Showing posts with label raasipalan. Show all posts
Showing posts with label raasipalan. Show all posts

விருச்சிகம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

இப்போது ஏழரை சனி நடப்பதால் கண்ணில் படும் கடவுளை எல்லாம் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே..உங்க நல மனசுக்கு பெரிய கெடுதல் எதுவும் நடக்காது..அப்படி நடந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும்..ஏழரை சனி இத்தோடு போகட்டும் என சமாதனப்படுத்திக்கொள்ளுங்கள்.

விருச்சிக ராசியினர் குழந்தைகளாக இருந்தால் அவர்களை பெணி காக்க வேண்டும்..அன்பாக வளர்க்க வேண்டும் காரணம் ராசியின் சந்திரன் நீசம் ஆவதால் தாழ்வு மனப்பான்மை,பயம்,குழப்பம்,விரக்தி எளிதில் தாக்கும்..செவ்வாய் ஆட்சு உச்சம் பெற்று பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் வாழ்வில் நிறைய சாதிப்பார்கள்..தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் தன்னை ஒருவர் மதிக்கவில்லை எனில் அவர்களை தூக்கியெறிய தயங்க மாட்டார்கள்..அன்பாக நடந்துகொள்பவர்களிடம்..அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவார்கள்.

இந்த  ராசி கால  புருஷனுக்கு  எட்டாவது  ராசி, ஸ்திர ராசி, பெண் ராசி, ஜல ராசி,  சீற்றமுள்ள  ராசி, மெளனமாக ராசி,  வீரமான ராசி,  விவேகமான  ராசி,  இறுக்காமான  ராசி,   பாசமான ராசி,  கடமையான ராசி,  ஆதிக்கமான ராசி,  வீணான  விரையமான ராசி,  சினம் கொண்ட ராசி,  உமைப்புத்தன்மையுள்ள  ராசி,  நீண்ட ராசி, உறுதியான ராசி,  எட்டுக்கால் ராசி,  பலகால் ராசி, ஊர்வன ராசி,  விஷமுள்ள ராசி, உயரமான ராசி,பால்  உறுப்பைக்  குறிக்கும்  ராசியாக  அமைகிறது.  இந்த  ராசியில்  பிறந்தவர்கள்  தாய்  தந்தையிடம்  மிகவும்  பிரியமாக  இருப்பார்கள்.  மனைவியிடமும்  பிரியமாக  இருப்பார்கள்.

இந்த  ராசிக்காரர்கள்  எடுத்த  காரியத்தைப்  பிடிவாதமாக  செய்து  முடித்து  வைப்பார்கள்.  இளமைத்  தோற்றம்  உடையவர்கள்.  கூரிய  விழி  படைத்தவர்கள்.  தயாளக்  குணம்  உடையவர்கள்  ஆனால்  மன உறுதி  இல்லதவர்கள்.  சுக  போகங்களை  அனுபவிப்பதில்  ஆசையுடையவர்கள்.  பேச்சு  திறமையுடையவர்கள்.  இந்த  ராசியில்  பிறந்த  பெண்கள்  கூட  ஆண்களின்  மனோ பாவமும், குணங்களும்  உடையவர்களாக  இருப்பார்கள்.

