கடன் தொல்லையை தீர்ப்பது எப்படி?

 அர்த்தமுள்ள  வாழ்க்கைக்கு ஆதாரம் எது?
பொருளாதாரம்தான்.  காசு, பணம், டாலர், வெள்ளி, ரியால் இப்படி எந்த பேர்ல இருக்கு என்பது முக்கியமல்ல.   
இருக்கணும்,  நிறைய இருக்கணும்.  அப்போதுதான் வாழ்க்கை பிரகாசமாய் இருக்கும்.
ஆனால் பலருடைய வாழ்க்கையில் பாராமுகமாய் இருப்பது இந்த பொருளாதாரம்தான். ஏழை ஆசைபட்டால் எதுவும் நடக்காது என்பதற்கு உதாரணமாய் நம்மை சுற்றியே பலர் இருப்பார்கள். 
விளைவு.. 
தங்கள் கனவுகளை நினைவாக்க கடன் வாங்குகிறார்கள். சுய தேவைகளுக்காக ஒருபுறம் இருக்க, சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடைசியில் பொறியில் சிக்கிய எலி மாதிரி சிக்கலில் மாட்டிகொள்வோரும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் காலத்தை கழிப்பது என்பது முடியாத காரியம்தான். ஆனால் அதை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாமல்  திண்டாடும் நண்பர்களுக்காக இந்த டிப்ஸ்.  
என் அன்பு நண்பர் சித்தயோகி சிவதாசன்ரவி அவர்கள் எழுதிய நூலில் இருந்து  இதை உங்களுக்கு தருகிறேன். 
செவ்வாய்கிழமை நவமி திதியும்,  ஞாயிற்றுகிழமை சதுர்சசி திதியும் சேர்ந்து வரும் நாளில் கடன் தொகையை திருப்பி செலுத்த தொடங்கினால், வெகு விரைவில் கடன் முடிந்து விடும்.
சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில்,  மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னம் உதயமாகும் நேரத்தில் கடனை திருப்பி செலுத்தலாம்.    ஆனால் இந்த லக்ன உதய நேரத்தை ஜோதிடரின் உதவியோடுதான் செய்ய முடியும்.
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ நாளில் மாலை நாலரை முதல் ஆறுக்குள் கடன் தொகையில் சிறு தொகையை திருப்பி செலுத்தலாம்.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்ப்பட்டு விலகும் நேரம் கடனை திருப்பி செலுத்தலாம்.  ஆனால் சந்திர கிரகணம்  என்பது இரவில் வரும் என்பதால் இது  சரிவராது.  

செவ்வாய் கிழமை, செவ்வாய் ஒரையில் கடன் தொகையில் சிறு தொகையை திருப்பி செலுத்தலாம்.  அவ்வாறு செலுத்தினால் அந்த கடன் தீர்ந்து விடும்.

No comments:

Post a Comment