கௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்


கௌரி பஞ்சாங்கம்

ஒரு நாளில் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருகின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் வெற்றி கிட்டும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து விடலாம்

நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை தரும் அட்டவணை கௌரி பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.

இனி ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று பார்க்கலாம்

ஞாயிற்றுக் கிழமை
காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை உத்தியோகம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை அமிர்தம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை விஷம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை தனம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை சுகம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை சோரம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை விஷம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை உத்தியோகம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை அமிர்தம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை ரோகம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை இலாபம்

 

திங்கள் கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை அமிர்தம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை விஷம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை உத்தியோகம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை சுகம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை சோரம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை உத்தியோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை விஷம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை ரோகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை இலாபம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை தனம்

 

செவ்வாய் கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை ரோகம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை இலாபம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை தனம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சுகம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை சோரம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை விஷம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை அமிர்தம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை சோரம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை உத்தியோகம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை விஷம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை ரோகம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை இலாபம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை தனம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சுகம்

 

புதன் கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை இலாபம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை தனம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை சுகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சோரம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை விஷம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை அமிர்தம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை ரோகம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை உத்தியோகம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை அமிர்தம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை விஷம்

 

வியாழக் கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை தனம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை சுகம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை சோரம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை உத்தியோகம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை அமிர்தம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை விஷம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை ரோகம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை இலாபம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை அமிர்தம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை விஷம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை உத்தியோகம்

 

வெள்ளிக் கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை சுகம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை சோரம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை உத்தியோகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை விஷம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை அமிர்தம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை ரோகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை இலாபம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை தனம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை ரோகம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை இலாபம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை தனம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சுகம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை சோரம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை விஷம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை அமிர்தம்

 

சனி கிழமை

காலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை சோரம்
7.3௦ மணி முதல் 9 மணி வரை உத்தியோகம்
9 மணி முதல் 1௦.3௦ மணி வரை விஷம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்
பிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை ரோகம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை இலாபம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை தனம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சுகம்
மாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை இலாபம்
7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை தனம்
9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை சுகம்
1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சோரம்
நள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை உத்தியோகம்
1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை விஷம்
3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை அமிர்தம்
4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சோரம்

 

இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.

இலாபம்

இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். எல்லாம் லாபகரமாக முடியும்.

அமிர்தம்

இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.

சுகம்

இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.

தனம்

இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் கிட்டும்.

உத்தியோகம்

இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.

விஷம்

இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.

சோரம்

இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.

ரோகம்

இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.


ஓரைப் பலன்கள்

“ஹவர்” என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து “ஓரை” என்ற வார்த்தை பிறந்தது. ஒவ்வொரு மாதமும் தினசரி அந்தந்த ஊர்களில் சூரிய உதயமாகும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் பெற்ற ஓரை என்று சொல்லப்படுகின்றது.

எந்த கிழமையில் சூரிய உதயம் ஆகின்றதோ, அந்த கிழமையின் ஆளும் கிரகம் சூரிய உதயமுதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கின்றது,

உதாரணமாக ஞாயிறு காலை சூரிய உதயம் 6 மணிக்கு என்றால் அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை நடைபெறும். அதையடுத்து சுக்கிர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை, சனி ஓரை, குரு ஓரை, செவ்வாய் ஓரை என்று எழு கிரகங்களின் ஓரை முடிந்து அடுத்து சூரிய ஓரை ஆரம்பமாகும். திங்கள்கிழமை சூரிய உதயம் பொழுது சந்திர ஓரை ஆரம்பமாகின்றது. செவ்வாய் கிழமை சூரிய உதயம் பொழுது செவ்வாய் ஓரை ஆரம்பமாகின்றது.

ராகு, கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஓரைப் பலன்கள் இல்லை. மாறாக ராகு கால பலன் நடைபெறும்.

ஒரையின் பலன்களை தெரிந்து கொள்வோம்.

சூரிய ஒரையின் பலன்கள்

விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்திக்க, மருந்துண்ண, சொத்துப்பிரிவினை செய்ய, அரசு உபகாரம் பெற, பதவியில் அமர சூரிய ஓரை நேரத்தை தேர்ந்தேடுக்கலாம்.

சந்திர ஒரையின் பலன்கள்

திருமணத்திறகு பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கலை துறையில் ஈடுபடுதல், தொலை தூர பயணம் செய்தல், நாற்கால் ஜீவன்கள் வாங்குதல் முதலானவற்றை சந்திர ஓரை நேரத்தில் செய்யலாம்.

செவ்வாய் ஒரையின் பலன்கள்

போர்க்கருவிகள் செய்தல், போர் தொடுத்தல், பூமி, நிலம் சம்மந்தமாக விவரங்கள் பேசி முடித்தல், மருந்துண்ணல், நீர் நிலைகளை தடுத்து கரை அல்லது அணை கட்டுதல், அழிவு வேலைகளில் ஈடுபடுதல் உத்தமம். சுப காரியங்களை நீக்கவும்.

புதன் ஓரையின் பலன்கள்

ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கு கொள்ளுதல், கடித தொடர்பு கொள்ளுதல், பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல், தரகு, புரோக்கர் வேலை செய்தல் முதலானவை பலன் தரும்.

குரு ஒரையின் பலன்கள்

புதிய ஆடை ஆபரணம் அணிதல், சேமிப்பு தொடங்குதல், கொள்முதல் செய்தல், விவசாயத்துக்கு விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்தல் முதலானவை பலன் தரும்.

சுக்கிர ஒரையின் பலன்கள்

காதல் விவகாரங்களில் ஈடுபடுதல், கலைத்துறையில் ஈடுபடுதல், திருமண ஏற்பாடு பற்றி பேசுதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், ஆடை ஆபரணம் அணிதல் முதலானவை பலன் தரும்.

சனி ஒரையின் பலன்கள்

நிலத்தை உழுதல், எருவிடுதல், விவசாயம் செய்தல், இரும்பு, மின்விசை சாமான்கள் வாங்குதல், தோப்பு துறவு அமைதல், பயணம் செய்தல் பலன் தரும்.

பகல் கால ஒரையின் ஓட்டம்

நாழி மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
1-2 ½ 6-7 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
5 7-8 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
7 ½ 8-9 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்
10 9-10 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்
12 ½ 10-11 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்
15 11-12 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
17 ½ 12-1 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்
20 1-2 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
22 ½ 2-3 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
25 3-4 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்
27 ½ 4-5 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்
30 5-6 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்


இரவு கால ஒரையின் ஓட்டம்

நாழி மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
32 ½ 6-7 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
35 7-8 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்
37 ½ 8-9 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
40 9-10 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
42 ½ 10-11 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்
45 11-12 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்
47 ½ 12-1 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்
50 1-2 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
52 ½ 2-3 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்
55 3-4 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
57 ½ 4-5 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
60 5-6 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்

 

 

 

 

காலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்


நித்திரையிலிருந்து விழித்தவுடன் முதலில் காணத்தக்க பொருட்கள் வருமாறு.

  • தாமரைப்பூ
  • தீபம்
  • கண்ணாடி
  • சூரியன்
  • புகையில்லா நெருப்பு
  • செஞ்சந்தனம்
  • கடல்
  • வயல்
  • சிவலிங்கம்
  • முகில் சூழ்ந்த மலை
  • கன்றுடன் கூடிய பசு
  • தனது வலது உள்ளங்கை
  • தன் மனைவி
  • மிருதங்கம்

மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் நல்ல நன்மை பெறலாம்

முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்பதால் வீரிய விருத்தியும், உற்சாகமும், சர்வ வசியமும், ஞானமும் அதிகரிக்கும்.