இந்த  ராசிக்காரர்கள்  பழைய  பழக்க  வழக்கங்களை  உறுதியாக  கடைப்பிடிப்பார்கள்.  ஆடல்  பாடல்களில்  விருப்பம்   இருக்கும்.  தன்  கொள்கைகளை  அசைக்க  முடியாத  நம்பிக்கை  உடையவர்கள்.  ஆனால் அடுத்தவர்கள்  கொள்கையை  தாக்கியோ  அல்லது  பரிகாசம்   செய்ய  மாட்டார்கள்.  தன்னுடைய  புத்திசாலிதனத்தின்  மேல்  நம்பிக்கை  உடையவர்.  மனதில்  தோன்றிய   கருத்துக்களை  தெள்ளத்  தெளிவாக யாராகா  இருந்தாலும்  பயமின்றி எடுத்து  சொல்வார்.  இவர்கள் குருவாக  நினைத்து  பலபேர்  ஆலோசனை  கேட்டு  நடப்பார்கள்.  தீர்க்கதரிசி,  வாக்கு பலிதம்,  கனவு பலிதம்  இவர்கள்  வாழ்க்கையில்  இணைந்து  இருக்கும்.  எதிர்காலத்தை  நிர்ணயிப்பதில்  கெட்டிக்காரர்.  இவரை  எளிதில்  யாரும்  ஏமாற்ற  முடியாது.  வி.ஐ.பி.  வரிசையில்  இடம்  பிடிப்பர்.
இந்த  ராசிக்காரர்கள்  பேச்சில்  பிறரைத்  தாக்குவது என்று  ஆரம்பித்து விட்டால் தேள் கொட்டியது போல்  மறக்க  முடியாத  அளவு வேதனை  தரக்கூடிய அளவுக்கு  பேசுவார்கள்.  சிடுசிடுப்புமிக்க  நிலையில்  சீறி  விழுவார்.  நேர்மையானவர்,  வெளியே  வர  கூச்சப்படுவார். கூட்டத்திலிருந்தும்  மக்களிடமிருந்தும்  விலகி  இருக்க  விரும்புவார்.  இரகசியம்  காப்பவர்.  வெளிபடையாக  பேச  மாட்டார்  அப்படி  பேசினாலும்  பிறர்  மனதை புண்படுத்துவர்.

சான்றோர்களிடம்  அதிக  மரியாதையும்,  சிறியவர்களை  அடக்கி  ஆளுதலும்  உடையவர்.  சந்தேகம்  உடலோடு  குடிகொண்டிருக்கும்.  தனக்குத்  தெரிந்த நல்ல  தகவல்களை மற்றவர்களுக்கு  எடுத்துரைத்து  பரிமாறிக்  கொள்வார்.  மாறுபட்ட  கருத்து  உடையவர்கள்  இவர்களிடம்  வந்தால்  மறுநிமிடத்திலேயே  மாறிவிடுவர்.  

 காலம்   நேரம்  பார்த்து  கச்சிதமாக  கரியங்களை முடிப்பதில்  இவர்கள் வல்லவர்கள்.  வாக்கு  சாதூரியம்  மிக்கவர்.  பூர்வ  புண்ணியத்தின்  பயனாக  குடும்பம்  மிக  வசதியான  குடும்பமாக  அமையும்.  பொருளாதார  வளர்ச்சியில்  உயர்ந்த  நிலையில்  இருப்பார்.  குடும்பத்தினர்  இவர்கள்  சொல்லுக்கு  கட்டுப்பட்டு  நடப்பர்.  சகோதரர்கள்  எத்தனை  பேர்  இருந்தாலும்  அதில்  இவர்  முதன்மையானவராக  இருப்பார்.  பூர்வீக  சொத்துகள்  இருக்கும்  அதை  விட்டு  விலகமாட்டார்,  விற்கவும் மாட்டார்.  புதிய  சொத்துக்கள்  வாங்குவார்.

இவர்கள்  கொடுத்த வாக்கை  காப்பற்றுவதில்  வல்லவர்.  முன்னேற்றம்  பெருமைப்படத்தக்கதாக  இருக்கும்.  முன்யோசனையோடு  செயல்படுவர்.  அதனால்  பணப்பற்றாக்  குறை  ஏற்படாது.  யாருடைய  பணமாவது இவர்களுடைய  கையில்  இருந்து  கொண்டே  இருக்கும்.  ஆரம்ப  வயதில்  அளவோடு  செலவிட்டாலும்,  நடுவயது  காலத்தில்  ஆடம்பரத்தை  விரும்புவர்.  வாழ்க்கை  துணை  அழகு  அறிவும்  நிறைந்தவராக  இருப்பார்.  வாழ்க்கை  துணையால்  வருமானம்  வந்து  சேரும்.
இவர்கள்  புத்தி  கூர்மை  உடையவர்களாக  இருப்பார்கள்.  எதையும்  பார்த்த  மாத்திரத்திலேயே   புரிந்து  கொள்வார்.

