குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (மீனம்)

கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி சோகக்கடலில் மூழ்கடித்ததுடன், தொடர்ச்சியாக அல்லல் பட வைத்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகமாகும். உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
 
உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும். உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
 
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எவ்வளவோ சிகிச்சை செய்தும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
 
பாதியில் நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிடைக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்ற வருவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்தில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். புதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திட்டமிடாத செலவுகள் இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ஆன்மீக பணிகளை முன்னின்று செய்வீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.
 
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும் ஆர்வமின்மை, காரியத் தாமதம், வீண் டென்ஷன், சிறுசிறு விபத்துகள், அலைச்சல், வேலைச்சுமை வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். மனஇறுக்கங்கள் உருவாகும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.
 
வியாபாரம் சூடுபிடிக்கும். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
 
மக்கள் நடமாட்டம் அதிமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். ஸ்பெக்குலேஷன், போடிங், லாஜிங், இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
 
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். ப்ரமோஷன்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நிலைக் குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடினமான பாடங்களிலும் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். ஆசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
 
கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.
 
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துக் கொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். மாநில அளவில் பெரிய பொறுப்புகள் கூடி வரும். கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள்.
 
இந்த குரு மாற்றம் உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், சமயோஜித புத்தியால் சாதிக்க வைக்கும்.
 
பரிகாரம்:
 
திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று தரிசியுங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

சகுன ஜோதிடம்

ஒருவர் இந்த முறைப்படி பலன் சொல்ல விரும்பினால் (அ ) நேரத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால் பலன் தேர்தெடுத்து இந்த முறையில் சொல்லப்படும். பலங்கள் பிரஸ்ன, (அ ) கபால, (அ ) கேரள ஜோதிட முறைப்படி கூறும் பலங்களுக்கு ஒத்து இருக்கும். மேலும் உறுதியாகவும், தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பலங்கள் கூறுவதற்கு பயனாகும். தெரிவதால்! சகுனங்கள் தெளிவான சரியான குறிக்காட்டிகளாகும். எனவே இவைகள் ஜோதிடகளுக்கு சரியான வாழ்காட்டிகளாகும்.

சகுனங்களை கொண்டு தக்க முடிவுகளை மக்கள் எடுக்கிறார்கள். அவர்கள் இதில் மேலும் திருமணம் நிச்சயிப்பதிலும், வீடு வாங்குதல் போன்றவைகளிலும் நிமித்தங்கள் கெடுதலானவைகளாகவோ மனக்கஷ்டமோ காண்பாரேயாகில் மேலும் அவர் காரியத்தைத் தொடருவதில்லை. வராஹமிஹிரர் சொல்வது ஒரு நிமித்தம் முற்பிறவியில் செய்த நன்மை , தீமைகளைப் பொறுத்து ஒருவரது செயல் நிறைவேறுவதை வெளிப்படுத்துகிறது. எனவே நிமித்தங்கள் என்பவை மூட நம்பிக்கையில்லை நிமித்தங்கள் என்பது சகுனம் என்பதாகும்.

இது ஒரு விருவான பொருள் இதில் பலன் கூறுவதற்குத் திறமை வேண்டும். பிருஹத் ஜாதகத்தில் வராஹமிஹிரர் விரிவாகக் கையாண்ட நிமித்தங்கள் பற்றியவைகளை ஒருவர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் நேரடியாக முடிவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றுக்கதிகமான நிமித்தங்கள் இருந்தால் அவைகள் அந்தத் தனி மனிதனை விளக்கங்களையே சாரும். எப்படியும் ஒருவர் கெட்டிக்காரராக இருப்பது நல்லது.

1. ஒரு நாள் ஒரு குரு மனிதர்களைப் பற்றியும், ஜோதிடத்தைப் பற்றியும் தன்னுடைய சீடர்களுடன் விவரித்துக் கொண்டிருந்தார். ஒரு கனவான் அப்போது அங்கு வந்து ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.

குரு, வாருங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். வந்தவர் மாணவர்கள் முன்னிலையில் விளக்குவதற்குத் தயக்கம் காட்டினார். மாண்வர்களை வெளியே போகுமாறு சொல்லமுடியாது. அந்தக் கனவானை குருஜி ஒரு தனியான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியாது. இம்மாதிரி எதிர் பாராத சூழ்னிலையில் அவள் தனியே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்றார். சில மாதங்கள் கழிந்தது. அவளிடமுருந்து ஒரு கடிதம் கூட இல்லை. ஆகையால் நான் தொல்லைப்படுகிறேன். நான் என்னுடைய
மணவாழ்க்கைப்பற்றி கவலைப்படுகிறேன் என்றார்.