நவாம்ச பலன்கள் – மேஷம்


தமக்கு தெரிந்த ரகசியத்தை வெளிப்படையாக சொல்வார்கள். விளைவுகளை கண்டு பயந்தாலும் வெளியில் காட்ட மாட்டார்கள்.

விடாப்பிடிவாதம் கொண்டவர்கள். விடாது முயற்சி செய்து காரியம் சாதித்து கொள்வார்கள். ஈடுபட்ட செயல் அனைத்திலும் தனது சக்திக்கு மேற்பட்டு உழைத்து கறை ஏறுவார்கள். பிறரது யோசனையை ஏற்க மாட்டார்கள்.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் கண்டிப்பானவர் எனும் பெயர் கிடைக்கும். பிரதி பலன் பார்க்காமல் செயல்படும் இவர்களது உழைப்பை பிறர் பயன் படுத்திக்கொள்வர்

பலராலும் பாராட்டப் படுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். பொது நிகழ்ச்சியில் வாக்குவாதம் செய்வார்கள். சச்சரவுகளும், வதந்திகளும் தாக்கினாலும் கலங்க மாட்டார்கள்.

சமாதனம் பிடிக்கும் என்றலும் முதல் முயற்சி எடுக்க மாட்டார்கள். எதிரியே எதிரில் வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்வார்.

அதிகாரம் மிக்கவர், பணபலம் கொண்டவர்கள் இவர்களை நாடி வருவர். அனுசரித்து சென்றால் அமைச்சர் பதவி, அரசு எந்திரத்தை இயக்கும் அதிகாரம் கிடைக்கும்.

அதிகம் சம்பாதிப்பார்கள். அதே நேரத்தில் அதிகம் செலவும் செய்வார்கள். பரம்பரை சம்பிரதாயாங்களை தொடர்ந்து செய்வர். புகழ் மிக்க ஆன்மீகவாதிகள் இவர்களின் செல்வத்தை அனுபவிப்பார்கள். நெருங்கிய உறவினர்களை வாழ வைத்துப் பார்பார்கள்.

இந்த நாவம்ச ஆண்களுக்கு எல்லா வகையிலும் ஏற்ற பெண் அமைவார். ஆனால் இந்த நவாம்ச பெண்களுக்கு அப்படி அமையாது.

புகழ் பெற்ற குடும்பத்தில் பிறப்பு ஏற்படும், இவர்கள் வளர வளர குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும். பின்னர் மறைந்து விடும். முகத்தில் அடையாள சின்னம் இருக்கும். சிரசிலும் தளும்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தங்களிடம் பிறர் கூறும் எதையும் சிரித்து தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள். பிறருடன் இனைந்து சாப்பிட மாட்டார்கள்.

பொதுவாக சொல்லிக் கொள்ளும் படி இளமையில் கல்வி அமையாது. பொது அறிவு அதிகம். புத்தகங்கள் அதிகம் படிப்பார்கள். கல்வியை ஒருவாறு சாமர்த்தியமாக முடிப்பார்கள்,

உடன் பிறந்தவர்களால் உதவி இல்லை. தந்தையைப் போன்ற மனநிலை இருக்கும். தாயார் உடைந்த உறவுகளை இணைப்பார்.

எப்போதும் பணத்தேவை இருக்கும். தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்து அல்லல்பட வேண்டி இருக்கும்.

முப்பது வயதுக்கு மேல் பணம் தாராளமாக புழங்கும். ஆனாலும் சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. திட்டமிடாத செலவுகள் கையிருப்பை காலி பண்ணும்.

படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல் அரசாங்கம் மூலம் வருமானம் கிடைக்கப்பெறும். நவாம்ச லக்னத்திற்கு பத்தாம் இடதில் சூரியன் தொடர்பு ஏற்பட்டால் அரசாங்க தொழிலும், சந்திரன் பத்தாம் இடத்தில தொடர்பு பெற்றால் கல்வி துறையிலும், செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் சீருடை பணியிலும், நோய் தீர்க்கும் பணியிலும் வாய்ப்பு கிடைக்கும். புதன் இருந்தால் கல்வி மற்றும் எழுத்து துறையில் வாய்ப்பு கிடைக்கும்.குரு இருந்தால் மதம் மற்றும் தர்மம் போன்ற துறைகள் அமையும். சுக்கிரன் எனில் படிப்படியான முன்னேற்றம் உள்ள உத்தியோகமும், சனி இருந்தால் விவசாய சார்பும், ராக கேதுகளுக்கு பல தொழில்களும் அமையும்.

இல்லற விஷயத்தில் ஜாதகர் ஆண் என்றால் மனைவியை நம்ப வைப்பதற்கே காலமெல்லாம் பாடுபட வேண்டி இருக்கும். ஜாதகர் பெண் எனில் அழகும் அதிகாரமும் கலந்து இருப்பார். பிடிவாதம் அதிகம் பிடிப்பார்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சூரியன்

மேஷ சூரியன் தேகத்திற்கு வலிவும் பொலிவும் தருவார். பரிசும் பாராட்டுகளும் குவியும். சதா காலமும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். பழைய முறைகளை மாற்றி புதியனவற்றை அறிமுகபடுதுவார்கள். பிடிவாத குணம் அதிகம். எல்லோரும் தங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். தற்பெருமைக்கும் குறைவில்லை. மோசடிகளை அம்பலப்படுத்தி கேவலப்படுத்தவும் செய்வார்கள். வேவுபார்க்கும் வேலையை திறம்பட செய்வார்கள். மேஷ சூரியன் உள்ளவர்களுக்கு அரசாங்க தொடர்பும் அதனால் நன்மையையும் உண்டாகும். எப்போதும் சக்தி வெளியாகிக் கொண்டிருப்பதால் களைப்பு ஏற்படும். நல்ல ஓய்வே சிறந்த மருந்து.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் செவ்வாய்

வழிய சென்று உதவுவார்கள் ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். தலை இட்டு மாட்டிக் கொள்வார்கள். பலரது அந்தரங்கங்கள் அத்துப்படி ஆகும். தேவை இல்லாமல் பேசி விடுவார்கள். வம்பை விலைக்கு வாங்கிய கதை ஆகிவிடும். தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆத்திரம், அவசரம், சந்தேகம் என சர்வ நாசத்தில் மூழ்க நேரும். தற்கொலை செய்து கொள்ளலாமா என்பதற்கு ஒப்பான சூழ்நிலைகளை வாழ்கையில் காண்பார்கள். ஆயுள் தீர்க்கம் தான் எனினும் ஆபத்துகளும், விபத்துகளும் குறிப்பிடும் படி இருக்கும். காயம், தழும்பு நிச்சயம் ஏற்படும்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் புதன்

கூர்ந்த மதியுடையவர்கள். பேனா பிடித்தாலும் வியக்க வைப்பார்கள். மைக் பிடித்தாலும் மெய் மறக்க வைப்பார்கள். அவ்வப்போது சண்டித்தனம் பண்ணும் உடல் நிலை இருந்தாலும் மனவலிமையால் அதையும் எற்று செயல் படுவார்கள். நையாண்டி கலையில் வல்லவராகும் வாய்ப்பை இங்கே உள்ள புதன் தருவார்.