தொழில்  கல்வியில்  ஆர்வம்  இருக்கும்.  ஆராய்ச்சித்  துறையில்  அதிக  அக்கறை  காட்டுவார்.  எழுத்து துறையில்  சிறந்த   விமர்சிகர்ளாகவும்,  அரசியல், இராணுவம்  போலீஸ்  போன்றவற்றில்  துப்பறியும்  நிபுணர்களாகவும்,  பொறியியல்  துறை,  அச்சகத்துறை,  பத்திரிகைத் துறை,  வங்கி துறை,  மருத்துவத் துறை,  தொழில்  சாலை,  மற்றும்  தொழிலகம்,  அரசு துறை,  நிர்வாகத்துறைகளில்  சிறந்த வக்கீல்,  நீதிபதி,  அல்லது  ஸ்தாபனங்களில்  நிர்வாகியாகவும்  இருந்து  புகழ்  பெறுவர்.  ஆக்கவும்  அழிக்கவும்  திறமை  பெற்றவர்.

இவர்கள்  விநாயகர், முருகன், நந்தி, அனுமன், சரஸ்வதி, லட்சுமி,  சிவன், சக்தி, விஷ்ணு,  ஆகிய  அனைத்து  தெய்வ  வழிபாட்டில்  ஈடுபட்டால்  நினைத்த  காரியம்  நடக்கும்.

விருச்சிக ராசியினர் எல்லா கடவுளையும் பார்த்த மத்திரத்தில் கும்பிடுவர்..ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் முருகன் வழிபாடு நல்லது..சந்திரன் நீசமாவதால் திருப்பதி சென்று வருதலும் நலம் தரும்...

ஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்

புதன்

ஒவ்வொரு   மனிதனுக்கும்  புத்தி   வேண்டும்.   ஒரு   சிறிய    விஷயமாக   இருந்தாலும்   பெரிய   விஷயமாக  இருந்தாலும்  அதை   தீர்க்க    புத்தி  என்ற   சக்தி   கண்டிப்பாக    தேவைப்படுகிறது.   மனம் [சந்திரன்]  பேதலித்தாலும்,   புத்திசாலி  தனத்தின்   [புதன்]  மூலம்   பாதுகாத்துக்   கொள்ளப்படுகிறது.  ஒரு   மனிதனை  செயல்  பட   செய்வது   எண்ணங்கள்  செயலாக   மாறுகிறது.   சிந்தனை,  சிந்திக்கும்   திறமை,   பகுத்தறிவு,   புத்தி,   பகுத்தறியும்   திறமை  இவைகள்   அனைத்தும்   மனதில்   தோன்றுகிறது.  இதற்கு   எல்லாம்  புதன்   காரணம்  ஆகிறார்.  அகத்தின்   அழகு   முகத்தில்  தெரியும்    என்று  கூறுவது   போல்   ஒருவரின்   முகத்திலிருந்து   அவரது   புத்திசாலி  தனத்தை   அறிய முடியும்.

புதன்  புத்திகாரன்,  அறிவு,  பொது அறிவு,  கல்வி அறிவு,  கல்வியில்  ஞானம்,  யூகம்,  புத்திசாலி   தனம்,  தெளிவாக   பேசுவர்,   விகடம் பேசியே  வெற்றி   காணுகின்ற   இனிய  இயல்பு,   இனிமையான  பேச்சு, மென்மையான பேச்சு,   பேச்ச்சில்  பெருந்தன்மை,  பேச்சில்  அனைவரையும் கவருதல்,  பளிச்சென்ற   உச்சரிப்பு,   நகைச்சுவை  ததும்பும்   நயமான  பேச்சு,  எதையும்   எளிமையாகவே   எடுத்துக்  கொள்ளும்  உள்ளமும்,  இரு   பொருள் படப்  பேசும்  திறன்,   எழுத்துத்  திறமை,   நடுநிலைமை,   தர்க்கம்   செய்வதில்  ஆற்றல்,  சிரித்த  முகம்,  சீரிய   பார்வை,  பலா  சுளை  பேச்சு,  கண்களால்   பேசி   கவி நடை  வீசி மயக்கும்  தன்மை இவையெல்லாம் புதன் கொடுப்பார்.
.
புதனுக்கு  மிதுனம்  மற்றும்   கன்னி  ஆகிய  இரண்டு   ராசி வீடுகள்  உண்டு.   இதில்   கன்னியில்  புத்னுக்கு   ஆட்சி,  மூலத்திரிகோணம்,   உச்சம்  ஆகிய    மூன்று   நிலைகள்  உண்டு.   கன்னியில்   புதன்  உச்சம்   பெற்று  இருந்தால்  உயர்ந்த   பண்புடையவராக   இருப்பார்.   மன்னிக்கும்   சுபாமுள்ளவராகவும்   இருப்பார்.   வாதத்தில்   யாரையும்   வெல்லும்   பாரக்கிரமத்தை  பெற்று   இருப்பார். அஞ்சாமல்   வாதிக்கக்   கூடியவர்.    இலக்கிய   கர்த்தாகவாகவும்,  இலக்கிய   விமர்ச்சகராகவும்,  கைத்திறன்  மற்றும்  கலை   இரண்டிலும்    ஆற்றல்   உடையவராக   திகழ்வார்.

கன்னியில்   உச்ச   பாகையில்   இல்லாமல்   மற்ற   பாகையில்  இருந்தால்  அந்த  ஜாதகர்   கல்வி  ஞானமும்,  எழுத்தாற்றல்,   சிறந்த   பேச்சாளாராகவும்,  கருத்தைக்   கச்சிதமாகவும்  விளக்கும்  ஆற்றல்   பெற்றவராகவும்,   நுண்கலைகளில்   தேர்ச்சி   உடையவராகவும்,  நடுநிலை   உடையவராகவும்,   பெருந்தன்மை    உடையராகவும்,  அற்பத்தனம்  இன்றி  வாழ்வார்.    அழகாக    உடை உடுத்துவார்.   அரசியல்   துறைகளிலும்,  நண்பர்களால்  ஆதாயமும்,  சுதந்திர  முள்ளவராகவும்   திகழ்வார்.   வர்த்தகத்     தொழில் வளமும்   அமையும்.  ஆனால்   கன்னியில்  இருக்கும்   அளவுக்கு  எதிர்  பார்க்க  முடியாது.

சூரியனிடமிருந்து   அதிகமாக   ஒளியை  பெறுவான்  புதன்.  அர்த்தனாரி   ஈஸ்வரன்   சங்க   நாராயணன்   பச்சை  நிறம் – புதன்   விஷ்ணு   காரகம்-  பசுமையான   இடங்கள்   எல்லாம்  புதன்   காரகம்.  மனதில்  அமைதியான   தோற்றம்  ஏற்படுகிறது.

புதன்  மிகச் சிறிய  கிரகம்.   இளமை  கிரகம் – தளிர்   இலைகள்..  மிக  இளமை  சுறுசுறுப்பானவன்,  வேகமாக  செயல்  படக் கூடியவன்.   சூரியனை  விட்டு   புதன்  பிரியாது  இருப்பது  போல்  நண்பர்களிடம்   நட்பு  விரும்பி  -அலி  கிரகம்  -  ஐயப்பன்- மோகிணி   வளர்ச்சி  அடையாத   பெண்   மனிதர்கள்  தூய   சித்தம் என்று   வரும்  போது   பால்    உணர்ச்சிக்கோ   அல்லது   லிங்க   பேதத்திற்கோ   இடமில்லை,  ஆகவே  புதன்   அலி  ஆவார்.  [நபும்சகன்]  அதாவது  12  வயது   பெண்  உடல்  உறவுக்கு   உடல்   தகுதி  பெறதாவர்  போல்  புதன்  செயல்படுகிறார்.