வந்தவர் தன்னுடைய துக்கரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது குருவின் மனைவி ஒரு தாம்புக்கயிறும் வாளியும் எடுத்துக் கொண்டு தெருவில் ஒரு பொதுக் கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றார். அந்தப் கனவான் தன்னுடைய உரையை முடிக்கும் முன்னரே, குருவின் மனைவி உள்ளே வந்த அவள் கிண்ற்றிலிருந்து தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்த போது தாம்புக்கயிறு அறுந்து விட்டதால் வாளியைக் கிணற்றிலிருந்து எடுத்து தரும்படி கோரினார்.

குரு தம் சீடர்கள் பக்கம் திரும்பி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இதை ஒரு நிமித்தமாக (சகுனமாக ) எடுத்துக் கொண்டு கவனமாக அலசி பலன் கூறுங்கள் என்று சொன்னார். அவர்களில் பலர் தயக்கமின்றி உடனே கணவன் மனைவியினர் மத்தியில் இருந்த பிணைப்பு மஞ்சல் கயிறு ( அ ) தாலிக்கயிறு என்பது அந்தத் தாம்புக் கயிறு அறுந்துவிட்டது. என்பது மாங்கல்ய சரடு துண்டிக்கப்பட்டதை காட்டுகிறது. ஆகையால் வந்தவரின் மனைவி திரும்பவும் சேரமாட்டாள். கணவன் மனைவியருக்குள்ள பந்தம் மேலும் தொடர முடியாது என்றனர்.

ஆனால் மாணவரில் ஒருத்தர் மாறுபாடாக பலன் சொன்னார்.அதைகுரு ஆலோசித்தார் மாணவர், ஐயா, நான் அவர்கள் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.எனக்குத் தெரிவதெல்லாம் அவர் மனைவி கூடிய விரைவில் அவரிடம் (கணவரிடம்) வந்து சேர்ந்து கொள்வார். கணவனும் மனைவியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிணற்றில் உள்ள ஒட்டு மொத்த தண்ணீர் மாதிரி சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தவர்கள். அந்தக் கயிறும், வாளியும் தீய சக்தியைப் போலும் இந்த கிணற்றில் உள்ள நீருடன் வாளியில் எடுத்த நீரும் ஒன்றாக சேர்ந்தது. அதுபோல இந்த கணவனுடைய கெட்டகாலம் முடிந்த்து. அவரடைய மனைவி திரும்ப அவரிடம் வந்து அவர்களுடைய குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துவாள் என்றார்.

இப்படி ஒன்றிற்கு மேற்பட்டவை குறிக்கப்படுவதால் ஒரு புத்தி நுட்பமான விளக்கம் தேவைப்படுகிறது. தண்ணீரை இறைத்த பின் கயிறு இற்று விட்டிருந்தால் அவள் திரும்பி வருவதென்பது முடியாதது ஏனெனில் தண்ணீர் பிறிந்து வந்த பின்னரே தாம்புக்கயிறு இற்றுப்போய்விட்டதாகக் காண்ப்படுகிறது.

2. ஒரு கனவான் ஒரு குறிப்பிட்ட பெண்ணை தன் மகனுக்கு திருமணம் முடிக்க தீர்மானிக்கிறார். அவர் தடுமாறுகிறார். அவர் அந்த பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்ததுடன் சிறிது காலம் காத்திருந்து ஒரு தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பேராசை கொண்டு முயன்று காத்திருக்கிறார். எனவே அவர் ஒரு ஜோதிடரை ஆலோசனை  கேட்கிறார். அவர்கள் விவாதம் செய்து கொண்டிருந்த போது ஒரு தபால்காரர் ஒரு திருமண அழைப்பிதழ் கடிதத்தை ஜோதிடரிடம் கொடுக்க ஜோதிடர் ஏற்கனவே பார்த்த பெண்ணையே திருமணம் முடிக்க தயக்கமின்றி கனவானுக்கு அறிவுறுத்துகிறார். ஏனெனில் திருமண அழைப்பிதழ் வந்தது திருமணத்தை நிச்சயிக்க நல்லதான அறிகுறி ஜோதிடர் விளக்கம் கூறும் போது தபால்காரர் அரை டஜன் மணமகன் ஜாதகங்களைக் கொண்ட ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். காத்திருந்து பாருங்கள் என்று கனவாரிடம் கூறக் கூடும். ஆனால் அந்தக் கடிதம் ஏற்கனவே நிச்சியிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாலும், அந்த திருமணம் உடனேயே நடக்க இருப்பதாலும், ஏற்கனவே பார்த்த பெண்ணை நிச்சயம் செய்யுங்கள் என்று மட்டுமே கூறக்கூடும். சில வாரங்களில் திருமணம் நிச்சியிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த தம்பதியர் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஜோதிடைரை ஆலோசனை கேட்டாலும் கேட்காவிடினும், திருமணம் நடத்தினால் திருமண வாழ்க்கை அவர்களின் தலைவிதிப்படியே இருக்கும். திருமணம் நடக்குமா, நடக்காதா என்பதை ஜோதிடர் திருமணம் நடக்கும் முன்னரே தெரிவிப்பார்.

மணவாழ்க்கையில் ஏதாவது விரும்பத்தகாத முடிவிகள் இருந்தால், ஒருவர் திருமணம் வேண்டும் போது ஜோதிடர் அவ்விளைவுகளைப் பற்றி கூறுவது அழகல்ல என்பதை நான் உணருகிறேன்.

3. ஒரு அதிகாரி ஜோதிடர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, நோய் வாய்ப்பட்டுள்ள தன்னுடைய பாட்டியார் நோயினின்று மீள்வாரா? அல்லது மரிப்பாரா என்று கேட்டு உள்ளார். அவர் சில ஏற்பாடுகளைச் செய்யவும், தன் சொந்த வீட்டிற்குச் செல்லவிடுப்புக்கு மனுச் செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.

ஜோதிடர் 101க்குள் அவரை ஒரு எண்ணைக் கேட்க அவர் 7 என்று சொல்கிறார். ஜோதிடர் கணக்கு போட்டிருக்கும் போது, அவர் வீட்டின் உள்ளே தன்னுடைய மனைவியும்
விருந்தாளியும் ஒரு சோக நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். நான் செய்தி தாளின் மூலமாக இறந்ததைப்பற்றி படித்தபோது உண்மையிலேயே துக்கம் அடைந்தேன். அதை ஒரு பெரிய இழப்பாக நான் எடுத்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் அவர் என்னுடைய குடும்பத்திற்கு அபகரியமாக இருந்தார். அது நாட்டிற்கும் கூட இழப்பு ஆகும் என்று தெரியவந்தது. மேலும் ஒரு புரோகிதர் அப்போது வந்து தன்னுடைய தந்தையின் வருடாப்தீகம் செய்யப்பட உள்ளது என்று ஜோதிடரை நினைவுபடுத்தினார். கேட்பவர் தன்னை தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கருதி ஜோதிடர் உடனே பலன் சொல்லவில்லை. அவர் என்ன பலன் கூற வேண்டும், என்று சில சாக்கு போக்குகளைக் கொண்டு சில நிமிடங்களைக் கடத்தினார். ஜோதிடர் இளைஞ்ச்ரே நீண்ட காலவிடுப்பு எடுத்துக் கொண்டு உடனே உங்கள் பாட்டனாருடைய இடத்திற்கு விரையுங்கள். காலத்தை வீணாடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜாதகர் வந்து சேருவதற்கு முன்னரே நோயாளி இறந்துவிட்டார். இப்படிப்பட்ட குறிப்புகள் தவறாது எப்போதும் உண்மையாகும்.

4.ஒருவர் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஆவலுற்று ஜோதிடரிடம் தம்பதியயினரின் ஜாதகங்களை கொடுத்து பலன் சொல்லும்படி கேட்கிறார்.அப்போது பெண்மணி உள்ளே வந்து அடுத்த நாள் தன்னுடைய சகோதரியின் குழந்தையை அதனுடைய பிறந்த நாள் விழாவில் ஆசீர்வதிக்க தன் வீட்டிற்கு வரும் படி அழைக்கிறார். ஜோதிடர் என்ன பலன் கூறியிருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கடவுள் எப்போதுமே ஜோதிடருக்கு அதிசயக்கத்தக்க பலங்களை துல்லியமாக கூறுவதற்கு உறுதுணை செய்வதில் கவனமாக இருக்கிறார் எனினும் அவர்கள் முற்பிறவியில் தரும காரியங்களில் திருப்திகரமாக ஈடுபாடு கொண்டு செய்தவர்கள் மட்டும் ஜோதிடரை ஆலோசனை கேட்க வருவார்கள்.

முற்பிறவியில் கெடுதலான பாவ காரியங்களைச் செய்து அதன் பயனாக இப்பிறவியில் ஒவ்வொரு வாழ்க்கை முறையிலும் தோல்வியைக் கண்டவர்கள் மட்டுமே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். கைதேர்ந்த ஜோதிடர்கள் கூட அவர்களுடைய கணிப்புகளை தவறுதலாக செய்த பலங்கள் தோல்வியுறும். ஏனெனில் அவர்கள் அடிப்படியாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் அடிப்பையாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் கணக்கிடுவதால்தான். அந்த ஜாதகம் திறமையும் நல்லறிவையும் பெற்றவராக நடிக்கும்  ஜோதிடர்களால் கணிக்கப்பட்டிருக்கும் அல்லது அந்த துரதிருஷ்டமான கேட்பவர் 16 என்ற என்ணை சொல்லியிருக்கக்கூடும். ஜோதிடர் அதை 60 என்று தவறாக செவி மடுத்து அதன்படி கணக்கிட்டு கடைசியில் தோல்வியடைந்த பலங்களாக இருந்திருக்கக்கூடும். தவறுதலாகக் கேட்டது கேட்பவருடைய கர்மாவின் படி கடவுளுடைய செயலாகும். ஆக எல்லாமே கடவுளின் சக்தியாலே செயல்படுகின்றன. கடவுள் கைதேர்ந்த ஜோதிடர்கள் சொல்லக் கூடிய சரியான வழி முறையைக்காட்டாமலும் அல்லது நல்ல பலங்களைச் சொல்ல விடாமலும் இவருடைய விஷயத்தில் மட்டும் செய்கிறார். ஏனெனில் இவர் ஒரு பெரிய பாவியாயிருப்பதால் கைதேர்ந்த ஜோதிடைகள் மூலம் பலங்கள் கேட்பது முதல் எதிலும் ஏமாற்றத்தையே ஏற்றுக் கொள்பவராக ஆகிறார்.

ஒருவர் எந்த ஜோதிடரையும் ஆலோசனை கேட்கலாம். ஜாதகரும் ஜோதிடரும் நலம் பயக்கக்கூடிய காலத்தை பெற்றிருந்தால் மட்டுமே ஜோதிடர் துல்லியமான பலங்களை கூறமுடியும். கெட்ட காலம் அவர்களுக்கு இருந்தால் ஒவ்வொன்றும் தவறும். அதனால் கேட்பவர் மன அமைதி பெற முடியாது. நாற்காரியங்கள் மட்டுமே நல்ல பலங்களை தரும். நிச்சயமாக நற்காரியங்கள் மட்டுமே மன அமைதியை தருவதால் நல்ல செயல்களையே செய்யவேண்டும்  என ஜோதிடம் நினைவூட்டுகிறது. கிருத்துவ ஏடுகளில் எதிலுமே ஜோதிடம் பொய்பிக்கபட்டதே இல்லை. அது எங்கேயும் தடுக்கப்படவில்லை. ஆனால் அதை சரியாக உபயோகிப்பதில் நம்மை எச்சரிக்கை செய்கிறது.

ஸ்படிக மாலையின் நன்மை என்ன ?

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு.

அழகு,தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ  நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம்.

பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும்,புஜத்திலும், கையிலும்,மார்ப்பிலும்,இடுப்பிலும்,பாதங்களிலும், கால்விரலிலும்,கைவிரலிலும்,நகைகள் அணிவதுண்டு.

தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.
எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பெளர்ணமி நாள் படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன.

சந்திரனின் முக்கியத்துவம்

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?



ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும்  தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்  காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன்  இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 

சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.


சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.


சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.


சந்திராஷ்டமம்

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. 

நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?


சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். 


இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.


மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    அனுஷம்
பரணி    கேட்டை
கிருத்திகை    மூலம்
ரோகிணி    பூராடம்
மிருகசீரிஷம்    உத்திராடம்
திருவாதிரை    திருவோணம்
புனர்பூசம்    அவிட்டம்
பூசம்    சதயம்
ஆயில்யம்    பூரட்டாதி
மகம்    உத்திரட்டாதி
பூரம்    ரேவதி
உத்திரம்    அஸ்வினி
அஸ்தம்    பரணி
சித்திரை    கிருத்திகை
சுவாதி    ரோகிணி
விசாகம்    மிருகசீரிஷம்
அனுஷம்    திருவாதிரை
கேட்டை    புனர்பூசம்
மூலம்    பூசம்
பூராடம்    ஆயில்யம்
உத்திராடம்    மகம்
திருவோணம்    பூரம்
அவிட்டம்    உத்திரம்
சதயம்    அஸ்தம்
பூரட்டாதி    சித்திரை
உத்திரட்டாதி    சுவாதி
ரேவதி    விசாகம்

கிரகங்களின் பொது குணம்

சூரியன்
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.
செவ்வாய்
அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.
அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
சந்திரன்
மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.
சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.
சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.
புதன்
சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.
புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.
நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.
குருபகவான்
குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.
குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்> ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.
விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.
குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.
சுக்கிரன்
கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.
லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.
பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.
குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும
சனிபகவான்
மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.
ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.
ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.
இராகு
சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.
சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.
இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.
பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.
இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
கேது
இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.
எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.
விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

கிரகங்களின் அமர்வு பலன்கள்

பலன்கள் லக்கினம்

1 மேஷ லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2 ரிஷப லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3 மிதுன லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4. கடக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5 சிம்ம லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6 கன்னி லக்கினம்:

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7. துலா லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8 விருச்சிக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9 தனுசு லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்.
========================================================
10 மகர லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11 கும்ப லக்கினம்

யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12 மீன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
_______________________________________________________________________________


குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்.

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.

குரு 2ல் இருந்தால்
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3ல் இருந்தால்
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.

குரு 4ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

குரு 5ல் இருந்தால்
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6ல் இருந்தால்
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.

குரு 7ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 8ல் இருந்தால்
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.

குரு 9ல் இருந்தால்
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.

குரு 10ல் இருந்தால்
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

குரு 11ல் இருந்தால்
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12ல் இருந்தால்
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
_________________________________________________________________________

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

சுக்கிரன் 2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

சுக்கிரன் 6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

சுக்கிரன் 7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

சுக்கிரன் 8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

சுக்கிரன் 9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் 10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

சுக்கிரன் 11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

சுக்கிரன் 12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.

___________________________________________________________________________


1ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல் சனி

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல் சனி

துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல் சனி

மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல் சனி

குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல் சனி
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7ல் சனி
ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல் சனி
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல் சனி
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல் சனி
இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல் சனி
இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.

சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல் சனி
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்

ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
_________________________________________________________________________________

1. லக்கினத்தில் ராகு 
ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்:
 ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்:
 மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: 
ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: 
ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.

9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்:
 ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: 
பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்.

12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: 
ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
_______________________________________________________________________________

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

1ல்லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2 இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3 மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4 நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!

நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5 ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6 ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7 ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8 எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9 ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10 பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான்.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.

---------------------------------------------------------------------------------------
11 பதினொன்றில் கேது

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12 பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------
லக்கினத்தில் சூரியன் இருந்தால்.

ஜாதகர் சுறுசுறுப்பானவர்.செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால்.

 கல்வி சுமாராக இருக்கும்நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால்,

ஜாதகர் பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால்,

ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால்,
குடும்பம் அளவாக இருக்கும்;வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால்
 பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், 
ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் 
அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்உடல் நலம் சீராக இருக்கும்தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், 
ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்.ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1 லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2 இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3 மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4 நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:
--------------------------------------------------------------------------------------

5 ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6 ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7 ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8 எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9 ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10 பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11 பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12 பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================


சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

சந்திரன் முதல் வீட்டில் இருந்தால்.
 லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் 
செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ல் சந்திரன்
 நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4-ல் சந்திரன் இருந்தால்
 மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் இருந்தால்
 பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் 
சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

7-ல் சந்திரன் இருந்தால்

 மனைவி அழகான தோற்றம் உடையவள், சஞ்சல புத்தியுடையவள், தாய்மை உணர்வு அதிகமாக உடையவள்.

9-ல் உள்ள சந்திரன் இருந்தால் 
நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் 
தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் 
மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் 
பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.