ரசிகர், ரசிகர் மன்றங்கள், வெளி வட்டார தொடர்பு என பிரபலம் கிடைக்கும். நாடெங்கும் பிரயாணம், நாள்தோரும் பாராட்டு என முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைக்கும். இவர்கள் எழுதியோ, பேசியோ ஏடா கூடத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் குரு

தலைவர் என போற்றப் படுவார்கள். எதையும் உறுதியாக பேசுவார்கள். பேச்சுக்கு எதிர்பேச்சே இல்லை. ஆன்மீகம், சமய சடங்குகளை குறைவின்றி ஏற்று நடத்துவார்கள். நன்கொடைகள் குவியும்.

பல இடங்களுக்கு சென்று வருவார்கள். பலதரப்பு மக்களின் உறவும் உண்டாகும்.பலராலும் இவர்களது தேவைகள் நிறைவேறும். பலரும் போற்றும் படி பல நிகழ்சிகளை நடத்துவார்கள். வசதி வாய்புகள் வலிய வந்து சேரும்.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தோழிகளை செய்வார்கள். அதில் ஒன்று பொது வாழ்கையை தொடர்பு படுத்தி இருக்கும். ஒரு வழியில் ஆன்மீகவாதியாக தென்பட்டாலும் கேளிக்கை அரங்குகளிலும், சூதாட்ட விடுதிகளிலும் பலருடன் சேர்ந்து உற்சாகமாக வலம் வருவார்கள்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சுக்கிரன்

அலங்கார பிரியர்கள். இவர்களிடம் நல்ல திறமை இருக்கும். கலைகளில் தொடர்பு பெறுவார்கள். ஆனால் எதுவுமே அரைகுறையாக இருக்கும். எல்லாம் அறிந்தவர் போல் காட்டிக் கொள்வார்களே ஒழிய அந்த அளவு ஆர்வம் இருக்காது. செலவுக்கு பணம் வேண்டும் என்ற சமயத்தில் மட்டும் தங்கள் தொழிலில் அக்கறை காட்டுவார்கள். பணம், போரும் கையில் வந்ததும் செலவழிக்கும் வரை அடங்க மாட்டார்கள். ஆடி தீர்த்த பின் அடங்க நேரிடும். உல்லாச பிரயாணங்கள் நிறைய இருக்கும்.

காதல் மன்னர்கள். திருமணத்திற்கு பிறகும் காதலை தொடர்வதால் இல்லத்தில் பிரச்சனைகள் தோன்றும். பெண்களால் பயன்கள் தாராளமாய் கிடைக்கும். கொஞ்சம் கூட யோசிக்காமல் அனுபவிப்பார்கள்.

இவர்கள் திறமைசாலிகள் என்று குறிப்பிட முடியாது ஆனாலும் வாய்ப்புகளும் ஆதரவுகளும் கை கொடுத்து தூக்கி விடும்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சனி

எல்லோருக்கும் ஏற்ற மனிதர்கள் இவர்களே. தன் தேவைகளை விட்டு விட்டு தம்மை நாடி வந்தவர்களை அக்கறையுடன் அணுகுவார்கள். எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்த்து வைக்கும் அபார ஞானம் வாய்க்கப் பெரும். சமயோசிதமாக செயல் படுவார்கள். பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் இவர்கள் இல்லம் தேடி வருவர்.அறிவே பிரதானம். அனுபவம் குறைவு என்றாலும் திறமைசாலிகள்.பிறருடைய நம்பிக்கையை மட்டுமே விரும்புவார்கள். சாதாரண மனிதனை புகழ் மிக்கவராக மாற்றும் மாயாஜாலம் அறிந்தவர்கள். இதனால் நன்பர்கள் நாலவட்டதிலும் இருப்பார்கள்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் ராகு

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெகு உயர்ந்த ஸ்தானத்தை பெறுவது உறுதி. பலரும் கீழ்படிந்து நிற்பார்கள். சம்பந்தம் இல்லாதோரும் வணங்கி நிற்பர். இவர்களது மேல்மட்ட தொடர்புகள் மேம்பாட்டு கவுரவத்தை பெற்று தரும். ஆளைப்பார்த்து எடைப்போடாதே என்பது இவர்களுக்கு பொருந்தும். அப்படி ஒரு மாதிரி விசித்திரமாக காட்சி அளிப்பார்கள். செய்யும் தொழிலுக்கும் கிடைத்த புகழுக்கும் சம்மந்தம் இல்லா தோற்றம் வாய்க்கும்,

தனக்கு நன்றாக வரும் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப விருப்பப்பட்ட செயல்களை செய்து அதையே தொழிலாக மேற்கொள்வார்கள். பலமுறை சறுக்கி விழுவார்கள். ஆனாலும் விடமாட்டார்கள். புது புது வழிகளை கண்டுபிடித்து கொண்டிருப்பார்கள். பிறரை அசத்தும் படி எதாவது செய்து திகைக்க வைத்து விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவர் எனலாம். சாதனை மனிதர்களாக ராகுவால் உருவாக்கப்படுவார்கள்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் கேது

எதிர்ப்புகள், இன்னல்கள் என இடையூறுகள் பல தருவார் இந்த மேஷ கேது. சிரித்து பழகி முதுகில் குத்தும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள். மாந்ரீகம், தாந்ரீகம், ரசவாதம் என்று நடைமுறைக்கு ஒத்துவராதவற்றில் நம்பிக்கை கொண்டு கைப்பொருள் இழக்க நேரும். காலமும் வீணாகும்.

கல்வியில் மேம்பட்டு விளங்குவார்கள். பிறர் வியக்கும்படி பேர் பெற்ற மாணாக்கராய் இருந்திருப்பர். எனினும் சம்பாதிக்க இந்த கல்வி உதவாது. சாமர்த்தியமும் போதாது.

கூடுமானவரை பிறருக்கு உதவுவதும், பிறரை மன்னிப்பதும், ஸ்தல யாத்திரைகளுக்கு சென்று வருவதும் நன்மை தரும்.

நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சந்திரன்

பலவிதமான மனிதர்களை காலா காலத்தில் சந்தித்து உறவு கொள்வர். நீண்ட காலம் புது உறவுகள் நீடிக்க செய்யும். காரணம், உதவி செய்ய முன்வரும் குணம் இவர்களது குணமே. துணிந்து உதவுவார்கள். யார் எதை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களை தடுக்க முடியாது. இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரையும் மேலோர், கீழோர் என்றில்லாமல் தன்கட்டுக்கு கொண்டுவரும் திறமை உண்டு. சிறு பிராயத்திலேயே இவர்கள் தம் குடும்பத்தில் முக்கியம் பெறுவார்கள். திருமணத்திற்கு பிறகு தமது குடும்பதிலும் தங்கள் முடிவுகளையே ஏற்கும்படி செய்வார்கள். பெற்றோர் மீது பரிவும் பாசமும் உள்ளோர் எனினும் சூழ்நிலையில் பிரிவுகளும், பிரச்சனைகளும் வரும். எனினும் குறை கூற மாட்டார்கள். பிறர் குறை கூற விடவும் மாட்டார்கள். தாயே தெய்வம் எனலாம். நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் பொழுது ஊர் விசயங்களையே பேசுவார்கள். தன் வீட்டு விசயங்களை வெளியிட மாட்டார்கள். விவரமானவர்கள்.

ஒரு தலைவராகவோ, பலரும் அறிந்த பிரமுகராகவோ உலா வர இந்த மேஷ சந்திர அம்சம் உதவும்.

நவாம்ச பலன்கள் – ரிஷபம்


நவாம்சத்தில் ரிஷபம் லக்னமாக அமையப் பெறுவது மிக நல்லதொரு அமைப்பாகும். அறிவும் அதிர்ஷ்டமும் ஒன்றாக வாய்க்கும்.யூகித்து அறியும் வல்லமை கிடைக்கும். ஆய்வு செய்திடும் வாய்ப்பு கிடைக்கும். மணிக்கணக்கில் பேசும் திறமை உள்ளவர்கள்.

சிறிய பதவி, சிறுதொழில் என்று ஆரம்பம் நிதானமாக இருக்கும். அதுபோலவே படிப்படியான உயர்வுகளும் ஏற்படும்.. திடீர் முன்னேற்றம், பிரபல்யம் என்றில்லாமல் சீரான முன்னேற்றம் நிச்சயம் உண்டு. இளமையில் பல திட்டங்களை போட்டு பார்ப்பார்கள். ஆடை அதை, இதை செய்ய வேண்டும் என்று மணக்கணக்குகளை வைத்திருப்பார்கள். தம் நடு வயதுகளில் சாதித்து காட்டி சுகானுபவங்களில் திளைத்து பின் முதுமையில் ஆன்மீகவாதியாகவும் வாழ வாய்ப்பு உண்டு.

பலரும் விரும்பும் நபராக வலம் வர முடியும். அந்தஸ்து உயர்வு கூட சில எதிரிகளை ஏற்படுத்தி விடும். இதனையும் அனுபவிக்க வேண்டி வரும். நண்பர்களை தேர்வு செய்வதில் மிக்க கவனம் வேண்டும். மதுப்பழக்கமே இல்லாத போதும் நண்பர்களுக்காக மதுபான அரங்குகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷப லக்ன நவாம்சத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு ஆளாகின்றார்.

பல பெண்களை மயக்கும் ஆண்களும், பல ஆடவர்களை அலைக்கழிக்கும் பெண்களும் ரிஷப நவாம்சத்தில் பிறந்தவர்களே,

இனிக்கும் இல்லறம் இவர்களுக்கு உண்டு. செல்வாக்கு மிக்க குடும்பமாய் திகழும். தன் குடும்பமே முக்கியம் என்பது போல் இவர்கள் செயல்கள் இருக்கும். வருமானத்தை குடும்பத்திற்கு தந்து விட்டு தான் அடுத்த வேலைப் பார்பார்கள். குடும்பத்தில் அனைவருமே கல்வியில் மேன்மை பெற்றிடுவர். கலை குடும்பம் என்று சொல்லும் வகையில் பெயர் எடுப்பார்கள்.

இவர்களுடைய யோகங்களில் மிகசிறப்பானது என்று கவனித்தால் தன்னுடன் படித்தவர்கள், உடன் பிறந்தோர் இவர்களை விட பிரம்மாதமாக முன்னுக்கு வருவார்கள்.

பல விதங்களில் வாய்புகள் தேடி வரும். திறமையை விட அதிர்ஷ்டமே இவர்களுக்கு பலவாறு உதவி நிற்கும். உழைப்பை விட இவர்கள் பெயருக்கே பெரும் வருமானம் கிடைக்கும்.

தங்களுக்கு என்று ஒரு முகவரி, சந்திக்க ஒரு அலுவலகம் என அடைத்துக் கொண்டு காலம் நேரம் தவறாமல்வந்தாலே போதும். வாய்ப்புகள் தானே வந்து நிற்கும். இது உறுதி. அதுபோலவே உதவி தேவைப்படுகின்றது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். தக்க காலத்தில் கைம்மாறு கிடைக்கும்.

வருமானத்திற்கு கலைத்துறை கை கொடுக்கும் என்பது போல் உணவு, எண்ணைய், பழைய இரும்பு, விவசாயம் போன்ற துறைகளும் உடன் வரும். ஆராய்ச்சி மேன்மை தரும். சட்ட துறையும், திட்ட துறையும் இவர்களது கருத்துக்களை ஏற்று கொள்ளும் காலமும் வரும்.

இவர்களை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஆனால் சிலரால் ஒதுக்கப் பட நேரும். அதாவது ரிஷப லக்ன பெண்களை பிற பெண்கள் புறம் தள்ளுவார்கள். ஆனால் இவர்கள் மனதில் வைத்திருந்து தக்க சமயத்தில் காலை வாரிவிட்டு பழி தீர்த்துக் கொள்வார்கள். பட்ட வலியை எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

ஓரளவு பிரபலமான குடும்பத்தில் ஜனனம் அமையும். வளரும் காலத்தில் பெற்றோரை பிரிந்து தனித்து வளர்க்கப்படலாம். இளம் பிராயத்திலேயே இவர்களின் அனுபவமிக்க பேச்சை கேட்டு பலரும் பிரமிப்படைவார்கள்.

விவரம் தெரியவரும் வயதுகளிலேயே வித்தியாசமாக இருப்பார்கள். எடுப்பான உடை அணிந்து கம்பீரமாக தோன்றுவார்கள். ஒளி மிகுந்த கண்கள் எவரையும் கவர்ந்து இழுக்கும்.

உள்ளன்போடு பழகுவார்கள். கூச்சப்படாமல் சகஜமாக இருப்பார்கள். பொதுவான சகிப்புத்தன்மை தென்படும். எப்போதாவது தான் கோபம் வரும். பழகிவிட்டால் பரிந்து பேச தயங்கமாட்டார்கள். ஜாமீன் போடா இவர்களை நம்பலாம். அளவு கடந்த ஞாபக சக்தி உள்ளவர்கள் என்பதால் உடன் பழகுபவர்களை ஞாபகபடுத்திக் கொண்டு பேசுவார்கள். இதுவும் கூட இவர்களை பிரமுகர்களாக்கும்.

கல்வியில் கவனம் இராது. அக்கரையுல்லாமலே பல படிப்புகளை படித்து முடித்து விடுவார்கள். அனுபவ அறிவே கல்வி அறிவைவிட மிகுந்திருக்கும். தக்க சமயத்தில் அனுபவமே ஆசிரியராகும். தான் படித்ததை தான் பெற்ற அனுபவத்தோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வார்கள்.

உடன் பிறந்தோர் இவர்களின் உள்ளத்தை உணர்ந்திரார். உடன் பிறந்தோர் இவர்களின் உதவியை எதிர்பார்கும் நிலை வரலாம்.நிச்சயம் முன் சென்று உதவுவார்கள்.

இவர்கள் இளம் பிராயத்திலேயே சம்பாத்தியத்தில் ஈடுபடவார்கள். பெரிய முதலீடு தேவை படாது. எளிமையான ஒரு தொழிலை ஆடம்பரமில்லாமல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பர். விவசாயம் சார்ந்த விஞ்ஞான பூர்வமான தொழில்களில் மனம் லயிக்கும்.அந்த தொழில்களும் கை கொடுக்கும். பழுது நீக்கும் தொழில்களும் பெரும் பலன் தரும். பல பிரமுகர்களின் ஆதரவு சுலபமாக கிடைக்கும். இவர்களின் அலுவலகத்தில் முக்கிய நபர்களை அடிக்கடி பார்க்கலாம். இதுவே இவர்களின் பலம்.

ரிஷப நவாம்சத்தில் சூரியன்

தயாள குணம் உடையவர்கள். தனது வருமானத்தை உடன் பிறந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். பணச் சிக்கல்களை வெகு திறமையாக கையாள்வார்கள். கௌரவமே பிரதானம் என நினைப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்க குறுக்கு வழியில் எதையும் செய்ய மாட்டார்கள்.

விளைவுகளை பற்றி சிந்தித்து அமைதியாகவே தென்படுவார்கள். ஆனால் மிகவும் முன் எச்சரிக்கைகாரர்கள். ஏதேனும் பெரிய செயல்களில் ஈடுபடும் போது மட்டும் சூரியன் போல் சூடாக இருப்பார்கள், ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு துறைகளில் ஈடுபடுவார்கள்.

ரிஷப நவாம்சத்தில் சந்திரன்

தேய்பிறையில் இருந்து வளர்பிறைபோல் வரிசையாகவே தன்னுடைய வளர்சிக்காக எதையும் செயல்படுத்துவார்கள். தன்னை யாரும் குறை கூற கூடாது என்று மிகவும் கவனத்துடன் இருப்பார்கள்.

சமுகத்திற்கு கட்டுபடுபவர்கள் இவர்கள். சமுக கட்டுபாடுகளை மீறி எதையும் செய்வதற்கு அச்சப்படுவார்கள். பூர்வீக தொழிலும், பூமி சார்ந்த தொழிலும் இவர்களுக்கு மிகச்சிறப்பாக கைகொடுக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்று எந்த தொழிலை செய்தாலும் மிகச்சிறப்பாக செயல்படுத்துவார்கள். நான்கு திசைகளிலும் நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள். நண்பர்களுக்கு செய்யும் உதவிகளால் இவர்களும் பயன் அடைவார்கள்.

இவர்கள் கலை துறையில் ஈடுபட்டால் வெகு பிரபல்யம் ஏற்படும். மதுபானம், திரவ சம்பந்தமான உணவுகளும் லாபம் தரும். குளிர்ச்சி தரும் கருவிகளில் பணம் குவிக்கலாம். ரிஷப சந்திரன் ஜாதகரின் பெயரை புகழடைய செய்திடுவார்.

ரிஷப நவாம்சத்தில் செவ்வாய்

பேச்சில் உறுதி இருக்கும். வாக்கு வலிமை பெறும். அது ஊருக்கும் உறவுக்கும் ஒத்து வராது. நல்ல கருத்துகளை சொல்லுவார்கள். ஏற்க இயலாது என்று உடன் இருப்போர் உதாசீனம் செய்வர். ஆதரவு அற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

உழைப்பவர்கள் தம் பங்கை பெற சரியான வழி வகையை கையாள்வர்கள். ஒதுக்கப்பட்ட பெண்களை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து மீட்க முயலுவார்கள். ஆனால் ஒரு சமயம் பாலியல் குற்ற சாட்டுக்கு ஆளாகி நிற்க நேரும். துரோகிகளால் அவதிப்படுவர். பலரும் போற்ற வாழ்ந்தாலும். இன்னொரு புறம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும்.

நினைத்த அளவில் சம்பாதிக்க இந்த செவ்வாய் பகவான் உதவுவார். யார் எப்படி போனால் என்ன என்ற எண்ணமும் சுயநலமும் இருந்தால் மட்டுமே வளமான எதிர்காலம் அமையும். சமுதாயத்தை சீர்படுத்த போகிறேன், புது விசயங்களை தமது தொழிலில் வெளியிடுகின்றேன் என்று பல முயற்சிகளில் ஈடுபடுவது வீணே.

ரிஷப நவாம்சத்தில் புதன்

சாதி மத பேதமில்லாமல் ஏழை-பணக்காரன் என யாவரும் விரும்பும் ஒரு துறை கலைத்துறை. அந்த கலைத்துறையின் வித்தகர் இவர்கள். யாவரும் விரும்பும் நாடகம், நடிப்பு, இசை, ஜோதிடம் எளிய வைத்தியம் போன்ற துறைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள். முதலீடு போடாமலேயே பெரும் பணம் வந்து சேரும். அப்படி சேரும் பணத்தை சேமிக்க தெரிந்தவர்கள். ஆயினும் தன் மனம் போன வழியில் செலவழிக்கவும் தயங்க மாட்டார்கள். கணக்கு வழக்குகளில் திறமை இருக்கும். அது போல ஆட்களை கணித்து பயன்படுத்தும் பக்குவமும் நிரம்ப பெற்றவராவர்.

சாதி சமய உணர்வுக்கு ஆட்படுவார்கள். ஆழ்ந்த ஆன்மீக கருத்துகள் பெற்றிருப்பார்கள். எந்த மதத்தையும் பேதம் பார்க்காமல் வழிபடுவார்கள். காலம் மாறினாலும் இவர்களுடைய அபிப்ராயம் சரி என்றே பேசப்படும். அன்றே சொன்னார்கள், அது போலவேஆனது என்று புகழப்படுவார்கள். ஆரம்ப காலத்தில் வருமானம் பற்றாக்குறையே. வயது ஆக ஆக புகழும் கூடவே வருமானமும் வந்து சேரும். நீண்ட காலம் பயன் தரும் தொழில் அமைந்து விடும். இவர்கள் பண்பாளர்கள், ஆலோசனைக்கு உகந்தவர்கள்.

ரிஷப நவாம்சத்தில் குரு

பெரிய மனிதர் என போற்றப்படும் வாழ்க்கை அமையும். பெருந்தன்மையும், கர்வமும் சேர்ந்த குணம் கொண்டவர்கள். விமர்சிக்க தயங்க மாட்டார்கள். மக்கள் பார்வையில் பதிந்து இருப்பார்கள். தத்துவவாதி, சீர்திருத்தவாதி எனப்\ பெயர் ஏற்படும். எதுவானால் என்ன, தனது குடும்பமே முக்கியம் என்ற தன்னலம்மிக்கவர்கள் என்பதும் நிதர்சனம்.

கோவில், குளங்கள், பூஜை தர்மகாரியங்களில் இவர்களை காணலாம். பெரிய பயணங்கள் பலனும் பணமும் அளிக்கும். இவர்கள் பேச்சுவன்மை பரிசுக்கும், பாராட்டுக்கும் வகை பெற்று தரும்.

நன்கொடைகள் நாலாபுறமும் இருந்தும் வந்து விழும். பிறர் சொத்துகளை எப்படியாவது அனுபவிக்கும் வாய்ப்பும் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். பலர் போற்ற வாழ இந்த குரு வகை செய்வது உறுதி.

ரிஷப நவாம்சத்தில் சுக்கிரன்

பொதுவாக அன்பே வடிவானவர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். வம்பு தும்புக்கு அஞ்சுபவர்கள். பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கலாம். விருப்பத்துடன் ஏற்ற்றுக்கொள்வார்கள். செய்தும் முடிப்பார்கள். நாட்டியம், ஓவியம், காவியம் இவைகளில் அபார ஞானம் இருக்கும். சிறு பிரயாதிலேயே இவர்கள் இசை சூழும் இடங்களில் அடைந்து கிடப்பார்கள்.

திருமணம் சகலதையும் மாற்றிவிடும் எனலாம். இல்லறத்தில் இனிமை காணாத ஒரு நிலைமையை இந்த ரிஷப சுக்கிரன் ஏற்படுத்துவார். கணவன் மனைவி உறவில் ஊசல், எதிர்பாராத பிரிவுகள், பணப்பிரச்சனைகள் என துரதிர்ஷ்டம் துரத்தும். மணவாழ்க்கை போராட்டமாகாவோ அல்லது கன்னியர்அமைவது கால தாமதமாகும். காலம் கடந்த பின்னரே உறவுகள் சேர்ந்து மகிழ முடியும்.

ரிஷப நவாம்சத்தில் சனி

குபேரனுக்கும், இவர்களுக்கும் ஓயாத சண்டை என்பதுபோல் செல்வம் பிடிபடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்து விடுவார்கள். வரும் என்ற நினைப்போடு வருவாயை மனதிலே வைத்து இருப்பர். ஆயினும் காசு கரைந்ததும் தான் தெரியும் வரப்போவது வருவாய் அல்ல; பெரும் கடன் என்று.

இளமையிலேயே தந்தை வழி உறவினர்க்கு ஆகாது. எப்போதும் எந்த உறவும் தக்க சமயத்தில் கை கொடுக்காது. நல்ல மனிதர்தான். இருந்தாலும் இவர்களது தோற்றமும் அடக்கமும் இவர்களுக்கு எதிரான விளைவுகளையே தருகின்றது. மற்றோர் இவர்களை மட்டமாகவே எடைபோடுவார்கள். விலக்கி வைத்துவிட்டு வருமானத்தை தன் கைக்குள் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். இவர்கள் நிலையோ அல்லாட்டமே. பணிவும், அடக்கமுமே இவர்களின் துரதிர்ஷ்டத்திற்க்கு வாயில் எனலாம்.

நல்லதுக்கு காலம் இல்லை என்று இவர்களை குறித்து சொல்லலாம். எளிமையும் பணிவும் எப்போதும் நல்லது செய்யாது. துணிவும் தைரியமும் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தி உஷாராக இருக்க வேண்டும். பலருக்கும் பாடமாக இருப்பதை விட தன்னை நம்பிய சந்ததிக்கு உபயோகமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும், தம் வாழ்வின் பிற்காலம் அதாவது எதிர்காலத்தை எண்ணி செயல்படுக.

ரிஷப நவாம்சத்தில் ராகு

அறிவே பிரதானம். பிறர் வியந்து நிற்கும் தனித்திறமை இருக்கும். திட்டமிடாமல் இருப்பார்கள். எனினும் மின்னல்போல செயல்பட்டு மிரள வைப்பார்கள். வசிக்கும் இடத்தையோ, செய்யும் தொழிலையோ, மாற்றிக் கொண்டிருப்பார்கள். வெளி பிரதேசங்களில் சஞ்சாரம் செய்து வருவதில் அலாதி பிரியம்.

ஒரு சமயத்தில் திடீரென எதாவது ஒரு பகுதியில் பிரபல்யம் பெற்று பிரமுகராகி விடுவார்கள். கலைத்துறையில் திடீரென்று புதுமுகமாக வந்து பெரும் புகழ்பெறுவதும் ஒரே சமயத்தில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போவதும் இவர்களே.

கல்வி ஞானம் குறைவே. ஆயினும் புதிய புதிய யோசனைகளையும், விசயங்களையும் வெளியிட்டு அசத்துவார்கள். திட்டங்களை அடிகடி மாற்றுவதே இவர்கள் சரிவுக்கு காரணம். இதில் கவனம் இருந்தால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள்.

ரிஷப நவாம்சத்தில் கேது

பிரமுகர்கள் ஆவார்கள். சுகமான வாழ்க்கை எதாவது ஒரு வழியில் வந்து சேரும். எவரையும் வசீகரிக்கும் ஒரு திறன் இருக்கும். கோமாளி போல் இருந்தாலும் தள்ளி விட முடியாது. வறுமை தொடாதிருக்கும்படி வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.வழிவகையை ஆராயக்கூடாது. நடத்தையில் நேர்மை குறைவே என பேச்சு வந்தாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். சுகமே பிரதானம். கலைகளில் வெற்றி காத்திருகின்றது.

நவாம்ச பலன்கள் – மிதுனம்


மிதுன நவாம்ச லக்னத்தை கொண்டவர்கள் காண்போரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். காலம் அறிந்து காய் நகர்த்தும் சாமர்த்தியசாலிகள். இவர்கள் செய்யும் செயல்களால் பாராட்டப்படுவார்கள். இசை, இலக்கியம், நாடகம், கதை, கவிதை, காவியம் மற்றும் எழுத்து துறைகளில் ஞானம் மிக்கவர்கள், பிறரைப் போல் கேலியாக நடித்து காட்டுவதில் வல்லவர்கள். கவிபாடும் ஆற்றல் உள்ளவர்கள். கேட்போரை வயப்படுத்தும் பேச்சுத் திறன் வாய்கப்பெற்றவர்கள்.

புதுமைகளும், புரட்சிகளும் இவரதுசொற்களில் தெறிக்கும். சீர்திருத்தம் உடனே தேவை என்று முழங்குவார்கள். இவரது வார்த்தையை பின்பற்ற பெரும் கூட்டமே காத்திருக்கும் என்றாலும் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இருக்காது. தலைமை ஏற்று முன் நடத்தி செல்ல மாட்டார்கள். வெறும் பேச்சோடு சரி. விமர்சனம் செய்வதிலும், விவரமாக கேள்வி கேட்டு மடகுவதிலும் சமர்த்தர்கள். இவர்களிடம் தர்க்கம் செய்பவர்களை தன்னுடைய பேச்சுத் திறமையால் தலைதெறிக்க ஓடச் செய்திடுவார்கள். பட்டி மன்றம், வழக்காடு மன்றம் போன்ற இலக்கிய சர்ச்சைகள் செய்யும் இடங்களில் இவரைக் காணலாம். வாதப் பிரதிவாதம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே.

முன் யோசனை இன்றி முடிவேடுப்பவர்கள். உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நினைபவர்கள். இதனாலேயே இவர் செயல்படுத்தும் செயல்கள் அனைத்தும்இறுதியில் குழப்பத்திலேயே முடியும். பிறர் கையை எதிர்நோக்குவார்கள், மற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு வேறு காரியங்களில் இறங்கி விடுவார்கள். யோசித்து செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் முடிவே இராது. யோசனைக்கு மேல் யோசனை என்று காலம் கடந்த பின்னரே முடிவெடுப்பர். எல்லாம் கை நழுவி பொய் இருக்கும். உதாரணமாக பெண் பார்க்க சென்றால் சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். பெண்ணின் படிப்பு, குனாதிசியங்களில் என்று யோசனையில் இறங்கினால் அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்த பின்னரே முடிவை சொல்வார்கள்.

தந்திரமாக சிரித்து பேசி பழகுவார்கள். மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் குணம் உடையவர்கள்.பெண்களை கண்டால் பேருவகை கொள்வார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். குடும்பத்திற்காக எதையும் செய்வார்கள். வசதி மிக்கவர்களின் தொடர்பு இவருக்கு மிக எளிதாக அமைந்துவிடும். பலர் நிறைந்த அவையில் முன் நிற்பவர்கள் ஆவார்கள். சிற்றின்ப அனுபவம் சிறு வயதிலேயே கிடைக்கும். அத்துடன் கேளிக்கை நடக்கும் இடங்களுக்கு அவ்வப்போது சென்று வருவார்கள். வாகன வசதியும், வீடும் கால காலத்தில் அமையும். ஒரே நேரத்தில் இரண்டு வித வேலை செய்வார்கள். உத்தியோகமும் , வியாபாரமும் சேர்ந்து அமையும். மிதுன நாவம்சத்திருக்கு சூரியன் 1௦ ஆம் இட தொடர்பானால் அரசாங்க தொடர்புகள் மூலம் காண்டிராக்ட், கமிஷன் என சம்பாதிக்கலாம்.

சந்திரன் 1௦ ஆம் இட தொடர்பானால் உணவும், கேளிக்கையும் என உற்சாகமாக பணம் சம்பாதிக்கலாம். செவ்வாய் எனில் சமையல துறை, செக்ஸ் வைத்தியர், கிரிமினல் வக்கீல், உலோக வியாபாரங்கள் போன்ற துறைகளில் உலா வரலாம். புதன் எனில் எழுத்து துறையும், கமிஷன் சார்ந்த துறையும் சிறப்பாக அமையும். குரு எனில் பணம் புழங்கும் வங்கி, வட்டிக்கடை, தங்கம், வெள்ளி வியாபாரங்கள் என தாரளமாக பணம் சேர்க்கலாம். சனி 1௦ ஆம் இட தொடர்பானால் கனரக தொழில்களும், வாகனமும், வனம் சார்ந்த துறைகளிலும் பொருள் ஈட்டலாம். ராகு, கேது பத்தாம் இட தொடர்பு பெற்றால் குருவுக்கு குறிபிட்ட தொழில்களே அமையும்.

நாவம்சதில் மிதுன சூரியன்

ஆகாய கோட்டை கட்டி அதில் அரசராக வாழ்வார்கள். யதார்த்தமாக இருக்க மாட்டார்கள். தனது கற்பனையை தானே நம்பி மகிழ்வார்கள். உடல் நிலையம் ஒத்துழைக்காது. புரியாத தொந்தரவுகளால் மன உளைச்சல் ஏற்படும். மகிழ்ச்சியோ, துக்கமோ, வறுமையோ, கடனோ எதையும் மறைக்க மாட்டார்கள். இதனால் இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விடும்.

ஒன்றையும் உருப்படியாக செய்ய தெரியாது. ஒரே சமயத்தில்.பல வேலைகளை துவக்குவார்கள். தனது தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திரங்கள், ஜோதிடம், கணக்கு போன்றவற்றில் மேன்மையடையலாம். இரட்டை மனப்பான்மையை தவிர்க்க பழக வேண்டும்.

நவாம்சத்தில் மிதுன சந்திரன்

எந்த ஒரு செயல்களிலும் மாற்றத்தை செய்வார்கள். புது புது யுக்திகளை புகுத்துவார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். இலக்கியம் படிக்க பிடிக்கும். துப்பறிவதில் கில்லாடிகள். பல மொழிகளை கற்றுக்கொள்வார்கள். உடனடியாக முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக/பாதகமாக பேசுவார்கள்.

நவாம்சத்தில் மிதுன செவ்வாய்

பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்கள். உடனுக்குடன் பதில் கூறும் திறன் படைத்தவர்கள். உள்ளதை உள்ளபடி கூறாமல் மிகைபடுத்தி பேசுவார்கள். இவர்களிடம் தற்பெருமை பேசுபவர்களை கோபம் கொண்டு அவமானப்படுத்துவார்கள். இவரது வாழ்க்கை ஒருவரது வசதி வாய்ப்புகளை ஒட்டியே அமையும். யாரை ஒட்டி வாழ்ந்தாலும் அவரை மட்டம் தட்ட தயங்க மாட்டார்கள். இதனால் உயர்வும், தாழ்வும் மாறி மாறி ஏற்படும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது போல் ஆகிவிடும்.

உறவுகள் கலகம் ஏற்படும். ரத்த சம்பந்தமான உறவுகள் கலகலப்பாக இருக்காது. வீடு, நிலம் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும். சமாதானதிற்கு இடம் இல்லாமல் போய்விடும். நிறைய பயணங்கள் மேற்கொள்வார்கள். யாருக்கும் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று வருவார்கள். இதனால் நன்மையே ஏற்படும்.

நவாம்சத்தில் மிதுன புதன்

தோல்விகள் வழக்கள் என எதற்கும் கவலைப்படாமல் நிம்மதியாக தூங்க கூடியவர்கள். பதற்றமோ பயமோ இவர்களிடம் இருக்காது. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியம் கொண்டவர்கள். மற்றவர்களால் ஏமாற்றபடுவார்கள். உடன் இருந்தவர்களே இவர்களுக்கு எதிராக கடை போடுவார்கள். ஜாமீன் போட்டாலும் பொறுப்பை ஏற்க அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

கிரிமினல் வக்கீல் ஆகவும் அதே நேரத்தில் ஜீவகாருண்ய சங்கத்திலும் இருப்பார்கள். கடனோ, வரவோ பணம் வந்தால் கண்டபடி செலவு செய்வார்கள். கடன் கட்ட முடியாமல் தடுமாறுவார்கள். ஒரு முறையாவது நீதிமன்றம் செல்ல நேரும்.

நவாம்சத்தில் மிதுன குரு

நம்பிக்கைக்கு ஏற்றவர்கள். அனால் பிறர் செய்த நம்பிக்கை துரோகத்தால் அவதிப்படுவார்கள். பலரை வாழ்வில் ஏற்றி விட்ட எனியாக இருப்பார்கள். உயரே போனவர்களால் தூக்கி வீசப்பட்ட அறிவாளி என்று இவர்களை கூறலாம்.

கலைகளில் மேன்மை உண்டாகும். புது புது நுட்பங்களை கையாளுவார்கள். தொழில் நுட்ப மேதை என்று புகழப்படுவார்கள். பெண் சேர்கையால் சச்சரவுகளும், பொருள் இழப்புகளும் உண்டாகும். ஒரு முறை பெரும் விபத்துக்குள்ளாவார்கள்.

நவாம்சத்தில் மிதுன சுக்கிரன்

தான் சந்தோசப்பட்டால் உடனே இருப்போர் எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்துவார்கள். துயரப்பட்டால் வீட்டையே துக்ககரமாக்குவார்கள். சாதியும், சமயமும், ஆன்மீகமும் பேசுவார்கள், கூடவே சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் என கலைத்துறையிலும் கைதேர்ந்தவர்கள். அரசியலை அலசுவார்கள். இனிமையாக பேசுவார்கள். நாரச நடையிலும் வெளுத்து வாங்குவார்கள். மிதுன நாவம்சதில் சுக்கிரன் இருப்பவர்கள் சகலகலா வல்லவர்கள்.

நவாம்சத்தில் மிதுன சனி

பிறந்ததில் இருந்தே இவர்களின் பெற்றோர்கள் பல சிக்கல்களை சந்திப்பர். குடும்ப சூழ்நிலை காரணாமாக படிப்பை நிறுத்திவிடலாமா? வேலைக்கு சென்று சம்பாதிக்கலாமா? என்ற கேள்விகள் எழும். இந்த பக்குவம் பின் காலத்தில் பயன்படும். காரியத்தில் முழு கருத்தாகவும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமலும், பிறரை இகழாமல் இருக்க வேண்டும் என முழுக்கவனத்துடன் செயல்படுவார்கள். பாதி வயதுக்கு மேல் முன்னேற்றம் காண்பார்கள். சுய சம்பாத்தியதால் நிலையான சொத்துகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

நவாம்ச பலன்கள் – கடகம்


அவசரபடாத நிதானமான குணம் கொண்டவர்கள். தன் எதிர்பார்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகுவார்கள்.உயர்கல்வியில் ஊசலாட்டம் வரும். தொழிற்பயிற்சிகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். சம்மந்தமற்ற வேளைகளில் ஈடுபடநேரும். உடன்பிறந்தோர் வகையில் பெரிய உதவிகள் கிடைக்காது. எந்த சிக்கலையும் தீர்க்க முன்வருவார்கள். விளையாட்டுதுறை, போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு இருக்கும். பல நிகழ்சிகளை நடத்தி எளிதில் பிறரை மலைக்க வைத்து விடுவார்கள்.

