கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாவார். செவ்வாய் பகவான் ஆட்சி
உச்சம் பெற்று குரு போன்ற சுப கிரகங்களில் பார்வை பெற்றால் சமுதாயத்தில்
ஓர் கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டாகும். நவகிரகங்களில்
நிர்வாகத்திற்கு காரகனான செவ்வாய் சிறந்த நிர்வாகத் திறமைக்கும, போலீஸ்
இராணுவம் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவிகள் வகிப்பதற்கும் காரண
காத்தாவாக விளங்குகிறார். செவ்வயர் பலமாக அமைந்து சூரியன் சேர்க்கை பெற்று
சுபர் பார்வையுடன் அமையப் பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில்
உயர் பதவிகளை வகிக்கும் யோகம், உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்க
அதிகாரியாகும் யோகம், பலரை வழி நடத்திச் செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும்.
குறிப்பாக செவ்வாய், சூரியன், குரு சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின்
சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய
அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.
செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப்
பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை
சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சந்திரன்,
ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து கெமிக்கல், இராசாயனம்
தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களிலும்
சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும்.
செவ்வாய் பலமாக அமைந்தவர்களுக்கு இயற்கையிலேயே அதிகாரமிக்க குணம் இருக்கும்
என்பதால் செவ்வாய், சந்திரன், குரு சேர்க்கை பெற்றிருந்தாலும்,
ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் அதிகாரமிக்க உயர்
பதவிகளை வகிக்கக்கூடிய அற்புத யோகம் உண்டாகும்.
செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும்
யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும்.
செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமாக அமையப்
பெற்றால் கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும்,
செவ்வாய் சுக்கிரனுடன், சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளில்
மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், 10 ல் குரு அமைந்து உடன் புதன்
சேர்க்கையும் ஏற்படுமேயானால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு,
பள்ளி, கல்லூரிகளில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும்.
அதுவே செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர்
பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும் சனி பார்வை 10ம்
வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும்
எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். 10ல் ராகு அமைந்து உடன் சனி
இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில்
செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment