நவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்

நவகோள்களில் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். புதன் சந்திரனின் புதல்வராக கூறப்படுகிறார். ஒருவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித் திறன், ஞாபக சக்தி போன்றவை சிறப்பாக அமைய புதன் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

கல்வி காரகன், அறிவு காரகனாகிய புதன் மிதுனத்தில் ஆட்சியும், கன்னியில் ஆட்சி உச்சமும் பெறுகிறார். ரிஷபம், கடக ராசிகள் நட்பு ராசிகளாகும். மீனத்தில் நீசம் பெறுகிறார்.. புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். செவ்வாய், சனி சமமானவர்கள். சந்திரன் பகையாவார். புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு புதன் அதிபதியாவார். புதன் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு செல்ல 1 மாதம் ஆகிறது. ஒரு நட்சத்திரத்தில் பாதத்தை கடக்க 3 நாள், 20 நாழிகை ஆகிறது. புதன் சரியாக சூரியனுக்கு 11 பாகையில் அஸ்தங்கள் அடைகிறது.  3 மாதங்களுக்கு ஒருமுறை வக்ரம் அடைகிறார். சூரியனுக்கு 14 டிகிரியில் இருக்கும்போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் வக்ர நிவர்த்தி அடைவார். பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தி போன்ற திதிகளில் புதன் திதி சூன்ய தோஷம் பெறுகிறார்.

புதனின் காரகத்துவங்கள்,

புதன் பகவான் தாய்மாமன், கல்வி, ஞானம், விஷ்ணு, கணக்குத் தொழில், வங்கியில் கணக்காளர், உத்தியோகம், வாக்கு சாதுர்யம், கதை, கட்டுரை, காவியம் புனைதல், ஜோதிடம், பத்திரிகையாளர், சிற்பதொழில், நாட்டியம், இசை ஞானம், சகலகலைகளிலும் திறமை, புத்திர பாக்கியத்தடை, மரகதம், பச்சை இலைகள், பாசிப் பயிறு, வெந்தயம் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.

புதனால் உண்டாகும் நோய்கள்,

வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மனநிலைபாதிப்பு விஷத்தால் கண்டம், வேகமாக பேசும் நிலை, முளை பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள் காமாலை, கனவால் மனநிலை பாதிப்பு, வெண்குஷ்டம், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, வாதநோய், சீதளம் போன்ற நோய்கள் உண்டாகும்.
புதனின் திசை வடக்கு, பஞ்சபூதங்களில் மண், அறுசுவையில் உவர்ப்பு, தானியம் பச்சை பயிறு, தேவதை மஹா விஷ்ணு, மலர் வெண்காந்தம், நவரத்தினம் மரகத பச்சை, சுவை பல்சுவை, நிறம் பச்சை, குணம் ராஜஸ, திசை வடக்கு, வாகனம் குதிரை.

புதன் ஓரையில் செய்யக்கூடியவை

கல்வி கற்க ஆரம்பித்தல், ஜோதிடம், கணிதம் பத்திரிகை தொழில், கமிஷன் வியாபாரம், தேர்வு எழுத நல்லது.

புதனால் உண்டாகும் யோகங்கள்,

பத்திரயோகம் நிபூனா யோகம், பதாதித்ய யோகம்

பத்திர யோகம்,

புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், மற்றவர்களால் பாதிக்கப்படும் உன்னதமான சிங்கம் போல வாழும் அமைப்பு உண்டாகும்.

புதாதித்ய யோகம்,

புதனும் சூரியனும் சேர்க்கைப் பெற்றிருப்பது புதாதித்ய யோகமாகும். இதனால் கல்வியில் மேன்மை, பெரியவர்களின் ஆசி, வியாபாரத்தில் ஈடுபாடு, அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.

நிபூனா யோகம்,

சூரியனும் புதனும் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 1,4,8 ஆகிய இடங்களில் அமையப் பெறுவது, இதனால் உயர் பதவிகள் தேடி வரும். அரசியலில் முன்னேற்றம் கொடுக்கும்.புதன் ஒரு அலிகிரகமாவார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சுபகிரகத்தோடு சேர்ந்திருந்தால் சுபபலனையும், பாவ கிரகத்தோடு சேர்ந்திருந்தால் பாவப்பலனையும் தருவார். யாரோடு சேராதிருந்தால் சுப பலனையும் தருவார்.

புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபகிரகங்களோடு சேர்ந்திருக்கும் போது புதனின் தசா அல்லது புக்தி நடைபெற்றால் ஜாதகருக்கு உன்னதமான உயர்வுகள் உண்டாகும். கல்வி, அறிவு, ஞாபகசக்தி, பெரியோர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும் யோகம் ஏற்படும். புதனும் சனியும் சேர்க்கைப் பெற்றாலும் சனியின் சாரத்தில் புதன் அமையப் பெற்றாலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் கெடுபலன்கள் உண்டாகும். ஒருவர் மந்திர சித்தியில் வல்லவராக திகழ ஜென்மலக்னத்திற்கு 5ம் வீட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய் அமைந்து குரு பார்வையும் பெற்றிருந்தால் போதும். அவர்
மந்திர சித்தியில் வல்லவராக திகழ்வார்.

புதனுக்குரிய ஸ்தலங்கள்,

திருவெண்காடு, மதுரை

திருவெண்காடு,
புத்திக்கும் வித்தைக்கும் காரகனாகிய புதன் தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். இத்தலம் சீர்காழியிலிருந்த 15 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் உள்ளது.

புதன் ஈஸ்வரர்களை பூஜித்து வணங்கி துதித்து நவகோள்களில் தானம் இடம் பெற்ற இடங்களில் மற்றொன்று மதுரை. ஆலவாய் என அழைக்கப்படும் அழகான மதுரையில் சோமசுந்தரேஸ்வரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் சிறப்பு பெற்றவை.

புதனை வழிபடும் முறைகள்,

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது புதன் வழிபாடாக கருதப்படுகிறது.


விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஜெபிப்பது.


புதன் துதிகளை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரம் கழித்து கூறுவும்.


சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது.
10 முக ருத்ராட்சம் அணியவும்.


பச்சை பயிறு, பூசணிக்காய், பச்சைநிற ஆடை போன்றவற்றை மதிய வேளையில் ஏழை மாணவனுக்கு தானம் செய்யவும்.


வெண் காந்தல் பூவால் அர்ச்சனை செய்வது,


குருவாயூர் சென்று தரிசனம் செய்வது,

மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது நல்லது.


பச்சை நிற ஆடை, கைக்குட்டை உபயோகித்தல்,


தந்தத்தினால் ஆன பொருட்கள் ஆடை, அணிகலன்களை  பயன்படுத்துவது நல்லது.


'ஓம் ப்ரம் ப்ரிம் ப்ரௌம் ச புதாய நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில்
17000 முறை துதி'க்கவும். மரகதக்கல் மோதிரம் அணியவும்.

No comments:

Post a Comment