கையிருப்பு கரைந்து கொண்டே இருக்கும். குடும்பத்தால் கடன் வந்தடையும். சொத்து என்று பார்த்தல் காலாகாலத்தில் வந்து சேரும். அதுபோலவே நில்லாமல் போகும். எனினும் மீண்டும் அவற்றினை ஏற்படுத்தி காட்டுவார்,

தொழிலைப் பொறுத்தவரை பொதுவாக உணவு, ரசாயனம் நன்மை தரும் தொழில்கள் ஆகும். சரக்குகளை அங்கும் இங்கும் அனுப்பும் முகமை தொழில்கள் பலன் தரும். சினிமா, அரசியல் நீண்ட கஷ்டத்திற்கு பிறகு பெயர் தரும்.

கடக நவாம்ச பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். சுறுசுறுப்பும் திறமையும் மிக்கவர்கள். குடும்ப பொறுப்பை உணர்ந்தவர்கள். தரமான பொருள்களை வாங்குவார்கள்.கடக நாவம்ச ஆண்கள் மனைவியின் கனவுகளை நனவாக்க காலம் முழுவதும் முயற்சி செய்வார்கள். அவற்றில் பல முடியாமல் போக வாய்ப்பு உண்டு. கணவன், மனைவி இருவரில் ஒருவரின் பெற்றோர் உடன் இருக்கும் படி இருக்கும். இது நல்லதே.

நவாம்சத்தில் கடக குரு

இன உணர்வு மிக்கவர்கள், பெற்றோர் முன் பணிவும், அடக்கமும் காட்டுவார்கள். அடுத்தவர்கள் எல்லாம் துச்சமே. தனக்கு தெரியாமல் யாரும், எதையம் செய்யக் கூடாது என்று நினைபவர்கள். தன்னை நம்பி நிற்பவர்களுக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள். கொள்கைகளுக்கு என்று இல்லாமல் வேண்டியவர்களுகாக கட்சி மாறும் அபிமானிகள். ஆன்மீக நம்பிக்கையுடன் பிற மத நம்பிக்கையும் சேரும். தேகம் போகத்தை விரும்பும். ரகசியமாக தனது இச்சைகளை தீர்த்துக் கொள்வார்கள். பயணங்கள் பல இருக்கும் அதனால் பயனும் இருக்கும்.

நவாம்சத்தில் கடக சந்திரன்

தரித்திரத்தில் இருந்து மீண்டு சரித்திரம் படைபவர்கள். இவர்களை கைதூக்கி விட பலர் முயற்சி செய்வர். கமிஷன் வாங்கும் வீட்டு தரகராக இருந்து பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக மிளிரும் நபர்கள் இவர்களே. மக்களுடன் நேரடி தொடர்புடைய உணவு, உடை, வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள் போன்றவை வருமானத்தை பெருகும்.

இவர்கள் திருமணம் ஒரு பரபரப்பான நிகழ்வாக அமையும். அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ள திருமணம் அமைய வாய்ப்பு அதிகம்.

நவாம்சத்தில் கடக சனி

சாண் ஏற முழம் சறுக்கும். தாய், தந்தையால் பெரிதாக உதவிகள் இல்லை. திருமணத்தாலும் பெரிய சந்தோசம் இல்லை. தன் அந்தஸ்துக்கு குறைதவர்களுடன் வாழும் நிலை உருவாகும். உறவுகள் நாலாதிசையிலும் சிதறிவிடும். ஏக்கம் மிக்க வாழ்கையை ஏற்க வேண்டி வரும்.

நவாம்சத்தில் கடக ராகு

பிரமுகராவார். பிரபல்யம் உண்டாகும். நாசம் அறிந்தவர்கள். எல்லா செய்திகளையும் எடுத்துரைப்பர். இவர்களுக்கு தெரியாததே இல்லை என்று பிறர் நினைக்கும் அளவிற்கு வாழ்வார். வெகு பிரயாணங்கள் உண்டு. கல்வி துறையில் புகழ் பெருகும். பலரது பணத்தை முதலீட்டில் போட்டு நிறுவனங்களை நிறுவும் வாய்ப்பும் இருக்கிறது, ஒவ்வாமை நோய் ஓயாமல் தொல்லை தரும்.

நவாம்சத்தில் கடக கேது

இவர்களை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. எதிலும் உடனடி பதில் கூறி அசத்துவார்கள். எப்படி என வியக்க வைப்பார்கள். பாராட்டுகள் தொடரும். சினிமா, சங்கீதம் என மேடை வாய்புகள் கிடைக்கும். நினைத்தே பார்த்திராத அளவுக்கு விளம்பரம் கிடைக்கும். இல்லறம் ஏனோ தானோ என்று நடைபெறும்.

நவாம்ச பலன்கள் – சிம்மம்


சுயமரியாதை கொண்டவர். தன்னை உயர்வாக கருதுவார். தனக்கு கீழ் உள்ளவர்களை உதாசீனப்படுத்துவார். மேம்பட்டவர்களுடன் சேர்ந்தால் தானும் அதுபோல ஆக வேண்டும் என்று முயற்சி செய்வார். அரசியல் தொடர்புகள் உண்டாகும். அரசாங்க பதவியும் உண்டாகும். தனது வயதுக்கும், தகுதிக்கும் மேம்பட்ட பதவிகளை அடைய முயற்சி செய்வார்கள். கௌரவமான பதவியை அடைய கௌரவ குறைச்சலான வழிகளையும், ஆட்களையும் அணுகும் குணம் கொண்டவர்.

இந்த ராசி பெண்களுக்கு ஆண்களைப் போன்ற பாவனை இருக்கும். படிப்பு, செல்வாக்கு அடைவது உறுதி. அகம்பாவம் இருந்தாலும், பெருந்தன்மையும் இருக்கும். சிறிய தவறுகளை கண்டுகொள்ள மாட்டார்.

நவாம்சத்தில் சிம்ம சூரியன்

தனித்தன்மை வாய்ந்தவர். பலர் முன்னிலையில் பிரகாசிப்பவர். தனக்கு பிரியமான விசயங்களையே யோசித்துக் கொண்டிருப்பார். சிறு செயல்களில் விருப்பம் இருக்காது. மேலதிகாரம் செய்வார். வேலை முடிந்ததும் உரிய கூலியை உடனே கொடுக்க மாட்டார்.

நவாம்சத்தில் சிம்ம சந்திரன்

முதல்வர். எங்கும், எதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவார். இவரது உத்தரவுக்கு பலரும் காத்திருப்பர். பொறுமையும், விடாப்பிடியும் இவருக்கு உறுதுணை. போட்டியில் வெல்வார். போட்டியாளர் இல்லாத சமயங்களில் சோம்பேறியாக காலம் கழிப்பார். ஆசைபட்டதை அடைந்தே தீருவார். ஒரு பொருளின் மீதோ, பதவியின் மீதோ கண்வைத்து வலம் வருவார். அவற்றை அடைந்தே தீருவார். அலட்சியமாக பேசுவார். உடுத்திய துணி கசங்காமல் வேலை செய்வார். தனது பெயரை விளம்பரப்படுத்துவார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு தாராள உதவிகள் உபசரணைகள் செய்வார்.

நவாம்சத்தில் சிம்ம செவ்வாய்

தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆத்திரப்படுவார். இருப்பதை தூக்கி எறிவார். நிரந்தர வருமானத்தை இழப்பார். காதலை இழப்பார். நட்பை பிரிவார். உற்றம் சுற்றதிற்காக உழைப்பவர். அடுத்தவர்களுக்காக தயங்காமல் செலவு செய்வார். சிலருடைய எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக பயன்பாடுவார். உதவியை எதிர்பார்க்கும் உறவுகள் இவரின் கண்டிப்புக்கு அஞ்சி விலகி ஓடுவார்கள்.