கிரகங்களில் புதன்  ஒருவர்  மட்டும்   தான்  தன்  வீட்டில்  உச்சம்  பெறுகிறார்.  உலகம்  அனைத்தும்   காப்பாற்றக்   கூடியவர்.  மகா விஷ்ணு.   அவர்  அடுத்த  வீட்டில்  தன்னுடைய  திறமையை  வெளிப்படுத்த   வேண்டிய   அவசியம்  இல்லை.  அறிவு   செல்வம்  உடைய   புத்திசாலி   பொருள்   செல்வத்தின்  மீது  ஆசைப்படுவதில்லை.  ஆகவே  பொருள்   செல்வத்திற்கு  அதிபதியான   சுக்ரனை    தன்  வீட்டில்   நீசம்   அடைய செய்கிறார்.  [அதனால்   தானே  புலவர்கள்  சிலர்  வறுமையில்   இருக்கிறர்களோ  போல்]
புதன்  கலகலப்பானவன்  அரட்டை  அடிப்பவர் -  மரகதப்பச்சை   -துளசி  [பச்சை]  மரிக் கொழுந்து -  கிளி   பச்சை  நிறம்  விஷயங்கள்  எல்லா  காரகம்.  புதன்   வளர்பிறை   தோற்றம் உண்டு.

ஒருவர்  ஜெனன  ஜாதகத்தில்   புதனுக்கு   குருவின்   பார்வை  பெற்ற   ஜாதகர்  கல்வியில்  சிறப்பாக   இருப்பதையும்,  புத்திசாலியாகவும்,  சரளமாக  பேசும்  திறனும்  இருப்பதை  அறிய  முடியும்.  புதன் இளமை,  இளமையாக  இருக்கும்  போது  உலக   சுகம்  அனைத்தும்  அனுபவிக்க   ஆசைப்படுகிறார்கள்.   புதன்   கேது   சேர்க்கை   நுண்ணிய  அறிவைக்காட்டும்.  மற்றும்   துறவிகளையும்  காட்டும்.   குரு  புதன்   அல்லது  புதன்  சனி  இணைவு  உள்ள   ஜாதகர்  இலாப   நோக்கம்   இன்றி   எந்த   காரியத்தையும்   செய்ய  மாட்டார்.   சூரியன்  புதன்   சேர்க்கை   விசாலமான  அறிவு  உடையவராக   இருப்பார்கள்.   
புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும், திருப்பதிபெருமாள்,குருவாயூர் கிருஷ்ணரையும் வழிபடலாம்

ஜாதகத்தில் சனி தரும் பலன்கள்

சனி

விதியின்    விதையைக்  குறிப்பவர்   சனி  ஆகும்.   ஈஸ்வரன்   பட்டம்  பெற்றவர்  ஆவார்.   கர்மத்தை   அனுபவிக்க    செய்பவர்  சனி,   சனி  கர்ம    காரகன்.  கர்ம   வினைக்கு  ஏற்ப   வாழ்க்கை  அமைகிறது.   ஒவ்வொரு   மனிதனும்   தன்  கர்ம    வினையை    அனுபவிக்க    பிறவி   எடுக்கிறார்.  இதிலிருந்து  யாரும்     தப்ப   முடியாது.    இதில்   விதி   விலக்கு   என்பது    கிடையாது.     பொதுவாக    சனியை    துன்பம்    அளிப்பவர்  என   கூறப்படுகிறது......

ஆனால்   உண்மையில்   துன்பம்  அளிக்காதவர்  ஆவார்.சனி   சிறந்த  நீதிமான்.     ஒருவரின்  முன்வினை      பயனைத் துல்லியமாக   அனுபவிக்கச்  செய்வார்.  பாகு  பாடின்றி   தம்  வாழ்க்கையில்  வழி   நடத்துவார்.   அவரவர்    கரும   வினைக்கு   ஏற்ப   கஷ்டத்தையும்,   நன்மைகளையும்    கொடுக்கிறார்.   சனி   ஒரு    உண்மையாக   உழைப்பவர்.    24  மணி     நேரமும்    ஓய்வு     இன்றி    உழைப்பவர்.கடுமையான உழைப்பாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் சனி பலமாக இருப்பார்..

சனி  ஒரு   குழந்தைப்  போல்  அல்லது   கிளியை  போல் என்று   சொல்லாம்.   அதாவது   சொன்னதைத்   திருப்பிச்   சொல்லும்  கிளியைப்   போல்   செய்த    கர்மாவை      திருப்பிச்   செய்பவர்.   முப்பிறவியில்   செய்த     கர்மாவை    இப்பிறவியில்   கொடுக்கும்    கர்மாகாரன்   ஆவார்.  ஒருவருடைய     ஆயுளை   நிர்ணயிருக்கும்   அற்புதமான      சக்தியுடையவர்,   பொருள்     எப்படி   விரயமாகிறது  என்பதைக்   குறிப்பிடுவதும்    இவர்தான்.12ல் கேது மறுபிறவி இல்லையென்றாலும் எல்ல கர்மவையும் இப்போதே கொடுத்து திக்குமுக்காட செய்பவர்.

