சனீஸ்வரன்

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு.

கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம். இதனால் புரட்டாதி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.


ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாதிச்சனி நாட்களில் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர்.
சனிஸ்வரனுக்குறிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினைஅவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களாகும். உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப்பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று.
இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும்.
ஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனிஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும்.
கறுப்புத் துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷத்திற்கு பரிகாரம் செய்யலாம்.

சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர். இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.

இத் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம் இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.

சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றிச், அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது. காரணம்;

நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.

இந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.

அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி.

சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.

உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும். வாதம்-மனதளர்ச்சி நீக்குபவர் இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது.இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது.

இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர். குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000மைல்
. மனித உடலில் தொடைகளுக்கு உடையவர். குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

சனி ஜாகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் பாடு, உத்யோகம், வருவாய், பெரியோர் ஆதரவு, தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும். 8-ம் இடத்து சனி, தொல்லைகளை அள்ளித் தந்தாலும், ஆயுளை அதிகரிக்கச் செய்வார்.

ரேகை சாஸ்திரத்தில் நடு விரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில், அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால், ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும். 12-ல் சனி இருக்கப் பிறந்தோர்-வாழ்க்கை துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும் ஊதாரித்தனம், வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செலவிடுதல் போன்றவை நிகழும்.

பெருவிரலை அடுத்த சுக்கிர மேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனி பாடாய்படுத்தப் போவதின் அறிகுறி என திடமாக நம்பலாம். 4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.

* சனி பகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திருந்தால் இரும்பு மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமெண்ட், ஏஜெண்ட், தயாரிப்பு, கரும் பலகை, ரோஸ் உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம், போக்குவரத்து தொழிலிலும் வெற்றித் தரும்.

* சனியன்று சந்திராஷ்ட தினமாக மகரராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப் பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.

* லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் இல்லாமை, பணமுடக்கம் ஏற்படும். அதற்கு பரிகாரம் சாதுக்கள், மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் தானமாக கொடுக்கலாம்.

* சனி இரண்டில் இருந்தால் - நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.

* சனி மூன்றில் இருந்தால்- வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.

* சனி நாலில் இருந்தால் - கறுப்பு ஆடைகள், கொள்ளு (தானியம்) தானம் செய்யலாம்.

* சனி ஐந்தில் இருந்தால் - வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.

* சனி ஆறில் இருந்தால் - 40க்கு மேல் 48 வயதிற்குள்ள இடை காலத்தில் வீடு கட்டுதல் கூடாது.

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

அசுவினி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில்
வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

பரணி, பூரம், பூராடம்
சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம்
உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த
ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி
ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி
உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி
கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்

விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

 நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.


நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :

1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,
2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)
3. ஐந்து திரிகள்,
4. பல வண்ண உதிரி மலர்கள்,
5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,
6. தூபமிட சாம்பிராணி,
7. வெண்பொங்கல்,
8. சர்க்கரை பொங்கல்,
9. மனைப்பலகை ஒன்று,
ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.

             வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று  விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும்.

1. சூரியன் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.
2. சந்திரன் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  பொளமாய  நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன்  :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  புதாய   நமஹ" - 21 முறை சொல்லவும்.

5. குரு  :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  குருவே    நமஹ" - 21 முறை சொல்லவும்.

6. சுக்கிரன்  :
                      "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சுக்ராய   நமஹ" - 21 முறை சொல்லவும்.


7. சனி  :
                      "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சனியே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


 விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.

அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்

1. வசியம் : ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஓம் யங் ய ந ம சி வ சர்வ லோக வசி வசி ஸ்வாஹா !

2.மோகனம் :ஓம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சங் ம சி வ ய ந மோகனாய ஸ்வாஹா !

3. உச்சாடனம் :ஓம் ரங் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் க்லீம் ஐம் வ ய ந ம சி ஓம் ஸ்வாஹா !

4. ஸ்தம்பனம் :
    ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ந ம சி வ ய ஓம் ஸ்வாஹா !

5. ஆக்ருஷ்ணம் :ஓம் ஐம் சௌம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஐம் ந சி ய ம வ ஓம் ஆக்ருஷ்ணாயா நமஹா ஓம் ஸ்வாஹா !

6. பேதனம் :ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ந ய வ சி ம ஓம் ஸ்வாஹா !

7. வித்வேஷனம் :ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் க்லீம் ஐம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ய வ சி ந ம ஓம் ஸ்வாஹா !

8. மாரணம் :ஓம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஓம் சி வ ய ந ம ஹா ஓம் ஸ்வாஹா

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து  பொங்கல் நைவேத்யம்  வைத்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

     மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :

                 வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
                 மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
                 ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
                 தம்பனம் - புதன்கிழமை,
                 உச்சாடனம் - வியாழன்,
                 ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
                 மாரணம் - சனி

   மூலிகை பறிக்க உகந்த திசைகள் :

                  வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
                  மோகனம் - தெற்கு,
                  உச்சாடனம் - மேற்கு,
                  பேதனம் - வடக்கு,
                   ஏவல், தம்பனம் - தென்மேற்கு,
                 
மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.

செல்வவளம் பெருகி நிலைக்க

இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.


2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).


3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.


4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு  "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். 

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.