வாஸ்து

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.
இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்…

1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.

2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.

8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.

11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போடும்.

12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.


14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

சந்திராஷ்டமம்

ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  சந்திராஷ்டமம் பற்றிய தகவல்களை கொண்ட பதிவு இது.  சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது.  இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.  நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் என்றைய தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும்.  அஷ்டமம் என்றால் எட்டு.  சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டில் இருப்பதாகும்.  இது அடிப்படை ஜோதிட இலக்கண விதியாகும்.  நமது முன்னோர்கள் ராசியை கருத்தில் கொண்டு சந்திராஷ்டமம் [ எட்டாவது ராசி ] என்று பெயரிட்டனர்.  எனவே சந்திராஷ்டமத்தை ராசி ரீதியாக பார்ப்பதே சிறந்ததாகும்.  தற்காலத்தில் பெரும்பாலான நாள்காட்டிகளில் நக்ஷத்திர ரீதியாக சந்திராஷ்டமத்தை கணக்கிட்டு கொடுத்துள்ளனர். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.  அதில் பிழைகள் உள்ளன.  சந்திராஷ்டமம் பற்றிய விதி முறைகளை நாட்காட்டிகள் முழுமையாக ஆராயவில்லை.  அவைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.
     1.  சந்திரன் இருக்கும் ராசியை குரு பார்த்தால் சந்திராஷ்டமம் கிடையாது.  இதில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை ஆகாது.  மற்ற ஐந்து, ஒன்பது ஆகிய பார்வைகள் தோஷத்தை நீக்கும்.  இந்த குரு பார்வை கணிதம் கோசரத்திற்கு மட்டும் பொருந்துவதாகும்.

     2.  சந்திராஷ்டம தினத்தன்று அமாவாசையாக இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

     3.  தான் பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து 16, 18 வதாக வரும் நக்ஷத்திரத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.  16 வதாக வருவதை மைத்திர தாரை, அதாவது நட்பு நக்ஷத்திரம் என்றும் 18 வதாக வருவதை பரமமைத்திரம், அதாவது நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முனதாக நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  17 வது நக்ஷத்திரத்திற்கு சந்திராஷ்டம தோஷம் உண்டு, என்பதால் நாள்காட்டிகள் அந்த 17 வது நக்ஷத்திரத்தை மட்டும் சந்திராஷ்டமமாக கூறியுள்ளன.  15, 19 வது நக்ஷத்திரங்களில் சந்திரன் இருக்குபோது அது அஷ்டம ராசியாக அமைந்தால் சந்திராஷ்டமமாகிவிடும்.  இதை கணக்கிட்டு சொல்லவேண்டுமானால் பாதசாரப்படி கணக்கிட்டு சொல்லவேண்டும். அவைகளை நாட்காட்டிகள் விட்டுவிட்டன.  இது பிழையாகும்.  மேற்கண்ட இரு விதி முறைபடியும் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டும்.  அதுவும் சொல்லப்படவில்லை.


     முடிவாக சந்திராஷ்டம நாட்களான இரண்டே கால் நாட்களிலும் எந்த விதமான சுபகாரியங்களையும், புதிய முயற்சிகளையும் செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது.  அதே நேரம், வேறு வழியில்லாமல் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்னிலை ஏற்படுகிறபோது, மேற்கண்ட விதி விலக்குகளை ஆராய்ந்து கொள்ளலாம்.   நன்றி.

எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள் 2

1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.

(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.

(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.

(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி

ஜோதிட சூச்சும பரிகாரங்கள்

திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.

திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.

பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.

(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.

 (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

வேலை மாற்றத்திற்கு

அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.

"உப்பு நீர்" பரிகாரம்

சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.