வான்   மண்டலத்தில்     மிக   தொலைவில்   இருப்பவர்.   அதனால் சனி இருள் கிரகம் ஆகிறார்..சனி இரண்டரை வருடம் ஒரு ராசியை கடக்க ஆவதால் மந்தன் ,முடவன் எனப்படுகிறார்..சனியின்   தந்தையான    சூரியனின்    வீடான   சிம்மத்திற்கு 7 வது   ராசி   கும்ப   ராசி.    சூரியனின்    மனைவியான   சாயா    தேவியுன்    வீடு.   இந்த  ராசியில்தான்       சனி   பிறந்தார்.   [கும்ப   ராசியின்  சின்னம்    குடமாகும்.   குடத்தின்    உள்ளே   நிழல்    [சாயா  தேவி]     உள்ளார்.     பகல்    பொழுது   சூரிய   ஒளி     குடத்தில்   விழுவதால்  சாயா  தேவி   வலு  பெற்றதால்    சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த    ராசியில்    பலம்   அதிகம்   அதாவது     மூல   திரிகோண   இராசியாகும்.  திசை மேற்கு என்பதால் மேற்கு திசை பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கிரனின்   வீடான    துலாமில்    உச்சம்   பெறுகிறார்.   சுக்கிரன்   செல்வத்திற்கு    உரியவர்,   சனி   உழைப்பாளி,   பொதுவாக   எல்லோரும்   செல்வத்தை  அடைய    [வேலை   செய்கிறார்கள்]   உழைக்கிறார்கள்.

சனி  கிழவனுக்கு   உடைய   தோற்றம்,    சோம்பேறி,  உலக   ஞானம்     முழுமையாக   இருக்கும்,    இயலாமையால்    கவனித்துக்  கொண்டிருப்பதால்  ஞானம்   பெறுகிறார்.   கிழவனுக்கு   தாம்பத்ய  தகுதியில்லை,  அலிகிரகம், வேகமாக   செயல்  பட  முடியாது,  வயதானவர்கள்   மெதுவாகவும்,    மிக   தாமதமாக  செல்வார்கள்.   நிதனாமாக   செயல்பட்டதால்   காரியம்    நன்றாகவும்,   கண்டிப்பாகவும்  செய்து   முடிப்பார்,
 கறுப்பாக    இருக்கும்    அனைத்துப்    பொருள்களுக்கும்   காரகன்    சனி ஆவார்.காகம்,  எருமை,   எலி,   எள்.குப்பையில்   கிடந்த    ஒருவரைச்   சனி   கோபுரத்தில்   ஏற்றி     விட்டுப்   போய்விடுவார்,  அதன்   பிறகு    அந்தக்   குடும்பம்   தலைமுறையாக    செல்வத்தையும்   சுகத்தையும்   அனுபவித்துக்   கொண்டு   இருக்கும்,  அதே   போல்   கோபுர   உச்சியிலிருந்து    ஒருவரை   தூக்கி   சாக்கடையில்   வீசி   விட்டுப்    போனாலும்  போய் விடுவார்,  அதன்  பிறகு     அந்த  மனிதர்   எப்பொழுதும்   எழுந்து    மேலே   வருவார்  என்பது   யாராலும்    அறிய   முடியாத   விஷயம்.

சனி  பகவானுக்குரிய    தேவதை    சாட்சாத்   எமதர்ம       ராஜனே. எமனுக்கு  எமனாகிய    சிவபெருமானை    சரணடைவதாலும்    சனி   பகவானால்   ஏற்படும்   தோஷங்களீலிருந்து   நிவர்த்தி   அடையலாம்  என்பதாலேயே   சிவன்   கோவில்களில்    தவறாமல்    சனி  பகவானோடு      நவக்கிரகங்களையும்    பிரதிஷ்டை   செய்து    வைக்கிறார்கள்.