இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில்
முதலிடத்தை பெறுவது அஸ்வினி நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது
பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை
பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,சே, சோ, ல
ஆகியவை. தொடர் எழுத்துக்கள் செ சை முதலியவை ஆகும்.
குண அமைப்பு;
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை
பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை
விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த
சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில்
இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக
சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணமிருக்கும் அடுத்தவர்
சொல்லுக்கு கட்டுபடாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக
கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட
மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை
பேச்சுக்களில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.
குடும்பம்;
கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும்
நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும் நல்லவர்களாக
தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும்
யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம்
அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே
பெற முடியும் மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும்
இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில்
கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.
தொழில்;
எந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும். இதனால்
உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை
சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு
சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள் 24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே
பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் கிட்டும். பத்திர பதிவு,
வானியல், வங்கி, மருத்துவம், ரசாயனம் மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட்,
கட்டடம் கட்டுதல் போன்ற துறைகளில் ஈடுபட கூடிய வாய்ப்பு கிட்டும் ஜோதிடம்
விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு ஏற்படும்.
நோய்கள்;
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைல்ஸ், முதுகு தண்டு பிரச்சனை,
கணுக்கால் வலி, ஒற்றை தலை வலி, மூளை காய்ச்சல் போன்றவற்றினால்
பாதிக்கபடுவார்கள்.
திசை பலன்கள்;
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக
வரும். கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை
கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது திசை நடைபெறும் என்பதை அறியலாம். கேது
திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும்.
கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும்
சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.
இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும். சுக்கிர திசை மொத்தம் 20
வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி
உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் இத்திசை காலங்கள்
மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும்.
வாழ்க்கை தரமும் உயர்வடையும்.
மூன்றாவது திசையாக சூரிய திசை வரும். பொதுவாகவே மூன்றாவது திசை
முன்னேற்றத்தை சுமாராகத் தான் தரும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே
முன்னேற வேண்டி வரும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும்
கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.
சந்திர திசை நான்காவது திசையாக வரும் சந்திர திசை காலங்கள் 10
வருடங்களாகும். சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து திசை நடைபெறும்
இக்காலங்களிலும் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய
கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும்
செல்வ செழிப்பையும் கொடுக்கும்.
ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது திசையாக வரும்
செவ்வாய் திசை மாரக திசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள்
உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால்
பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும்
உண்டாக்கும். ராகு திசை 6வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும்
ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக
அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம்
செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.
மேற்கூறிய திசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே
நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை
சந்திக்க வேண்டியிருக்கும்.
அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும்.
அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
அஸ்வினி நட்சத்திர நாளில் மனை முகூர்த்தம் செய்தல் புதிய ஆடை
ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல்,
மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்க்கொள்ளுதல், தானியங்கள்
வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு
பெயர் வைப்பது, மொட்டையடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது.
வழி பாட்டு ஸ்தலங்கள்
ஸ்ரீரங்கம்
ரங்க நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள தன்வந்திரியை ஜன்ம நட்சத்திர
நாளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம். கொல்லி மலையில் உள்ள
அறப்பளீஸ் வரரும். அஸ்வினி நட்சத்திர காரர்களின் பரிகார தெய்வமாக
விளங்குகிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி
கோயிலிலும் வழி பாடு செய்யலாம். சென்னை திருவற்றியூம் மற்றும் திருவிடை
மருதூர் கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம
நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.
கூற வேண்டிய மந்திரம்;
சரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்
ஓம் வாக் தேவியை ச வித்மஹே
விரிஞ்சி பந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்!
அஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம்
ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர
காரர்களை திருமணம் செய்ய கூடாது.
No comments:
Post a Comment