தசா புத்தி சிறு விளக்கம்

திசை என்பது நவகிரகங்களும் நம்மை ஆட்கொள்ளும் அல்லது ஆட்டிப்படைக்கும் காலம் எனலாம். இந்த காலம் கிரகத்திற்கு கிரகம் வேறுபடும்.பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்க்கும் அதனுடைய திசை காலம் வேறுபடும்.

இந்த காலம் மனிதனின் ஆயுள் அடிப்படையில் நம் முன்னோர்கள் வகுத்தனர். அதாவது 120 ஆண்டுகள். இப்பொழுது யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை என்றாலும் சராசரியான மனிதனின் ஆயுள் 120 என்ற அடிப்படையில் வகுத்துள்ளனர். அது எப்படியெனில்

சூரியனுடைய திசை காலம்- 6 வருடம்

சந்திரன்             "        - 10 வருடம்

செவ்வாய்          "         - 7 வருடம்

ராகு                "          - 18 வருடம்

குரு                "          - 16 வருடம்

சனி                "          - 19 வருடம்

புதன்               "          - 17 வருடம்

கேது               "          - 7  வருடம்

சுக்கிரன்           "          - 20 வருடம்

                            _____________________
ஆக மொத்தம்              -  120 வருடங்கள்
                            ______________________

இது நவகிரகங்களின் தசா காலம் ஆகும். அனைவருக்கும் ஆரம்ப திசை சூரிய திசையாக இருக்காது. பின் நமக்கு உரிய ஆரம்ப திசையை எப்படி கண்டு பிடிப்பது எனக்கேட்டால், நமது நட்சத்திரத்தை கொண்டு கண்டறியலாம்.

அது எப்படியெனில், ஒவ்வொரு கிரகத்திற்க்கும் 3 நட்சத்திரம் வீதம் மொத்தம் 9 கிரகத்திற்க்கும் 27 நட்சத்திரங்களை பிரித்துள்ளனர். அந்த 3 நட்சத்திரத்திற்கும் அந்த குறிப்பிட்ட கிரகம் தான் அதிபதி.

அஸ்வினி, மகம், மூலம் -கேது

பரணி, பூரம், பூராடம்  - சுக்கிரன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்- சூரியன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம்- சந்திரன்

மிருகசீரிஷம்,சித்திரை, அவிட்டம் - செவ்வாய்

திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் சதயம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை ராகு திசை. அதன் பின் குரு திசை,சனி திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ அதற்கு அடுத்ததில் இருந்து தொடரும்.

சரி சதயம் என்று கூறிவிட்டோம், ஆரம்ப திசை ராகு என தெரிந்தது,ராகு திசை 18 வருடம்,அந்த 18 வருடமும் அப்படியே குழந்தைக்கு முதலில் இருந்து ஆரம்பம் ஆகுமா என கேட்டால் இல்லை.

குழந்தை கர்பத்தில் இருக்கும்போதே இந்த திசை ஆரம்பித்துவிடும். ஆகையால் அது எவ்வளவு சென்றது என கணக்கிட வேண்டும். அந்த கணிதம் தான் கர்ப செல் இருப்பு.

சரி 18 வருடம் எனில், 10 மாதம் கர்பத்தில் போக மீதம் உள்ள வருடத்தை அதாவது 17 வருடம் 2 மாதத்தை அப்படியே போட்டுக்கொள்ளலாமே அதற்கு எதற்கு கணக்கு எனக்கேட்கலாம்.

அதாவது ஒருவருக்கு ராகு திசை ஆரம்பம் எனில் போன ஜென்மத்தில் அவர் ராகு திசையில் இறந்திருப்பார், அப்போது எத்தனை வருடம் ராகு திசை சென்றது என கண்டறியவே அந்த கணக்கு.

புத்தி என்பது, ஒவ்வொரு திசையிலும் நவகிரகங்களும் தன் ஆதிக்கத்தை செலுத்தும். உதாரணம்,ராகு திசை 18 வருடம் எனில், அதில் வரும் புத்திகளாவன: ராகு புத்தி, குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி, சுக்கிர புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி, செவ்வாய் புத்தி.

இதில் இன்னும் அந்தரம், சூட்சசம் என்று உண்டு, அதிலும் நவகிரகங்களும் மேற்கூறியது போல இடம் பெறும்.

No comments:

Post a Comment