது கிரகம் ராகு -அதனால் முறையே ஏழு, எட்டாவது ராசிகளாகிய துலா-விருட்சகங்கள் உச்சமென்று அறியத் தருகின்றோம்.
சூரியன்,சந்திரன்,சனி,ராகு உச்ச ராசியின் தத்துவார்த்தம். இம்முறையில் வகுக்கப் பெற்றிருக்கின்றது.ஆனால் ஏனைய செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரர்களின் உச்ச ராசியின் தத்துவார்த்தம். இங்ஙனம் வகுக்கப்படவில்லை. சூரியனது மத்திய ஸ்புடமே செவ்வாய்,குரு,சனி இவர்களின் சீக்கிர கேந்திர ஸ்புடங்கள் என்பது, சூரிய சித்தாந்த முதலிய கணித நூற்களின் கொள்கை.ஆகவே இவர்களின் உச்சம் ஒன்றுக்கொன்று சம ரேகையில் சம்பந்தப்பட்ட ராசிகள் இருக்கவேண்டும் என்று அறிய முடிகின்றது. சூரியனது மத்திய ஸ்புடமே புதன்,சுக்கிரர்களின் மத்திய ஸ்புடம் என்பது கணித நூற்களின் கொள்கை. அதனால் அவர்களது உச்சமும் ஒன்றுக்கொன்று சம ரேகையில் சம்பந்தப்பட்ட ராசிகளில் இருக்க வேண்டும் என்று அறிய முடிகின்றது.
பூமியின் தக்க்ஷண மேருவில் இருந்து உத்திர மேருவரைக்கும், நேரே இழுக்கப்பட்ட ரேகையே பூமத்திய அதியுச்ச ரேகையாகும்.பூமத்திய நிரட்ச ஸ்தலத்தில், கிழக்கு-மேற்காக இழுக்கப்பட ரேகையே அட்ச ரேகை எனப்படும். ஆரம்ப காலத்தில் வான மத்திய அதியுச்ச ரேகையும் அட்சரேகையும், பூமத்திய அதி உச்ச ரேகையும், நிரட்ச ரேகையும் ஒன்றுக்கொன்று சரியாய் நேராக இருந்தன. இந்த ரேகைகளில் இருந்த ராசிகள் மேஷ,துலாம்,கடக மகரங்களாகும். பூமத்திய தீர்க்கரேகைகள் ஒன்றாய் சம்மந்தபட்டது போல் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட இடம் மேஷம்,துலாம் என்று முன்பே அறிய தந்துள்ளோம். அந்த ரேகைக்கு உபய பாரிசங்களில் உள்ள ரிஷப,விருச்சிகம்,கன்னி,மீனம் ஆகிய எட்டு ராசிகளும் ஒன்றுக்கொன்று சம ரேகையில் சமந்தப்பட்ட ராசிகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பூமியிலாவது வானத்திலாவது இப்படி ரேகை கோடுகள் இழுக்கப் பட்டிருக்கவில்லை. வான சோதிகளின் போக்கு வரவைக் கணக்கிட்டு அறியும் பொருட்டு கணித விற்பனர்களால் இந்த ரேகை இருப்பதாக கற்பித்து கணித சௌகரியத்தை நாடி இவைகளை உருவாகியுள்ளனர் நமது முன்னோர்கள்.
சூரியனுடைய மத்திய ஸ்புடமே புதன்-சுக்கிரர்களுக்கு உரிய மத்திய ஸ்புடம்.செவ்வாய்,குரு,சனிகளுக்குரிய சீக்கிர கேந்திர ஸ்புடம் என்பது,புதன்-சுக்கிரர்களின் சீக்கிர கேந்திர ஸ்புடத்தில் மத்திய கிரகமான சூரிய மத்திய ஸ்புடத்தை கழிக்க வருவது, அவர்களது பிரதம சீக்கிர கேந்திர ஸ்புடம் எனப்படும்.செவ்வாய்,குரு,சனி இவர்களுக்குரிய சீக்கிரோச்சம்.சூரிய மத்திய ஸ்புடத்தில் முறையே செவ்வாய் குரு,சனி இவர்களின் மத்திய ஸ்புடத்தைக் கழிக்கப் படுவது பிரதம சீக்கிர கேந்திரம் எனப்படும்.
பூமத்திய சித்தாந்தப்படி பார்க்கும் போது, புதன்-சுக்கிரர்களின் மண்டலங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக உள்ளது சுக்கிர மண்டலமும், அதற்கடுத்தபடியாக உள்ளது புதன் மண்டலமாகும். இவ்விருவர்களுக்கு சூரிய மத்திய ஸ்புடம் சொந்தமானது. இருவர்களுக்கும் மத்திய ஸ்புடங்கள் ஒரே விதமாக இருப்பதை பார்க்கும் போது இவரது உச்சமும், ஒரே நேர் ரேகையில் சம்பந்தமாக இருத்தல் வேண்டும் என்பது உணர முடிகின்றது . பூமத்திய சித்தாந்தப்படி, சூரிய மண்டலத்திற்கு இரண்டாவது படியில் உள்ள சுக்கிரனுக்குரிய உச்ச ராசி மீனமும், அதற்கு ஏழாவது ராசி சுக்கிர மண்டலத்துக்கு அடுத்தபடியில் உள்ள புதனுக்கு உச்ச ராசிகள் ஆகின்றன.
