கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த முறை நன்மை
அளிக்கும் இடமான பதினொன்றாம் இடத்தில் உச்ச நிலையில் இருந்த குருபகவான்
தற்போது அதிலிருந்து மாறி செலவுகளையும்,
விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.
மேம்போக்காகப் பார்த்தால் நல்ல இடத்தில் இருந்து கெடுதல் தரும் இடத்திற்கு
குருபகவான் மாறுவது போலத் தோன்றினாலும் உபயராசிகள் எனப்படும் மிதுனம்,
கன்னி, தனுசு,
மீனம் ராசிகளுக்கு மறைவு ஸ்தானங்களில் குரு இருந்தால்தான் நன்மைகளைச்
செய்வார் என்ற விதிப்படி கன்னி ராசிக்கு சென்ற வருடத்தை விட இந்த வருடமே
குருபகவானால்
சிறப்புக்கள் சேரும்.
குருப்பெயர்ச்சிப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும்
துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன்
என்பது உங்களுக்கு
தெரியும் என்பதால் இதற்குமேல் குருபகவானின் நிலை பற்றி நான் உங்களுக்கு
விளக்கத் தேவையில்லை.
அதேநேரத்தில் சென்ற வருடம் பதினொறாமிடத்தில் கன்னிக்கு உச்சமடைந்தும், மீன
ராசிக்கு ஐந்தாமிடத்தில் உச்சமடைந்தும் வலுவான நிலையில் இருந்த குருபகவான்
தன்னை
ராசிநாதனாகக் கொண்ட மீன ராசிக்குக் கூட நன்மைகளை செய்யவில்லை என்பதும்
கன்னி ராசிக்கும் மிகப்பெரிய லாபங்கள் எதுவும் சென்ற வருடத்தில்
கிடைக்கவில்லை என்பதும்
கண்கூடாகத் தெரிந்த பலன்தான்.
அடுத்து சுபக்கிரகங்கள் விரயஸ்தானம் எனப்படும்
பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச்செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும்
என்பதாலும் செலவு செய்துதான் மனநிறைவை
அனுபவிக்க முடியும் என்பதாலும் செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க
முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு
நன்மைகளையே செய்யும்.
ஆகவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் கன்னி ராசிக்காரர்களின்
குடும்பங்களில் திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான
பூப்புனித நீராட்டு விழா
போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன்
வருவதற்கான பிரசவச்செலவுகள் போன்ற சுபகாரியச் செலவுகள் இந்த வருடம்
இருக்கும்.
அடுத்து குருபகவான் பார்க்கும் இடங்கள்
வலுப்பெற்று பலன்களைச் செய்யும் என்பதால் குருபகவானின் பார்வையால் நான்கு,
ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப்பெற்று அந்த
பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின்
பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் கன்னி
ராசிக்கு
மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன்
போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட்
வாங்குவீர்கள்.
இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின்
ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க
இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும்
படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.
குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக
எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி
விரோதியாகும்
வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்
குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ
காரணமாக இருக்கும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
நீண்டகால
குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு
வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி
அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில்
போன்றவற்றிற்காகவோ கடன் வாங்க நேரிடலாம்.
கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது
நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்
வாங்க வேண்டாம்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம்.
வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல்
வாங்கிவிட்டு பின்னால்
கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும்
உஷாராக இருங்கள்.
எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு
சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்
தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள்
மேன்மை அடைவார்கள்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும்
எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக
பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று
முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில கன்னி ராசிக்காரர்கள்,
அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம்
தரும் பதவி
மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து
நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள்
சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள்,
சொந்தத் தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த
நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த
பிரதிபலன் கிடைப்பது
கஷ்டமாக இருக்கும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம்
இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து
உங்களை
சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம்
சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.
பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு
விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக்
குருப்பெயர்ச்சியால் அடிக்கடி பயணம் செய்ய
வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு
உள்ளது.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப
வேண்டாம். தொழில்
ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு
செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப்
பயணங்களும் உண்டு.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில்
பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக
அரசுத்
துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால்
அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம்,
வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல்,
வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள்
ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள்
எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும்
என்பதால் கன்னி ராசிக்காரர்கள் இந்த வாய்ப்பினைப்
பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:
மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும்
பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள்.
இந்தக்
குருப்பெயர்ச்சியால் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள்
சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான
துறைகளிலும், அழகு, ஆடம்பரம்
சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக
விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு:
வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால்
நன்மைகள் உண்டாகும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.
குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு
நடக்கும். என்னதான்
பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே
எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால்
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள
சிலருக்கு அதிகாரப்
பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க
வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில்
இருப்பவருக்கு
அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்
கிடைக்க சிரமங்கள் இருக்கும்.
பரிகாரங்கள்:
No comments:
Post a Comment