விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம்
அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர்.
நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கக்கூடிய சூரிய பகவானை ஜீவன
ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
மட்டுமே உண்டு.
சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய் சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால்
கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல்
அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம், கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள்
போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால்
கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில், வணிக தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய
தொழில், அதிகார பதவி, பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம்
உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும்
ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி
வரும். சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை
பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்பு
ஏற்ஙபடும்.
குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால்
சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு
அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற
துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில்
அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறைய
சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி, ராகு சேர்க்கைப்
பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர்
பார்வையின்றி இருந்து விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில்
சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன்
8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான
வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
No comments:
Post a Comment