செவ்வாய்-குரு-சனி இவர்களின் மண்டலங்கள் பூமத்தியம் அல்லது சூரிய மத்தியப்படி பார்க்கும் போது, முறையே ஒன்றுக்கொன்று மேற்படிகளில் அடுத்தடுத்து காணப்படும். இவற்றுள் சனிக்குரிய உச்சராசியின் தத்துதுவார்த்தத் தை மட்டும் ஆராய்ந்து அறிதல் வேண்டும்.அகவே மீதமுள்ள செவ்வாய்க்கும், குருவுக்கும் சூரிய மத்திய ஸ்புடமே சீக்கிரோச்ச ஸபுடமாதலின், இவ்விருவர்களின் உச்சமும் ஓர் நேர் ரேகையில் இருத்தல் வேண்டும் என்பதை அறிய முடிகிறது. சூரிய மத்திமத்தில் செவ்வாய்-குரு இவர்களின் மத்திமத்தைக் கழிக்க வருவது இவர்களின் பிரதம சீக்கிர கேந்திரம் எனப்படும். இதில் உள்ள கேந்திர சப்தம் 1-4-7-10ஐ குறிப்பதால் ,இவர்களது உச்சம் சூரியனுக்கு கேந்திர ராசிகளில் ஓர் நேர் ரேகையில் இருத்தல் வேண்டும் என்பது அறிய முடிகிறது .இந்த கேந்திரங்களில் 7-ம் இடம் சனிக்கு உச்சம் என்று முன்பு கூறியது நன்கு உணரமுடியும் .எனவே இது பொருத்தமாக காணப்படுகின்றது.
முதலாவது கேந்திரத்தில் சூரியன் இருப்பது 4-10 ஆகிய இரண்டு கேந்திரமாகும் .இவற்றுள் சூரியனுக்கு அடுத்தபடி வலப்புறம் இடபுறங்களில் காணப்படும். கேந்திர ஸ்தானங்கள் மகரம்,கடகம். இவற்றுள் வலப்புறத்தில் உள்ள மகரம், இடப்புறமுள்ள கடகம், குருவுக்கும் உச்ச ராசிகளாகும் என்று அறிதல் வேண்டும். சூரியாதி கிரகங்களுக்கு முறையே மேஷம், ரிஷபம்,மகரம்,கன்னி,கடகம்,மீனம்,துலாம்,விருட்சிகங்கள் உச்ச ராசி என்பதன் உண்மை நன்கு விளங்கும்.ராகுவின் உச்சத்தைப் பற்றி ஜோதிட நூல் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். ஜாதக அலங்காரம், வீமேசுவரம்,ஜாதக சிந்தாமணி ஆகிய இத்தமிழ்ச் சோதிட நூற்களில் ராகுவுக்கு விருச்சிகம் உச்ச ராசி என்று கூறப்பட்டிருகிறது. ஜாதக பாரிஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி ஆகிய வட மொழி நூற்களில் முறையே ராகுவுக்கு மிதுனம்,ரிஷபம் உச்ச ராசிகள் என்று கூறப்பட்டிருகிறது.இப்படி இருவேறு பிரிவாய் உள்ளவைகளில் முதற்கண் தமிழ்ச் சோதிட நூற்களில் கூறியிருப்பதுவே யுக்திக்குப் பொருத்தமாக இருப்பதால், அதுவே உண்மை என்று உணர்தல் வேண்டும். கிரகோத்துங்க ராசிகளின் தத்துவார்த்தம் இதுவேயாகும்.
நமது முன்னோர்கள், மகாரிஷிகள் வேத சாத்திரத்தை அறிந்து உணர்ந்து கிரகங்களை வரிசைப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும்,எதிர்கால சந்ததியினர்களுக்கு ஒரு ராசியில் ஒரு கிரகத்திற்கு என்னென்ன வலிமை (ஆட்சி,உச்சம்,பகை,நீசம்,மூலதிரிக்கோணம்) உள்ளது என்பதை மேலே சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் துணை கொண்டு தெளிவு பெறுவீர்கள். வேத சாத்திரம், வானியில் ஆய்வு இன்றளவும் தொடர்கிறது. ஒன்றில் இருந்து ஓன்று உருவாக வேண்டும் என்பது சிவ தத்துவம் எனவே அதன் பரிநாமவளர்ச்சியை ஆய்வு செய்வதே நமது நோக்கம்.

No comments:
Post a Comment